Top Story
அரசியலமைப்பின் 121(1)ஆம் உறுப்புரையின் கீழ் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட “அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தம்” மற்றும் “நீதித்துறை திருத்தம்” ஆகிய சட்டமூலங்கள் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு நாடாளுமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அரசியலமைப்பின் 83ஆவது உறுப்புரையின் ஏற்பாடுகளுக்கு அமைய, 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கோ அல்லது அதன் எந்தவொரு பகுதிக்கும் மக்கள் தீர்ப்பொன்றின் மூலம் அங்கீகாரம் பெற வேண்டிய அவசியம் இல்லை என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

மேலும், 22ஆவது திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாவது வாசகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில சொற்றொடர்களை மாற்றியமைக்க வேண்டும் எனவும், சட்டம் நடைமுறைக்கு வரும் போது பிரதம நீதியரசராக பதவி வகிக்கும் நபருக்கு ஆறு வருட பதவிக்கால வரம்பு பொருந்தாது என்ற ஏற்பாட்டை சேர்க்க வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

அதேவேளை, “நீதித்துறை திருத்த” சட்டமூலத்தின் ஏற்பாடுகள் அரசியலமைப்புக்கு முரணானவை அல்ல எனவும், அதனை நாடாளுமன்றத்தில் எளிய பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் எனவும் உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

உயர் நீதிமன்றத்தின் முழுமையான தீர்ப்பு இன்றைய நாடாளுமன்ற கூட்ட நடவடிக்கைகளின் அதிகாரப்பூர்வ அறிக்கையில் வெளியிடப்படும் என சபாநாயகர் அறிவித்துள்ளார்.
விபரங்களுக்கு
General22 September 2026
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை – உயர் நீதிமன்றம்
Video of the Day
Latest TV News Bulletin
Most Top News

2027ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

General 22 September 2026
2027ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

இலங்கை – கட்டார் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த கவனம்!

General 22 September 2026
இலங்கை – கட்டார் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த கவனம்!

யாழ். செம்மணி ஏ9 வீதியில் கொடூர விபத்து : சிற்றூந்து - டிப்பர் மோதி மூவர் படுகாயம்!

General 22 September 2026
யாழ். செம்மணி ஏ9 வீதியில் கொடூர விபத்து : சிற்றூந்து - டிப்பர் மோதி மூவர் படுகாயம்!

இரு ஆசனப்பட்டிகள் இருந்தால் இருவர் மட்டுமே பயணிக்கலாம்: மீறினால் நடவடிக்கை காவல்துறை எச்சரிக்கை!

General 22 September 2026
இரு ஆசனப்பட்டிகள் இருந்தால் இருவர் மட்டுமே பயணிக்கலாம்: மீறினால் நடவடிக்கை காவல்துறை எச்சரிக்கை!

சிவராசா அனோஜனின் உயிரைப் பாதுகாக்க பொது மன்னிப்பு வழங்குக: இலங்கை ஊடக அமைப்புகள் கூட்டுக் கோரிக்கை!

General 22 September 2026
சிவராசா அனோஜனின் உயிரைப் பாதுகாக்க பொது மன்னிப்பு வழங்குக: இலங்கை ஊடக அமைப்புகள் கூட்டுக் கோரிக்கை!

அப்புத்தளையில் கடும் பனிமூட்டம் – வாகன சாரதிகளுக்கு காவல்துறை அவசர எச்சரிக்கை!

General 22 September 2026
அப்புத்தளையில் கடும் பனிமூட்டம் – வாகன சாரதிகளுக்கு காவல்துறை அவசர எச்சரிக்கை!
International News

திஷா சாலியன் மரண வழக்கில் புதிய திருப்பம் – 5 ஆண்டுகளுக்குப் பிறகு சி.பி.ஐ. அதிரடி நடவடிக்கை!

International 22 September 2026
திஷா சாலியன் மரண வழக்கில் புதிய திருப்பம் – 5 ஆண்டுகளுக்குப் பிறகு சி.பி.ஐ. அதிரடி நடவடிக்கை!

ரஷ்யாவின் டீசல் தொழில் பாதிப்பு – ட்ரம்ப் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

International 22 September 2026
ரஷ்யாவின் டீசல் தொழில் பாதிப்பு – ட்ரம்ப் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

International 22 September 2026
தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஹூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்து!

International 22 September 2026
ஹூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்து!

விரிவுபடுத்தப்பட்ட காமராஜர் காலை உணவுத் திட்டம்: சென்னையில் முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைக்கிறார்!

International 22 September 2026
விரிவுபடுத்தப்பட்ட காமராஜர் காலை உணவுத் திட்டம்: சென்னையில் முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைக்கிறார்!

ரஷ்ய நாடாளுமன்றத் தேர்தலில் புடினின் கட்சி மீண்டும் பெரும்பான்மையுடன் வெற்றி

International 22 September 2026
ரஷ்ய நாடாளுமன்றத் தேர்தலில் புடினின் கட்சி மீண்டும் பெரும்பான்மையுடன் வெற்றி

படகை மோதிய சரக்கு கப்பல் : சிங்கப்பூர் நீரிணையில் பாரிய விபத்து !

International 21 September 2026
படகை மோதிய சரக்கு கப்பல் : சிங்கப்பூர் நீரிணையில் பாரிய விபத்து !

ஜப்பானை உலுக்குகிறது 'துஜுவான்' புயல் - 19 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வெளியேற்ற உத்தரவு!

International 21 September 2026
ஜப்பானை உலுக்குகிறது 'துஜுவான்' புயல் - 19 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வெளியேற்ற உத்தரவு!

இரட்டைத் தலைகளுடன் பொறித்த அரிய ஆமைக்குஞ்சு - அனைவரையும் வியக்க வைக்கும் சம்பவம்!

International 21 September 2026
இரட்டைத் தலைகளுடன் பொறித்த அரிய ஆமைக்குஞ்சு - அனைவரையும் வியக்க வைக்கும் சம்பவம்!

அமெரிக்காவுக்கு பயணமாகிறார் சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங்!

International 21 September 2026
அமெரிக்காவுக்கு பயணமாகிறார் சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங்!

"கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் - முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்" : உதயநிதி ஸ்டாலின் அதிரடிப் பேச்சு!

International 21 September 2026
"கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் - முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்" : உதயநிதி ஸ்டாலின் அதிரடிப் பேச்சு!

சிரியாவின் ஆயுதக் கிடங்கில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த வெடிப்புச் சம்பவங்கள் : பொதுமக்கள் வெளியே வரத் தடை!

International 21 September 2026
சிரியாவின் ஆயுதக் கிடங்கில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த வெடிப்புச் சம்பவங்கள் : பொதுமக்கள் வெளியே வரத் தடை!

2 மாத கடுமையான பயிற்சி நிறைவு – அதிகாரபூர்வமாக பட்டம் பெற்ற 4 ரோபோக்கள்!

International 21 September 2026
2 மாத கடுமையான பயிற்சி நிறைவு – அதிகாரபூர்வமாக பட்டம் பெற்ற 4 ரோபோக்கள்!

AI தொழில்நுட்ப உதவியுடன் 19 ஆண்டுகளுக்குப் பிறகு சிக்கிய தலைமறைவு குற்றவாளி!

International 21 September 2026
AI தொழில்நுட்ப உதவியுடன் 19 ஆண்டுகளுக்குப் பிறகு சிக்கிய தலைமறைவு குற்றவாளி!

நச்சு வைக்கப்பட்டதா? ங்கோரோங்கோரோ 10 சிங்கங்கள் உயிரிழப்பு

International 21 September 2026
நச்சு வைக்கப்பட்டதா? ங்கோரோங்கோரோ 10 சிங்கங்கள் உயிரிழப்பு
More News
General22 September 2026

சிவராசா அனோஜன் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞரான சிவராசா அனோஜன் தொடர்பாக எடுக்கக்கூடிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராயும் கலந்துரையாடல், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நேற்று (21) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.இதன்போது, சிவராசா அனோஜன் தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத்தில் எடுக்கக்கூடிய இராஜதந்திர மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டதுடன், குறித்த இளைஞரின் உயிரைப் பாதுகாப்பதற்காக எடுக்கக்கூடிய எதிர்கால நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.மேலும், இது தொடர்பாக சவூதி அரேபியாவின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் அவசியமான இராஜதந்திரத் தலையீடுகளை மேற்கொண்டு, எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் தொடர்ச்சியான தலையீட்டை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பு மற்றும் நலன்புரி நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் செலுத்தும் கவனத்தை மேலும் வலியுறுத்திய ஜனாதிபதி, இந்தச் சம்பவம் தொடர்பில் எடுக்கக்கூடிய அனைத்து நடவடிக்கைகள் குறித்தும் சம்பந்தப்பட்ட அமைச்சுகள் மற்றும் நிறுவனங்களுக்கு இடையில் நெருக்கமான ஒருங்கிணைப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.இந்த கலந்துரையாடலில் பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி, மேல் மாகாண ஆளுநர் ஹனீஃப் யூசுப், சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் முனீர் முழப்பர், வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துய்யகொந்தா, சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்க ஆகியோருடன், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் அதிகாரிகள் உட்பட பலர் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

விபரங்களுக்கு
சிவராசா அனோஜன் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை!
General22 September 2026

வங்காள விரிகுடாவில் உருவானது தாழமுக்கம்: 100 மில்லிமீற்றர் வரை பலத்த மழை!

இலங்கைக்கு வடகிழக்கே வங்காள விரிகுடா கடற்பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்தம், தாழமுக்கமாக உருவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த தாழமுக்கம் அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து, ஆழ்ந்த தாழமுக்கமாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இந்த தாழமுக்கத்தால் இலங்கைக்கு நேரடி பாதிப்பு ஏற்படாது என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை, தாழமுக்கத்தை நோக்கி வீசும் காற்றின் தாக்கத்தால் நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் மழை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி, மேல், சபரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் இன்றைய தினம் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஊவா மாகாணம் மற்றும் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பிறகு மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுகள், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள், மற்றும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை, மாத்தறை மாவட்டங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40-50 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, நுவரெலியா, இரத்தினபுரி, களுத்துறை, கண்டி, கேகாலை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களுக்குட்பட்ட 12 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

விபரங்களுக்கு
வங்காள விரிகுடாவில் உருவானது தாழமுக்கம்: 100 மில்லிமீற்றர் வரை பலத்த மழை!
General22 September 2026

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம்: உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் இன்று நாடாளுமன்றத்தில் அறிவிப்பு!

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன இன்று நாடாளுமன்றத்தில் அறிவிக்கவுள்ளார்.உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் சபாநாயகரிடம் நேற்று கையளிக்கப்பட்டதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, குறித்த வியாக்கியானம் தொடர்பான அறிவிப்பை சபாநாயகர் இன்று நாடாளுமன்றத்தில் வெளியிடவுள்ளார்.இதேவேளை, இலங்கை பட்டய ஊடகத் தொழில்சார் நிபுணர்கள் நிறுவன சட்டமூலத்தை இந்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்காதிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.குறித்த சட்டமூலம் தொடர்பான இரண்டாம் வாசிப்பு விவாதம் நாளை முற்பகல் 11.30 முதல் மாலை 5 மணி வரை நடைபெற முன்னதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், பல ஊடக அமைப்புகள் எதிர்ப்புகளை வெளியிட்டுள்ள நிலையில், பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி தலைமையிலான நாடாளுமன்ற அலுவல்கள் குழு, சட்டமூலம் மீதான விவாதத்தை காலவரையின்றி ஒத்திவைக்கத் தீர்மானித்துள்ளது.இதற்குப் பதிலாக, விவாதிக்கத் திட்டமிடப்பட்டிருந்த ஏற்றுமதி விவசாய ஊக்குவிப்பு சட்டமூலம் நாளை விவாதிக்கப்படவுள்ளது. அத்துடன், பெற்றோலிய வளங்கள் சட்டத்தின் கீழான கட்டளை இன்று விவாதிக்கப்படவுள்ளது.இதேவேளை, மின்சாரக் கட்டணங்கள் தொடர்பில் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 17 ஆயிரத்து 213 மில்லியன் ரூபாய் நிதி மானியத்தை வழங்குவதற்கான குறைநிரப்புப் பிரேரணை இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.இதனிடையே, அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதம் எதிர்வரும் 24 மற்றும் 25ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. எதிர்வரும் 24ஆம் திகதி நாடாளுமன்றத்திற்கு அருகில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நடத்துவதற்கும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம்: உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் இன்று நாடாளுமன்றத்தில் அறிவிப்பு!
General22 September 2026

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள்: பிரதான வழக்கின் தீர்ப்பு இன்று!

2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில், நௌஃபர் மௌலவி உள்ளிட்ட 24 சந்தேகநபர்களுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளது.23 ஆயிரத்து 270 குற்றச்சாட்டுகளின் கீழ் குறித்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.சுமார் ஐந்து ஆண்டுகளாக இடம்பெற்ற நீண்டகால விசாரணையின் பின்னர், கடந்த ஆகஸ்ட் 24ஆம் திகதி வழக்கு விசாரணைகள் நிறைவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்குவதற்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய விசேட ஆயம் தீர்மானித்துள்ளது.நவரத்ன மாரசிங்க, இராமநாதன் கண்ணன் மற்றும் சுஜீவ நிஷங்க ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் ஆயம் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.இந்த வழக்கில் அரசுத் தரப்பில் இரண்டாயிரத்து 309 சாட்சியாளர்கள் பெயரிடப்பட்டிருந்தனர்.வழக்கு விசாரணைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது சந்தேகநபர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் சந்தேகநபர்கள் காவல்துறையினரிடம் வழங்கிய 10 வாக்குமூலங்களை சாட்சியங்களாக ஏற்றுக்கொள்ள முடியும் என நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.அத்துடன், தாக்குதல்களில் உயிரிழந்தவர்கள் தொடர்பான அரச பகுப்பாய்வாளர் அறிக்கைகள், மரபணு (DNA) அறிக்கைகள் மற்றும் சட்ட மருத்துவ அதிகாரிகளின் அறிக்கைகளும் அரசுத் தரப்பினால் நீதிமன்றத்தில் சாட்சியங்களாகச் சமர்ப்பிக்கப்பட்டன.மேலும், வெடிபொருட்கள், வெடிபொருட்களைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்கள், வாள்கள் மற்றும் துப்பாக்கிகள் உள்ளிட்ட 2 ஆயிரத்து 76 வழக்குப் பொருட்களும் அரசுத் தரப்பினால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் உள்ள தேவாலயங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகளை இலக்குவைத்து நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களுக்குச் சதி செய்தமை, உதவியமை மற்றும் உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபரால் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.நௌஃபர் மௌலவி என அழைக்கப்படும் மொஹமட் இப்ராஹிம் மொஹமட் நௌஃபர் மற்றும் கபூர் மாமா என்று அழைக்கப்படும் மொஹமட் சரீஃப் ஆதம் லெப்பை உள்ளிட்ட 24 பேருக்கு எதிராக இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள்: பிரதான வழக்கின் தீர்ப்பு இன்று!
General21 September 2026

இரகசிய தகவலால் அம்பலமான போதைப்பொருள் கடத்தல்: மாத்தறையில் பரபரப்பு!

மாத்தறை - வல்கம பகுதியில் 21 கிலோகிராம் "ஐஸ்" ரக போதைப்பொருளுடன் பெண் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. காவல்துறையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இது தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விபரங்களுக்கு
இரகசிய தகவலால் அம்பலமான போதைப்பொருள் கடத்தல்: மாத்தறையில் பரபரப்பு!
International News

திஷா சாலியன் மரண வழக்கில் புதிய திருப்பம் – 5 ஆண்டுகளுக்குப் பிறகு சி.பி.ஐ. அதிரடி நடவடிக்கை!

International 22 September 2026
திஷா சாலியன் மரண வழக்கில் புதிய திருப்பம் – 5 ஆண்டுகளுக்குப் பிறகு சி.பி.ஐ. அதிரடி நடவடிக்கை!

ரஷ்யாவின் டீசல் தொழில் பாதிப்பு – ட்ரம்ப் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

International 22 September 2026
ரஷ்யாவின் டீசல் தொழில் பாதிப்பு – ட்ரம்ப் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

International 22 September 2026
தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஹூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்து!

International 22 September 2026
ஹூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்து!

விரிவுபடுத்தப்பட்ட காமராஜர் காலை உணவுத் திட்டம்: சென்னையில் முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைக்கிறார்!

International 22 September 2026
விரிவுபடுத்தப்பட்ட காமராஜர் காலை உணவுத் திட்டம்: சென்னையில் முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைக்கிறார்!

ரஷ்ய நாடாளுமன்றத் தேர்தலில் புடினின் கட்சி மீண்டும் பெரும்பான்மையுடன் வெற்றி

International 22 September 2026
ரஷ்ய நாடாளுமன்றத் தேர்தலில் புடினின் கட்சி மீண்டும் பெரும்பான்மையுடன் வெற்றி

படகை மோதிய சரக்கு கப்பல் : சிங்கப்பூர் நீரிணையில் பாரிய விபத்து !

International 21 September 2026
படகை மோதிய சரக்கு கப்பல் : சிங்கப்பூர் நீரிணையில் பாரிய விபத்து !

ஜப்பானை உலுக்குகிறது 'துஜுவான்' புயல் - 19 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வெளியேற்ற உத்தரவு!

International 21 September 2026
ஜப்பானை உலுக்குகிறது 'துஜுவான்' புயல் - 19 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வெளியேற்ற உத்தரவு!

இரட்டைத் தலைகளுடன் பொறித்த அரிய ஆமைக்குஞ்சு - அனைவரையும் வியக்க வைக்கும் சம்பவம்!

International 21 September 2026
இரட்டைத் தலைகளுடன் பொறித்த அரிய ஆமைக்குஞ்சு - அனைவரையும் வியக்க வைக்கும் சம்பவம்!

அமெரிக்காவுக்கு பயணமாகிறார் சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங்!

International 21 September 2026
அமெரிக்காவுக்கு பயணமாகிறார் சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங்!

"கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் - முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்" : உதயநிதி ஸ்டாலின் அதிரடிப் பேச்சு!

International 21 September 2026
"கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் - முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்" : உதயநிதி ஸ்டாலின் அதிரடிப் பேச்சு!

சிரியாவின் ஆயுதக் கிடங்கில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த வெடிப்புச் சம்பவங்கள் : பொதுமக்கள் வெளியே வரத் தடை!

International 21 September 2026
சிரியாவின் ஆயுதக் கிடங்கில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த வெடிப்புச் சம்பவங்கள் : பொதுமக்கள் வெளியே வரத் தடை!

2 மாத கடுமையான பயிற்சி நிறைவு – அதிகாரபூர்வமாக பட்டம் பெற்ற 4 ரோபோக்கள்!

International 21 September 2026
2 மாத கடுமையான பயிற்சி நிறைவு – அதிகாரபூர்வமாக பட்டம் பெற்ற 4 ரோபோக்கள்!

AI தொழில்நுட்ப உதவியுடன் 19 ஆண்டுகளுக்குப் பிறகு சிக்கிய தலைமறைவு குற்றவாளி!

International 21 September 2026
AI தொழில்நுட்ப உதவியுடன் 19 ஆண்டுகளுக்குப் பிறகு சிக்கிய தலைமறைவு குற்றவாளி!

நச்சு வைக்கப்பட்டதா? ங்கோரோங்கோரோ 10 சிங்கங்கள் உயிரிழப்பு

International 21 September 2026
நச்சு வைக்கப்பட்டதா? ங்கோரோங்கோரோ 10 சிங்கங்கள் உயிரிழப்பு
Sports Stories
Explore More
இலங்கையை வீழ்த்தி தங்கம் வென்றது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி!

இலங்கையை வீழ்த்தி தங்கம் வென்றது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி!

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கை மகளிர் அணியை 147 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளது.நிஷின் (Nisshin) மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய மகளிர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 216 ஓட்டங்களை குவித்தது.இந்திய அணி சார்பில் அபாரமாக துடுப்பெடுத்தாடிய ஸ்மிருதி மந்தனா 45 பந்துகளில் 79 ஓட்டங்களையும் ஷஃபாலி வெர்மா 29 பந்துகளில் 48 ஓட்டங்களையும் பெற்றனர். இறுதிவரை ஆட்டமிழக்காமல் அதிரடி காட்டிய ரிச்சா கோஷ் 22 பந்துகளில் 49 ஓட்டங்களை பெற்றார்.

விபரங்களுக்கு
சர்வதேசப் போட்டிகளிலிருந்து மெஸ்ஸி ஓய்வு : உணர்ச்சிபூர்வமாக அறிமுகமான சிறப்பு ஜெர்சி!

சர்வதேசப் போட்டிகளிலிருந்து மெஸ்ஸி ஓய்வு : உணர்ச்சிபூர்வமாக அறிமுகமான சிறப்பு ஜெர்சி!

அர்ஜென்டினா அணிக்காக தனது கடைசி சர்வதேசப் போட்டியில் விளையாடவுள்ள கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி, அதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளார். அர்ஜென்டினா மற்றும் பெனின் அணிகளுக்கு இடையிலான சர்வதேச நட்புறவுப் போட்டி எதிர்வரும் ஒக்டோபர் 6ஆம் திகதி புவனஸ் அயர்ஸில் உள்ள எஸ்டாடியோ மொனுமென்டல் (Estadio Monumental) மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியே அர்ஜென்டினா தேசிய அணிக்காக மெஸ்ஸி விளையாடும் கடைசி போட்டியாக அமையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மெஸ்ஸி தனது சமூக வலைத்தளப் பதிவின் மூலம் சிறப்பு ஜெர்சியை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். அர்ஜென்டினாவின் பாரம்பரிய நிறங்களை அடிப்படையாகக் கொண்டுள்ள இந்த ஜெர்சியில், மெஸ்ஸியின் பெயரும் 10ஆம் இலக்கமும் தங்க நிறத்தில் இடம்பெற்றுள்ளதுடன், பின்புறத்தில் அர்ஜென்டினாவின் அடையாளமான ‘மே மாத சூரியன்’ இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. “கடைசிப் போட்டி... வாழ்நாள் முழுவதும் நினைவில் நிற்கும் ஜெர்சி” என்ற கருத்துடன் மெஸ்ஸி இந்த ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளார்.

விபரங்களுக்கு
ஆசிய விளையாட்டு மகளிர் கிரிக்கெட் இறுதிப்போட்டி: இலங்கைக்கு 217 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!

ஆசிய விளையாட்டு மகளிர் கிரிக்கெட் இறுதிப்போட்டி: இலங்கைக்கு 217 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!

ஜப்பானின் நிஷின் நகரில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு மகளிர் கிரிக்கெட் இறுதிப்போட்டியில், இலங்கை அணிக்கு எதிராக முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 216 ஓட்டங்களைக் குவித்துள்ளது. இந்திய அணி சார்பில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மிருதி மந்தனா 45 பந்துகளில் 79 ஓட்டங்களையும், அதிரடியாக விளையாடிய ரிச்சா கோஷ் 22 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 49 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் சாமுடி பிரபோதா மற்றும் கவிஷா திலஹாரி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். இதனைத் தொடர்ந்து, தங்கம் வெல்வதற்கு இலங்கை மகளிர் அணிக்கு 217 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விபரங்களுக்கு
சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் ஸஹீர் கானுக்கு புதிய பொறுப்பு!

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் ஸஹீர் கானுக்கு புதிய பொறுப்பு!

2027 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடருக்கு முன்னதாக, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளர் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஸஹீர் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.கடந்த 17 ஆண்டுகளாகச் சென்னை அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராகப் பணியாற்றி வந்த ஸ்டீபன் பிளெமிங் ஜூலை மாதத்துடன் அந்தப் பொறுப்பிலிருந்து விலகிய நிலையில், ஐந்து முறை ஐ.பி.எல் செம்பியனான சென்னை சுப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் இந்த புதிய நியமனத்தை அறிவித்துள்ளது.இந்தியாவின் 2011 உலகக் கிண்ண வெற்றி அணியில் இடம்பெற்றிருந்த ஷஹீர் கான், இதற்கு முன்னர் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய அணிகளில் பயிற்றுவிப்பாளர் மற்றும் கிரிக்கெட் முகாமையாளர் பொறுப்புகளை வகித்துள்ளார்.மும்பை இந்தியன்ஸ் அணியின் கிரிக்கெட் பணிப்பாளராகவும் பின்னர் உலகளாவிய கிரிக்கெட் அபிவிருத்தித் தலைவராகவும் பணியாற்றிய அவர், லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆலோசகராகவும் (Mentor) செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
24 H பார்சிலோனா கார் பந்தயம்: அஜித்தின் ‘RedAnt Racing’ அணி 2 ஆம் இடம்  பிடித்து வெற்றியைப் பதிவு செய்தது!

24 H பார்சிலோனா கார் பந்தயம்: அஜித்தின் ‘RedAnt Racing’ அணி 2 ஆம் இடம் பிடித்து வெற்றியைப் பதிவு செய்தது!

ஸ்பெயினில் நடைபெற்ற உலகப் புகழ்பெற்ற 24 மணி நேர பார்சிலோனா (24H Barcelona) கார் பந்தயத்தில், நடிகர் அஜித்குமாரின் ‘அஜித் குமார் ரேசிங்’ மற்றும் ‘ரெட் ஆன்ட் ரேசிங்’ (RedAnt Racing) கூட்டு அணி 2 ஆம் இடத்தை பிடித்து வெற்றியைப் பதிவு செய்துள்ளது. ஐரோப்பிய எண்டூரன்ஸ் செம்பியன்ஷிப் தொடரின் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்தப் போட்டியில், அஜித்குமாரின் பந்தய அணி சிறப்பான திறமையை வெளிப்படுத்தி வெற்றிப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. உலகளாவிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் அரங்கில் இந்தியாவின் பெயரையும், தமிழ்நாட்டின் பெருமையையும் பன்னாட்டுச் சுவடுகளில் ஓங்கி ஒலிக்கச் செய்யும் வகையில் இந்த அணி தொடர்ச்சியான வெற்றிகளை ஈட்டி வருவது குறிப்பிடத்தக்கது. திரைத்துறையைத் தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் மீதான தனது காதலைத் தொடர்ந்து நிரூபித்து வரும் நடிகர் அஜித்குமாரின் இந்தச் சாதனைக்குத் திரைப்பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

விபரங்களுக்கு
டிசம்பரில் நடைபெறுகிறது ஐபிஎல் 2027 ஏலம்: மைதானம் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை!

டிசம்பரில் நடைபெறுகிறது ஐபிஎல் 2027 ஏலம்: மைதானம் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை!

2027 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடருக்கான மினி ஏலம், (Mini Auction) எதிர்வரும் வரும் டிசம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் நடைபெறவுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக வெளிநாடுகளில் நடத்தப்பட்டு வந்த ஐபிஎல் ஏலம், மீண்டும் இந்தியாவிலேயே நடத்தப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. துபாய், ஜெத்தா மற்றும் அபுதாபி ஆகிய வெளிநாடுகளில் கடந்த பருவங்களின் ஏலங்கள் நடத்தப்பட்ட நிலையில், அணி உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று மீண்டும் இந்தியாவிலேயே ஏலத்தை நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (BCCI) முடிவு செய்துள்ளது. டிசம்பர் மாதம் விருந்தக வசதிகள் மற்றும் தங்குமிட ஏற்பாடுகளை ஆய்வு செய்த பிறகே ஏலம் நடைபெறும் நகரம் இறுதி செய்யப்படும். போட்டிகளில் 'இம்பேக்ட் பிளேயர்' (Impact Player) விதியைத் தொடர்வதா அல்லது நீக்குவதா என்பது குறித்த இறுதி முடிவை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை இன்னும் அறிவிக்கவில்லை. இது குறித்து விரைவில் நடைபெறும் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபரங்களுக்கு
மகளிர் இருபதுக்கு 20 கிரிக்கெட்: அதிக ஓட்டங்கள் குவித்து ஸ்மிருதி மந்தனா புதிய உலக சாதனை!

மகளிர் இருபதுக்கு 20 கிரிக்கெட்: அதிக ஓட்டங்கள் குவித்து ஸ்மிருதி மந்தனா புதிய உலக சாதனை!

ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிர் கிரிக்கெட் தொடரில், பங்களாதேஷ் அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியின் போது இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா மகளிர் சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் குவித்த வீராங்கனை என்ற உலக சாதனையைப் படைத்துள்ளார். நியூசிலாந்து வீராங்கனை சூசி பேட்ஸின் (Suzie Bates) 4,758 ஓட்டங்கள் சாதனையை முறியடித்த ஸ்மிருதி மந்தனா, தற்போது 4,788 ஓட்டங்களுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் 19 பந்துகளில் 5 நான்கு ஓட்டங்கள் மற்றும் 2 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 37 ஓட்டங்களை அதிரடியாக பெற்று அணிக்குச் சிறப்பான ஆரம்பத்தை அளித்தார். இந்தப் போட்டியின் மூலம் மகளிர் சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட்டில் 100 ஆறு ஓட்டங்களை கடந்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். இந்த வரலாற்றுச் சாதனையுடன், ஆசிய விளையாட்டுத் தொடரில் தங்கப் பதக்கத்தை நோக்கி நகரும் இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா மீண்டும் வலுசேர்த்துள்ளார்.

விபரங்களுக்கு
Business Stories
Explore More
2026 ஆசிய விளையாட்டு விழாவுக்குச் செல்லும் இலங்கை அணிக்கு Dialog Axiata PLC அனுசரணை

2026 ஆசிய விளையாட்டு விழாவுக்குச் செல்லும் இலங்கை அணிக்கு Dialog Axiata PLC அனுசரணை

Dialog Axiata PLC, 2026 ஐச்சி-நகோயா ஆசிய விளையாட்டு விழாவில் பங்கேற்கவுள்ள இலங்கை வீரர், வீராங்கனைகள் அடங்கிய அணிக்கு அனுசரணை வழங்கியுள்ளது.இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவுடன் இணைந்து, ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வீரர், வீராங்கனைகளுக்கு இந்த அனுசரணை வழங்கப்படுவதாக Dialog Axiata PLC தெரிவித்துள்ளது.பல தசாப்தங்களாக இலங்கையின் விளையாட்டுத்துறைக்கு ஆதரவளித்து வரும் Dialog Axiata PLC, 2028ஆம் ஆண்டு வரை இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவின் உத்தியோகபூர்வ தொலைத்தொடர்பு பங்காளராகவும் செயற்பட்டு வருகிறது.2028 லொஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளை நீண்டகால இலக்காகக் கொண்டு, நாட்டின் விளையாட்டுத்துறையை மேம்படுத்துவதற்கான விரிவான திட்டங்களின் ஒரு பகுதியாக இந்த அனுசரணை வழங்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.2026 ஐச்சி-நகோயா ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கை வீரர், வீராங்கனைகள் பெறும் அனுபவங்கள், அந்த இலக்கை நோக்கிய பயணத்தில் முக்கியமான ஒரு படியாக அமையும் என Dialog Axiata PLC தெரிவித்துள்ளது.மேலும், கிரிக்கெட், கரப்பந்தாட்டம் மற்றும் மின்னணு விளையாட்டுகள் (Esports) ஆகிய தேசிய அணிகளின் பிரதான அனுசரணையாளராகவும் Dialog Axiata PLC செயற்பட்டு வருகிறது.தேசிய பரா விளையாட்டு விழா மற்றும் பரா ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் இலங்கை அணிகளுக்கும் நிறுவனம் ஆதரவு வழங்கி வருவதுடன், இலங்கை ஓபன் கோல்ஃப் போட்டி மற்றும் பரா ஒலிம்பிக் விளையாட்டுத்துறைக்கும் பிரதான அனுசரணையை வழங்கி வருகிறது.அத்துடன், எதிர்காலத்தில் செம்பியன்களை உருவாக்கும் நோக்கில், ஜனாதிபதி தங்கக் கிண்ண கரப்பந்தாட்டப் போட்டி, தேசிய கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட வலைப்பந்தாட்டப் போட்டிகள் மற்றும் பாடசாலை ரக்பி போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு நிகழ்வுகளுக்கும் Dialog Axiata PLC ஆதரவு வழங்கி வருகிறது.இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவின் உத்தியோகபூர்வ தொடர்பாடல் பங்காளராக, 2028 லொஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளை நோக்கிய இலங்கையின் பயணத்திற்கும் Dialog Axiata PLC ஆதரவு வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபரங்களுக்கு
10 பில்லியன் டொலரைத் தாண்டிய இலங்கையின் ஏற்றுமதி வருமானம்!

10 பில்லியன் டொலரைத் தாண்டிய இலங்கையின் ஏற்றுமதி வருமானம்!

இலங்கையின் ஏற்றுமதித் துறை 2026 ஆம் ஆண்டில் தொடர்ந்து வலிமையான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதுடன், ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் மொத்த ஏற்றுமதி வருமானம் 10 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.அதன்படி, 2026 ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலப்பகுதியில் பொருட்கள் மற்றும் சேவைகள் மூலம் ஈட்டப்பட்ட மதிப்பிடப்பட்ட மொத்த ஏற்றுமதி வருமானம் 10.49 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது. இது 2025 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 5.5 சதவீத அதிகரிப்பாகும்.ஒட்டுமொத்த ஏற்றுமதிச் செயல்பாட்டிற்குப் பொருட்கள் ஏற்றுமதியே அதிக பங்களிப்பை வழங்கி வந்துள்ளது. ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் இந்தத் துறை 8.19 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்டியுள்ளதுடன், இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 5.05 சதவீத அதிகரிப்பாகும். இலங்கை சுங்கத் திணைக்கத்தால் வெளியிடப்பட்ட தற்காலிகத் தரவுகள் மற்றும் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத்துறை மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் தொடர்பான மதிப்பிடப்பட்ட ஏற்றுமதி மதிப்புகளின் அடிப்படையில், 2026 ஜூலை மாதத்தில் இலங்கையின் பொருட்கள் ஏற்றுமதி 1.29 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது. எனினும், இது 2025 ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது 1.3 சதவீத சிறிய வீழ்ச்சியைக் குறிக்கிறது.இதற்கிடையில், சேவை ஏற்றுமதித் துறையும் தனது நேர்மறையான வளர்ச்சி வேகத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் இந்தத் துறை 2.3 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிடப்பட்ட வருமானத்தைப் பதிவு செய்துள்ளது. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 7.02 சதவீத அதிகரிப்பாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சேவை ஏற்றுமதியானது தொடர்ந்து விரிவடைந்து, 2026 ஜூலை மாதத்தில் சுமார் 351.92 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டியுள்ளதுடன், இது கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது 3.75 சதவீத அதிகரிப்பாகும்.இதன் விளைவாக, 2026 ஜூலை மாதத்தில் பொருட்கள் மற்றும் சேவைகள் இரண்டின் மூலமான இலங்கையின் ஒருங்கிணைந்த ஏற்றுமதி வருமானம் சுமார் 1.64 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
சுத்தமாக்கப்பட்ட சிவனொளிபாதமலை : சியபத பினான்ஸின் பசுமை முன்னெடுப்பு திட்டம்

சுத்தமாக்கப்பட்ட சிவனொளிபாதமலை : சியபத பினான்ஸின் பசுமை முன்னெடுப்பு திட்டம்

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, தனது 21ஆவது ஆண்டு நிறைவு மற்றும் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்திருந்த '2026 சிவனொளிபாதமலை சுத்திகரிப்பு திட்டம்' வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. கடந்த ஜூன் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது. சியபத பினான்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மதிஷ ஹேவவித்தாரண மற்றும் சிரேஷ்ட நிர்வாகக் குழுவின் தலைமையில், 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இந்தத் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். இதன்போது ஒரே நாளில் சுமார் ஒரு டொன் அளவிலான பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டது. அத்துடன் புனித ஸ்தலத்தைப் பாதுகாப்பதற்கான கழிவு முகாமைத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான சிவனொளிபாதமலை சரணாலயம், நாட்டின் அபூர்வ தாவரங்கள், விலங்கினங்கள் மற்றும் களனி, களு, வளவை ஆகிய முக்கிய ஆறுகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளைக் கொண்டுள்ள சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும். அதிகரித்து வரும் யாத்ரீகர்களின் வருகையால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் குறைப்பதே இந்த திட்டத்தின் பிரதான நோக்கமாகும். சிவனொளிபாதமலை முதன்மை தலைமைத் துறவி பெங்கமுவே தம்மதின்ன தேரரின் வழிகாட்டுதலின் கீழ், மஸ்கெலிய பிரதேச சபை, வனவிலங்கு பாதுகாப்புத் துறை மற்றும் நல்லதண்ணி காவல்துறை ஆகியவற்றின் முழுமையான ஆதரவுடன் இந்த கூட்டுப் பாதுகாப்பு முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

விபரங்களுக்கு
பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்த வீரர்களுக்கு டயலொக் நிறுவனம் சிறப்பு கௌரவம்

பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்த வீரர்களுக்கு டயலொக் நிறுவனம் சிறப்பு கௌரவம்

இலங்கையின் முதன்மைத் தொலைத்தொடர்புச் சேவை வழங்கியும் விளையாட்டுத்துறையின் பிரதான அனுசரணையாளருமான Dialog Axiata PLC நிறுவனம், இந்தமுறை பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்குப் பெருமை சேர்த்த வீரர்களைச் சிறப்பாகக் கெளரவித்துள்ளது.இதற்கமைய, நேற்று (05) இடம்பெற்ற பொதுநலவாய விளையாட்டு வீரர்களுக்கான மக்கள் வரவேற்பு வீதிப் பேரணியின் போது, Dialog Axiata PLC நிறுவனத்தின் தலைமை அலுவலக வளாகத்தில் இந்த கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது.பொதுநலவாய விளையாட்டு வரலாற்றில் தடகளப் பிரிவில் இலங்கைக்காக முதன்முறையாகத் தங்கம் வென்ற ருமேஷ் தரங்க மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பாலித பண்டார ஆகியோருக்கு, Dialog Axiata PLC நிறுவனத்தின் குழுமத் தலைமைச் செயல் அதிகாரி சுபுன் வீரசிங்கவினால் சிறப்புப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.2028 லொஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக் போட்டி வரை இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவின் உத்தியோகபூர்வ தொலைத்தொடர்பு பங்காளியாகச் செயற்படும் டயலொக் நிறுவனம், நாட்டின் முதன்மை ஒலிம்பிக் எதிர்பார்ப்பான ருமேஷ் தரங்க உள்ளிட்ட திறமையாளர்களையும், மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுத்துறையின் முதன்மை அனுசரணையாளராகப் பாலித பண்டார உள்ளிட்ட விளையாட்டு வீரர்களையும் தொடர்ந்து பலப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது.

விபரங்களுக்கு
 ஒப்பற்ற எரிபொருள் சிக்கனத்துடன் இலங்கையின் வீதிகளை அலங்கரிக்கவுள்ள TVS Sport 110

ஒப்பற்ற எரிபொருள் சிக்கனத்துடன் இலங்கையின் வீதிகளை அலங்கரிக்கவுள்ள TVS Sport 110

நாட்டில் உயர் ரக மோட்டார் வாகன விநியோக நிறுவனமாகத் திகழ்ந்து வருகின்ற TVS Lanka (Pvt) Ltd, இலங்கை மக்களுக்கு ஒப்பற்ற எரிபொருள் சிக்கனம் மற்றும் நம்பிக்கையான புதிய சகாப்தொன்றுக்கு வழிவகுத்துள்ளது. அந்த வகையில், புத்தம் புதிய TVS Sport 110 மோட்டார் சைக்கிள்களை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளமை குறித்து சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.உலகளவில் அங்கீகாரம் பெற்ற TVS Sport 110 மோட்டார் வாகனத்தின் புதிய வடிவமைப்புப்பானது பிரயாணத் துறையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் ஆற்றல் மிக்கது. ஒப்பற்ற எரிபொருள் சிக்கனம் மற்றும் நவீன வடிவமைப்புடன் மேம்பட்ட செயல்திறனுடன் இலங்கையின் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களுக்காக சிறப்பாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. 'மைலேஜ் கிங்' (Mileage King) என பிரபலமாக அறியப்படுகின்ற TVS Sport 110, எரிபொருள் பாவனையில் சிக்கனம் கொண்ட 109.7cc Duralife இயந்திரத்தைக் கொண்டது. 100cc இயந்திர வலுப் பிரிவில் TVS Motor நிறுவனத்தின் காப்புரிமை பெற்ற ET-Fi (Eco-Thrust Fuel Injection) தொழில்நுட்பத்தைக் கொண்ட முதலாவது மற்றும் ஒரேயொரு மோட்டார் சைக்கிள் இது மாத்திரமே என்பது சிறப்பம்சம். இந்த மேம்பாடானது எரிபொருள் பாவனையின் சிக்கனத்தை 15% ஆல் அதிகரிக்கச் செய்துள்ளதுடன், லிட்டருக்கு 80 கிமீ என்ற ஒப்பற்ற மைலேஜ் பாவனைக்கும் வழிவகுத்துள்ளது. சீரான இயந்திர வலுவைக் கொண்டுள்ளதுடன், நீண்ட நேரம் அணைத்து வைக்கப்பட்ட இயந்திரத்தை சிறப்பாக மீண்டும் இயக்கும் இயல்பானது.புத்தாக்கமிக்க பக்கவாட்டு ஸ்டாண்ட் குறியீடு, பக்கவாட்டு ஸ்டாண்ட் போடப்படும் போது தானாகவே அணைந்து விடும் இயந்திரம் ஆகிய தொழில்நுட்பங்களை இப்புதிய TVS Sport 110 மோட்டார் சைக்கிள்கள் கொண்டுள்ளன. பிரேக்குகளைப் பிரயோகிக்கும் போது உறுதிப்பாட்டை மேம்படுத்துவதற்கு 'synchronised braking technology' (SBT) என்ற தொழில்நுட்பத்தையும் அது கொண்டுள்ளது. பின்புறத்தில் சீர் செய்யக்கூடிய ஐந்து படிப்புக்கொண்ட hydraulic shock absorber மற்றும் சோர்வில்லாத நீண்டதூரப் பயணத்திற்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஆசனங்கள் ஆகிய சிறப்பம்சங்களையும் இது கொண்டுள்ளது.“இலங்கையில் மோட்டார் சைக்கிள் பிரயாணிகள் இரண்டு அடிப்படை விடயங்களுக்கு தற்போது முன்னுரிமையளித்து வருகின்றனர். மிக நீண்ட கால உழைப்பு மற்றும் உச்ச எரிபொருள் சிக்கனம் ஆகியவற்றுக்கு அவர்கள் முதலிடம் அளிக்கின்றனர். TVS Sport 110 மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தி அவர்களின் எதிர்பார்ப்புக்களை நாம் நிறைவேற்றியுள்ளோம். இதை வெறுமனே ஒரு வாகனம் என்று கூறிவிடுவதன் நின்று விட முடியாது. எரிபொருள் செலவுகள் அதிகரித்துச் செல்லும் நிலையில், தரம் மற்றும் அழகிய தோற்றம் ஆகியவற்றிற்கு எவ்விதமான குறைவுமின்றி தமது பிரயாணங்களை மேற்கொள்ள விரும்புகின்ற கடின உழைப்பாளிகள் மற்றும் அன்றாடம் பிரயாணிப்பவர்களுக்கான உகந்த தீர்வாக இது காணப்படுகின்றது.” என்று TVS Lanka (Pvt) Ltd நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. கீதால் அந்தனி அவர்கள் கருத்து தெரிவித்தார்.அதிநவீன தோற்றத்தைக் கொண்டுள்ள TVS Sport 110 மோட்டார் சைக்கிள்கள் உயர்ரக 3D chrome இலச்சினைகள், பளபளப்பான தோற்றத்தைக் கொண்ட LED DRL விளக்குகள், மற்றும் புதுப்பிக்கப்பட்ட டிஜிட்டல்-அனலொக் கட்டுப்பாட்டு முகத்திரை போன்ற சிறப்பம்சங்களையும் இது கொண்டுள்ளது. இலங்கையின் பல்வேறுபட்ட வீதி அமைப்புக்களுக்கு உகந்ததாக தரைக்கும், மோட்டார் சைக்கிளின் அடிப்பாகத்திற்கும் இடையில் 175 மிமீ தாராள இடைவெளியையும் கொண்டுள்ளது.கருப்பு நியோன் மற்றும் பழுப்பு சிவப்பு உள்ளிட்ட பல்வேறு வர்ணங்களில் TVS Sport 110 மோட்டார் சைக்கிள் வெளிவருவதுடன், TVS Lanka நாடளாவிய ரீதியில் கொண்டுள்ள பரந்தளவிலான வலையமைப்பினூடாக கிடைக்கப்பெறுகின்றது.“மிகச் சிறந்த வாகனத்தை வழங்குவதற்கும் அப்பால், சந்தையில் மிகக் குறைந்த தொகையில் அதனை சொந்தமாக்கிக் கொள்ள உறுதி செய்வதிலும் நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம். உதிரிப்பாகங்களை இலகுவில் பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக நாடெங்கிலும் 400 க்கும் மேற்பட்ட வலையமைப்பு மையங்களை நாம் நிறுவியுள்ளோம். அவற்றினூடாக சந்தையில் அசல் உதிரிப்பாகங்களை மிகவும் சிக்கனமாக ஆகக் குறைந்த விலைகளில் நாம் வழங்குகின்றோம். உதிரிப்பாகங்கள் 100% கிடைப்பதை TVS Lanka உறுதிப்படுத்துவதுடன், அசல் பாகங்கள் அனைத்திற்கும் முழுமையான உத்தரவாதத்தையும் வழங்குகின்றது. எம்மிடம் மோட்டார் சைக்கிள்களை வாங்குபவர்கள் முழுமையான மன நிம்மதியுடன், தங்குதடையின்றி போக்குவரத்து செய்வதை நாம் உறுதி செய்கின்றோம்,” என்று TVS Lanka நிறுவனத்தின் சந்தைப்படுத்தலுக்கு பின்னரான செயல்பாடுகளுக்கான உதவிப் பொது மேலாளர் இந்திக புஷ்பகுமார அவர்கள் கருத்து தெரிவித்தார்.ஐந்து ஆண்டுகள் அல்லது 76,000 கிமீ என்ற முழுமையான உத்தரவாதம், உதிரிப்பாகங்களை குறைந்த விலைகளில் தங்குதடையின்றி பெற்றுக்கொள்ளல், மற்றும் விற்பனைக்குப் பின்னரான சேவைகளை வழங்குவதற்கான பிரத்தியேக அணி ஆகியவற்றின் பக்கபலத்துடன், மோட்டார் சைக்கிள் துறையில் வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்துவதில் சிறந்த தரத்தரங்களை TVS Lanka நிறுவனம் தொடர்ந்தும் நிலைநாட்டி வருகின்றது.உங்களுக்கு அருகாமையிலுள்ள TVS காட்சி அறைக்கு வருகை தந்தோ அல்லது www.tvslanka.lk என்ற இணையத்தளம் மூலமாகவோ, அல்லது 0114 600 500 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தியோ மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள முடியும்.TVS Lanka (Pvt) Ltd நிறுவனம் தொடர்பான விபரங்கள்இந்தியாவைத் தளமாகக் கொண்ட TV Sundram Iyengar and Sons (Pvt) Ltd நிறுவனத்தின் முழுமையான உரிமையாண்மையின் கீழ் ஒரு துணை நிறுவனமாக TVS Lanka (Pvt) Ltd இயங்கி வருகிறது. இரு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையில் மோட்டார் வாகனத் துறையில் நம்பிக்கைக்குரிய நாமமாக விளங்குகின்றது. புத்தாக்கம் மற்றும் மகத்துவம் ஆகியவற்றுக்கு இது பெயர்பெற்றுள்ளதுடன், தனது வரலாற்றில் பல அங்கீகாரங்களையும், பாராட்டுக்களையும் அது சம்பாதித்துள்ளது. TVS வர்த்தகநாமம் மற்றும் பல்வேறுபட்ட வர்த்தகநாமங்களின் UCAP சேவைகளுக்கான பிரத்தியேக சேவை மையங்களை TVS Lanka இயக்கி வருகின்றது. நாடெங்கிலும் 2,000 க்கும் மேற்பட்ட முகவர் மையங்களுடன், நாடளவில் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ச்சியான தரம் மற்றும் இலகுவாக கிடைக்கப்பெறுதல் ஆகியவற்றை TVS Lanka உறுதி செய்து வருகின்றது.

விபரங்களுக்கு
டேவிட் பீரிஸ் பஜாஜ் ஸ்கூட்டர் மீண்டும் புதிய பரிமாணத்தில்

டேவிட் பீரிஸ் பஜாஜ் ஸ்கூட்டர் மீண்டும் புதிய பரிமாணத்தில்

டேவிட் பீரிஸ் குரூப் ஒஃப் கம்பனிஸ் நிறுவனத்தின் மின்சார வாகனப் பிரிவான டேவிட் பீரிஸ் E-Mobility (பிரைவேட்) லிமிடெட், Bajaj Chetak ஸ்கூட்டரை பெருமையுடன் மீள அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.    இதன் மூலம் இலங்கையின் மிகவும் பிரபலமான ஸ்கூட்டர் வர்த்தக நாமங்களில் ஒன்றான Chetak, மின்சார யுகத்திற்கு ஏற்றவாறு புதிய பரிமாணத்தில் மீண்டும் களமிறங்கியுள்ளது.    1978 ஆம் ஆண்டு முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட Bajaj Chetak, மிக விரைவாக இல்லங்கள் தோறும் இடம்பிடித்த ஒரு பெயராக மாறியதுடன், நாடு முழுவதும் உள்ள பல தலைமுறை பயணிகளின் நம்பிக்கையையும் வென்றெடுத்தது.    ஜப்பானிய மோட்டார் சைக்கிள்கள் ஆதிக்கம் செலுத்திய காலப்பகுதியிலும் கூட, Chetak ஸ்கூட்டர்களுக்கான கேள்வி அதிகரித்துக் காணப்பட்டது.    இது இலங்கை நுகர்வோர் மத்தியில் காணப்பட்ட ஈடிணையற்ற நம்பகத்தன்மையையும் உணர்வுப்பூர்வமான பிணைப்பையும் உறுதிப்படுத்துகிறது.    47 ஆண்டுகால புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்ட Chetak, தற்போது அதே நம்பிக்கையுடனும் நீடித்து உழைக்கும் தன்மையுடனும் நவீன மின்சார தொழில்நுட்பத்தின் மேம்பட்ட வசதிகளுடன் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.    நவீன நகரப் போக்குவரத்துக்காக வடிவமைக்கப்பட்டுள்ள Bajaj Chetak Electric Scooter, 3.1 kW hub motor மற்றும் 3.5 kWh lithium-ion பற்றரியைக் கொண்டுள்ளது.    இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 151 கி.மீ (IDC range) வரை பயணிக்கக்கூடிய சிறப்பான செயல்திறனை வழங்குகிறது.    அத்துடன், மணித்தியாலத்திற்கு 63 கி.மீ வேகத்தில் பயணிக்கக்கூடிய இந்த ஸ்கூட்டர், ஆற்றல், வினைத்திறன் மற்றும் அன்றாட பயன்பாட்டிற்கான வசதி ஆகியவற்றுக்கிடையே ஒரு சிறந்த சமநிலையை வழங்குகிறது.    வலுவான Steel Unibody கட்டமைப்பைக் கொண்டுள்ள Chetak, உயர்தரமான பயண அனுபவத்தையும் நீண்டகால நீடித்து உழைக்கும் தன்மையையும் வழங்குவதன் மூலம் தனது பிரிவில் உள்ள ஏனைய வாகனங்களிலிருந்து தனித்து நிற்கிறது.    அத்துடன், தனது பிரிவிலேயே ஆகக்கூடிய அளவான 35 லீற்றர் Under-seat storage வசதியையும் கொண்டுள்ளமையால், அன்றாடப் பயணம் மற்றும் நவீன நகர வாழ்க்கை முறைக்கு இது ஒரு மிகச்சிறந்த தெரிவாக அமைகிறது.    சந்தையில் உள்ள ஏனைய போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில், Bajaj Chetak அதிக ஆற்றலையும், சிறந்த பயணத் தூரத்தையும் வழங்குகிறது.    இந்த ஸ்கூட்டர், முழுமையான Digital display, புளூடூத் ஊடாக இணைக்கப்படக்கூடிய App connectivity, Eco மற்றும் Sports ஆகிய இரண்டு Riding modes போன்ற பல நவீன வசதிகளைக் கொண்டுள்ளது.    அத்துடன், Hill Hold Assist, Reverse mode, Music and call notifications போன்ற வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளதால், இது ஒரு சௌகரியமான மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பயண அனுபவத்தை உறுதி செய்கிறது.    இந்த அறிமுகத்திற்கு முன்னதாகவே, விற்பனை, சேவை மற்றும் உதிரிப்பாகங்கள் விநியோகம் ஆகியவற்றை உள்ளடக்கிய சுமார் 2,000 நாடளாவிய விற்பனை மற்றும் சேவை நிலையங்களில், பரிசோதனை உபகரணங்கள், கண்டறியும் ஸ்கானர்கள், பயிற்சி பெற்ற சேவை நிபுணர்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் உள்ளிட்ட பிரத்தியேக வசதிகளை DPMC நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது.    இதன் மூலம், வாடிக்கையாளர்கள் நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் அவர்களுக்கு ஈடிணையற்ற ஆதரவையும் இலகுவான அணுகலையும் வழங்குவதை நிறுவனம் உறுதி செய்கிறது.    டேவிட் பீரிஸ் E-Mobility நிறுவனமானது, Bajaj Chetak ஸ்கூட்டரின் தரம், நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் செயல்திறன் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்காக, இலங்கையின் அனைத்து வகையான நிலப்பரப்புகளிலும் 20,000 கிலோமீற்றர்களுக்கும் அதிகமான தூரம் சோதனைகளை மேற்கொண்டுள்ளது.    இந்த வெற்றிகரமான களப்பரிசோதனைகளின் பின்னரே இலங்கைச் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது.    டேவிட் பீரிஸ் குழுமத்தின் விரிவான நாடளாவிய விற்பனைக்குப் பிந்தைய சேவை வலையமைப்பானது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை மேலும் பலப்படுத்துவதுடன், நம்பகத்தன்மை மற்றும் வாடிக்கையாளர் நலன் மீதான அக்குழுமத்தின் நீண்டகால அர்ப்பணிப்பையும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.    அத்துடன், Bajaj Chetak பயனர்களுக்கு இலங்கையின் முதலாவது இரு சக்கர வாகனங்களுக்காக வழங்கப்படும் 24/7 வீதியோர அவசர உதவிச் சேவை வழங்கப்படுவதால், எவ்வித கவலையுமின்றி மனநிம்மதியுடன் பயணிக்க முடியும்.    வாடிக்கையாளர் டேவிட் பீரிஸ் E-Mobility ஐ 011 470 0550எனும் ஹொட்லைன் ஊடாக தொடர்பு கொள்ள முடியும்.    24/7 வீதியோர அவசர உதவிச் சேவையை 011 4 700 551 ஊடாக பெற முடியும்.    Chetak காட்சியறை இல. 08, பன்னிபிட்டிய வீதி, பத்தரமுல்ல எனும் முகவரியில் அமைந்துள்ளது.    Bajaj Chetak அறிமுகத்துடன், டேவிட் பீரிஸ் E-Mobility (பிரைவட்) லிமிடெட், இலங்கையை நிலைபேறான மற்றும் முன்னணி மின்சார போக்குவரத்து முறைமைக்கு கொண்டு செல்லும் செயற்பாடுகளை துரிதப்படுத்துவதுடன், பல தலைமுறைகளின் விருப்பத்திற்குரிய தெரிவை, எதிர்காலத்திற்கு பொருத்தமான வகையில் கொண்டு வந்துள்ளது.

விபரங்களுக்கு
தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம்

தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம்

சியபத பினான்ஸ் தடையற்ற தலைமைத்துவ மாற்றத்தை அறிவித்துள்ளது.    தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம் பெற்றதுடன் ஆனந்த செனவிரத்ன நிர்வாக இயக்குநராக தனது பதவிக் காலத்தை நிறைவு செய்கிறார்.    2026 ஜனவரி 1, முதல் தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமிக்கப்பட்டுள்ளார்.    இந்த நியமனம் சியபதவின் உள்ளக திறமை மேம்பாட்டிற்கான உறுதிப்பாட்டில் ஒரு மைல்கல்லைக் குறிக்கிறது.    நிறுவனத்தின் முன்னோடி உறுப்பினரான ஹேவவிதாரன, 2005 இல் சந்தைப்படுத்தல் உத்தியோகத்தராக நிறுவனத்தில் சேர்ந்தார்.    20 ஆண்டுகளுக்கும் மேலாக, அவர் பதவிகளில் உயர்ந்து, 2021 முதல் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி ஆகவும், 2025 முதல் தலைமை மூலோபாய அதிகாரி ஆகவும் பணியாற்றினார்.    ஆனந்த செனவிரத்னவின் வெளிச்செல்லும் தலைமையின் கீழ், சியபத பைனான்ஸ் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் துறையில் ஒரு சக்திவாய்ந்த நிறுவனமாக மாறியது.    சியபத பினானஸ் பிஎல்சி என்பது இலங்கை மத்திய வங்கியால் ஒழுங்குபடுத்தப்படும் உரிமம் பெற்ற ஒரு முன்னணி நிதி நிறுவனமாகும், மேலும் இது சம்பத் வங்கி குழுமத்தின் மிகப்பெரிய முழுமையான துணை நிறுவனமாகும்.    இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட இந்த நிறுவனம், குத்தகை, தங்கக் கடன்கள், தரகு, வணிகக் கடன்கள் மற்றும் நிலையான வைப்புத்தொகைகள் உள்ளிட்ட பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகிறது.    சமீபத்தில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான தொழில்தருநர் வர்த்தக விருதுகளில், சியபத பினான்ஸ் பிஎல்சி தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக “சிறந்த தொழில்தருநர் வர்த்தக முத்திரை” என்ற பட்டத்தைப் பெற்றுள்ளது.    இந்த விருது, தொழில்தருநர் வர்த்தக முத்திரையிடலில் நிறுவனத்தின் சிறந்த நடைமுறைகள் மற்றும் புதுமையான உத்திகளை அங்கீகரிக்கிறது, இது ஊழியர் ஈடுபாடு, தக்கவைத்தல் மற்றும் ஊக்கமளிக்கும் பணியிட கலாசாரத்தை உருவாக்குவதற்கான அதன் வலுவான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

விபரங்களுக்கு
நிக்கவெரட்டியவில் தடம் பதிக்கின்றது சியபத பினான்ஸ்

நிக்கவெரட்டியவில் தடம் பதிக்கின்றது சியபத பினான்ஸ்

உள்நாட்டு நிதி நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, இலங்கை முழுவதும் உள்ள அனைத்து சமூகங்களுக்கும் முழுமையான நிதி தீர்வுகளை வழங்குவதற்காக நிறுவனத்தின் பரந்த விரிவாக்கல் முயற்சிகளுக்கு மேலும் ஒரு மைல்கல்லாக வெற்றிகரமாக சமீபத்தில் தனது 61வது கிளையை நிக்கவெரட்டியவில் திறந்து வைத்துள்ளது.புதிய கிளையை சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர் ஆனந்த செனவிரத்ன திறந்து வைத்தார். தலைமை நிர்வாக அதிகாரி (நியமிக்கப்பட்ட) மதிஷ ஹேவாவிதாரண, சிரேஷ்ட நிர்வாகத்தினர், காவல்துறை அதிகாரி ஹரிசன் சோமசிறி, கிராம சேவையாளர் எச்.எம்.டி. நாமல் பண்டார ஆகியோர் அரச மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் காப்புறுதி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் நலன் விரும்பிகள் முன்னிலையில் இந்த கிளை திறந்து வைக்கப்பட்டது.வளமான மண் மற்றும் பயிர் செய்கைக்கு ஏற்ற அமைவான நிலங்களைக் கொண்ட நிக்கவரெட்டி, அதன் விவசாய பாரம்பரியம் மற்றும் அதன் முக்கியத்துவத்திற்காக புகழ் பெற்றுள்ளது, அங்குள்ள சமூகம் இன்றுவரை தனித்துவமான விவசாய நுட்பங்களை ஒருங்கிணைப்பதில் தொடர்ந்து கவனம் செலுத்துகின்றனர்.பாரம்பரியமாகவும் வரலாற்று ரீதியாகவும் விவசாயத்திற்குப் பெயர் பெற்றிருந்தாலும், நிக்கவரெட்டி அதன் பொருளாதார அடித்தளத்தை பாரம்பரியமற்ற தொழில்துறைகளிலும் பன்முகப்படுத்தியுள்ளது. தற்போது, ​​வேலைவாய்ப்பு நிலப்பரப்பில் சேவைத் துறைஇ விவசாயம் மற்றும் தொழில்துறை துறைகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. சில தசாப்தங்களாக, நிக்கவெரட்டிய ரியல் எஸ்டேட் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கண்டது. மேம்பட்ட உட்கட்டமைப்பு வசதி மற்றும் முதலீடுகளுக்கான மேம்பட்ட காலநிலை ஆகியவற்றால் ஆதரிக்கப்படும் பிராந்தியத்தின் நிலைப்பாடு - நவீன வீட்டுவசதி திட்டங்களின் அதிகரிப்புக்கும் வணிக வளாகங்களின் கிடைக்கும் தன்மைக்கும் வழி வகுத்துள்ளது.சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர் ஆனந்த செனவிரத்ன கருத்து தெரிவிக்கையில் "சியபத பினான்ஸ் எங்களுக்கு மிக உயர்ந்த திருப்தி அளிக்கும் அம்சம் என்னவெனில், நாங்கள் சென்றடையும் மக்களின் வாழ்க்கையில் எங்கள் சேவைகள் ஏற்படுத்தும் நல்விளைவுகளை காண்பதாகும்," எனவும் மேலும் கூறுகையில் "நிக்கவெரட்டிய கிளை திறப்பு நெருங்கும் போது, ​​உள்;ர் சமூகம் புதிய வழிகளுக்கு திறந்திருப்பதையும் நாங்கள் அவதானித்தோம். உதாரணமாக, டிஜிட்டல் சேவைகளில் இளைஞர்கள் வளர்ந்து வருவதையும், கைத்தறி கைவினைகளில் ஈடுபடும் பெண்கள் மற்றும் ஒட்டுமொத்த விவசாயத் தொழிலும் படிப்படியாக இயற்கை விவசாய நடைமுறைகளை ஏற்றுக்கொள்வதையும் நாங்கள் கவனித்தோம். இத்தகைய பின்னணியில், இந்த சமூகம் வெற்றிக்கான அடித்தளத்தை உருவாக்க உதவுவதற்கு எங்கள் ஆதரவு அவசியம் என்று நாங்கள் நம்புகிறோம்.” எனக் கூறினார்.குத்தகை, நிலையான வைப்புத்தொகை, தங்கக் கடன், வணிகக் கடன்கள், தனிநபர் கடன்கள், விரைவான வரைவு மற்றும் தரகு முதல் "ஸ்மார்ட் பே" - அதன் பில் செலுத்தும் வசதி வரை விரிவான தயாரிப்பு தொகுதியினை பெருமைப்படுத்துகிறோம், புதிய கிளை, தொழில்முனைவோர், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் ஆர்வமுள்ள இளைஞர்கள் வளர்ச்சி வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளவும், நீண்ட காலத்திற்கு அறிவார்ந்த நிதி தீர்மானங்களை ஊக்குவிக்க உதவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.நாட்டில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைத் தொடர்ந்து, ஒரு சிறிய திறப்பு விழா நடத்தப்பட்டது, மேலும் பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகள் மற்றும் காலுறைகள் கொள்வனவு செய்வதற்கு பரிசு வவுச்சர்களை நன்கொடையாக வழங்குவதற்காக பணம் ஒதுக்கப்பட்டது.பரிசு வவுச்சர்களை சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர். ஆனந்த செனவிரத்ன, தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் சிரேஷ்ட நிர்வாகத்தினர் திரு. மதிஷ ஹேவாவிதாரண ஆகியோர், பிரதேச செயலகப் பிரிவு மற்றும் நிக்கவெரட்டிய கிராம சேவையாளரின் ஒத்துழைப்புடன், திறப்பு விழாவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பாடசாலை பிள்ளைகளுக்கு வழங்கினர்.சம்பத் வங்கி குழுமத்தின் மிகப்பெரிய முழு உரிமம் பெற்ற துணை நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, நாடு முழுவதும் கிளைகளின் வலையமைப்பை கொண்டுள்ளது, இது அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை வழங்கல் தரங்களை வழங்குவதை உறுதி செய்கிறது. ஃபிட்ச் மதிப்பீடுகளால் நிலையான செயற்பாடுகள் மூலம் A(lka) என்ற தேசிய நீண்டகால மதிப்பீட்டை நிறுவனம் பெற்றுள்ளது, இது உறுதியான நிதி நிலை மற்றும் நம்பிக்கைக்குரிய வளர்ச்சி பாதையை பிரதிபலிக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில், சியபத பினான்ஸ் பிஎல்சி சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் முயற்சிகளின் வளர்ச்சிக்கும், நாடு முழுவதும் தனிப்பட்ட நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் பங்களித்துள்ளது.037 4658105 ஐ அழைப்பினை மேற்கொள்வதன் மூலமோ அல்லது இல. 48 E, ஹீலோகம, நிக்கவெட்டிய என்ற முகவரியில் உள்ள கிளைக்கு விஜயம் செய்வதன் மூலமோ நிக்கவெட்டிய கிளையை தொடர்பு கொள்ளுங்கள். சியபத பினான்ஸ் பிஎல்சி மற்றும் அதன் சேவைகள் பற்றிய மேலதிக தகவலுக்கு, www.siyapatha.lk ஐ பார்வையிடவும்.

விபரங்களுக்கு
Entertainment Stories
Explore More
கின்னஸ் சாதனை படைத்த ராக்கா திரைப்படம்

கின்னஸ் சாதனை படைத்த ராக்கா திரைப்படம்

அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கும் ராக்கா திரைப்படம் கின்னஸ் சாதனை படைத்துள்ளது. இயக்குநர் அட்லி நடிகர் அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்திற்கு ராக்கா எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் தீபிகா படுகோன், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ராக்கா படத்திற்காக உலகின் முதன்மையான விஎஃப்எக்ஸ் நிறுவனங்கள் பணியாற்றி வருகின்றன. இந்த நிலையில், ராக்கா திரைப்படம் ஒரு கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளது. திரைப்படத் தயாரிப்பில் ஒரே நேரத்தில் அதிக நபர்களைக் கொண்டு நிகழ்நேர மோஷன் - கேப்சர் தொழில்நுட்பம் மூலம் பதிவு செய்தது கின்னஸ் உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதற்கென 37 நடிகர்களின் அசைவுகள் நிகழ்நேர மோஷன் - கேப்சர் தொழில்நுட்பம் மூலம் படம்பிடிக்கப்பட்டது. மோஷன் - கேப்சர் என்பது நடிகர்களின் உடல் அசைவுகள் மற்றும் முகப் பாவனைகளைச் சிறப்பு சென்சார்கள் மற்றும் கெமராக்கள் மூலம் கணினியில் டிஜிட்டல் கதாபாத்திரங்களாக மாற்றும் அதிநவீன தொழில்நுட்பம். வழக்கமாக மோஷன் - கேப்சர் தொழில்நுட்பத்தில் ஒரு சில நடிகர்களை மட்டுமே ஒரே நேரத்தில் படம்பிடித்துள்ள நிலையில், ராக்கா திரைப்படத்தில் 37 பேர் ஒரே நேரத்தில் படம்பிடிக்கப்பட்டது உலகத் திரைப்பட வரலாற்றில் மிகப்பெரிய தொழில்நுட்ப சாதனையாகப் பார்க்கப்படுகிறது. இந்தச் சாதனைக்கான அதிகாரப்பூர்வ கின்னஸ் உலக சாதனைச் சான்றிதழை நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் இயக்குநர் அட்லீ இணைந்து பெற்றுக்கொண்டனர்.

விபரங்களுக்கு
திருமணத்திற்கு பின்பும் சினிமா பயணம்...மனம்திறந்த நடிகை ராஷ்மிகா!

திருமணத்திற்கு பின்பும் சினிமா பயணம்...மனம்திறந்த நடிகை ராஷ்மிகா!

திருமணத்திற்குப் பிறகும் தனது வாழ்க்கையில் எந்தவொரு பெரிய மாற்றமும் ஏற்படவில்லை என்றும், சினிமா வாழ்க்கையின் உச்சத்தில் இருந்தபோதே திருமணம் செய்துகொண்டதால், தனது கலைப் பயணம் எப்போதும் போல வழக்கம் போல் தொடர்வதாக நடிகை ராஷ்மிகா குறிப்பிட்டுள்ளார். நண்பர்களாக அறிமுகமான தானும் விஜய் தேவர்கொண்டாவும் தற்போது தம்பதிகளாக (ஜோடிகளாக) வாழ்கிறோம் என்று கூறியுள்ள அவர், விஜய் மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடிய குணமுடையவர் என்றும், தனது தொழில் மற்றும் வேலையில் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்படக்கூடியவர் என்றும் தெரிவித்துள்ளார். தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடித்து வருவதன் காரணமாக, தமக்கு நாள் ஒன்றுக்கு 4 மணி நேரம் மட்டுமே தூங்குவதற்கு நேரம் கிடைப்பதாக அவர் அந்தப் நேர்காணலில் தெரிவித்துள்ளார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விபரங்களுக்கு
கோடியில் சதமடித்தார் சூரி: வசூல் வேட்டை நடத்தும் மண்டாடி

கோடியில் சதமடித்தார் சூரி: வசூல் வேட்டை நடத்தும் மண்டாடி

அறிமுக இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரியின் நடிப்பில் உருவாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் "மண்டாடி". இந்த திரைப்படம் இராமநாதபுரம் கடற்றொழிலாளர்களின் வாழ்வியலையும், அவர்களின் பாரம்பரிய விளையாட்டான பாய்மரப்படகுப் போட்டியை மையமாக வைத்து உருவாகியுள்ளது. நடிகர்கள் சத்யராஜ், சுஹாஸ், மஹிமா நம்பியார், மிதுன் ஜெய்சங்கர், பாலசரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த நிலையில், கடந்த செப். 10 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியான “மண்டாடி” திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் இடையே நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், உலகளவில் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

விபரங்களுக்கு
ரூ.46 கோடி காசோலை மோசடி : சகோதரி அம்பிகா மீது முறைப்பாடு அளித்த நடிகை ராதா!

ரூ.46 கோடி காசோலை மோசடி : சகோதரி அம்பிகா மீது முறைப்பாடு அளித்த நடிகை ராதா!

சுமார் 46 கோடி ரூபாய் (இந்திய மதிப்பு) அளவிலான காசோலை மோசடி இடம்பெற்றுள்ளதாகக் குற்றம்சாட்டி, தனது சகோதரியும் நடிகையுமான அம்பிகா மற்றும் அவரது சகோதரர் மீது நடிகை ராதா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் முறைப்பாடு அளித்துள்ளார். பிரபல நடிகையான ராதா, குறித்த முறைப்பாட்டை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் முறைப்படி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது முறைப்பாட்டில், சுமார் 46 கோடி ரூபாய் மதிப்பிலான காசோலை மோசடி தொடர்பாக அம்பிகா மற்றும் அவரது சகோதரர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த முறைப்பாட்டின் அடிப்படையில், சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நடிகை ராதா தனது சகோதரி அம்பிகா உள்ளிட்டோருக்கு எதிராக அளித்துள்ள இந்த முறைப்பாடு திரையுலகிலும் பொதுவெளியிலும் கவனம் பெற்றுள்ளது.

விபரங்களுக்கு
தமிழகம் முழுவதும் கோலாகலமாக நிறைவடைந்த விநாயகர் சதுர்த்தி: பிரமாண்ட சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பு!

தமிழகம் முழுவதும் கோலாகலமாக நிறைவடைந்த விநாயகர் சதுர்த்தி: பிரமாண்ட சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பு!

விநாயகர் சதுர்த்திப் பண்டிகையை முன்னிட்டுத் தமிழகம் முழுவதும் பொது இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட பிரமாண்டமான விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. கடந்த 14ஆம் திகதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்திப் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கோவில்கள் மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் பொது இடங்களில் காவல்துறை அனுமதி பெற்று மொத்தம் 37,000 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுச் சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் சில சிலைகள் ஏற்கனவே கரைக்கப்பட்ட நிலையில், பெரும்பாலான பிரமாண்டமான சிலைகள் இன்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகின்றன. அந்தந்தப் பகுதிகளில் காவல்துறை அனுமதிக்கப்பட்ட பாதைகள் வழியாக மட்டுமே இந்த ஊர்வலம் நடைபெறுவதுடன், குறிப்பிட்ட சிலைக் கரைப்பு இடங்களுக்குச் சிலைகள் கொண்டு செல்லப்பட்டு நீர்நிலைகளில் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. சென்னையைப் பொறுத்தவரை, பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலை நகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம் மற்றும் திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை பின்புறம் ஆகிய நான்கு கடற்கரைப் பகுதிகளில் ஏராளமான விநாயகர் சிலைகள் கரைக்கப்படுகின்றன. இதற்காகச் சிறப்புப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், ஊர்வலம் அந்தப் பகுதிகளை நெருங்கியதும் கிரேன்கள் மற்றும் டிராலிகள் மூலமாகச் சிலைகள் கடற்பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டுப் படகுகள் மூலம் நடுக்கடலில் கரைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
அஜித் ரசிகர்கள் சார்பில் புதிய அரசியல் கட்சி தொடக்கம் : பொதுச்செயலாளர் பதவி அஜித்துக்காக ஒதுக்கீடு!

அஜித் ரசிகர்கள் சார்பில் புதிய அரசியல் கட்சி தொடக்கம் : பொதுச்செயலாளர் பதவி அஜித்துக்காக ஒதுக்கீடு!

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எலவனாசூர்கோட்டையில் நடிகர் அஜித்குமாரின் ரசிகர்கள் ஒன்றிணைந்து "தமிழக மக்கள் கழகம்" என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பதவியை நடிகர் அஜித்குமாருக்காக ஒதுக்கி வைத்துள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். மேலும், அஜித்குமார் தங்களது கட்சியில் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். எனினும், அஜித்குமார் அரசியலில் இணைவது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. முன்னதாகவும் அஜித்குமார் அரசியலில் ஈடுபடுவதில் ஆர்வம் இல்லை எனத் தெரிவித்திருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

விபரங்களுக்கு
அட்லீக்கு பதிலடி கொடுத்தாரா விஜய் சேதுபதி? சமூக வலைதளங்களில் வைரலாகிய காணொளி!

அட்லீக்கு பதிலடி கொடுத்தாரா விஜய் சேதுபதி? சமூக வலைதளங்களில் வைரலாகிய காணொளி!

‘பத்தா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் அட்லீ கூறிய குட்டிக்கதைக்கு நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்த கருத்து, அவருக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இருப்பதாகக் கூறி இணையத்தில் காணொளி ஒன்று வைரலாகி வருகிறது. பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் விஜய் சேதுபதி கூறிய கருத்துக்கள், தமிழக முதல்வர் விஜய்யை மறைமுகமாகக் குறிப்பிடுவதாகச் சர்ச்சையானது. ‘பத்தா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் அட்லீ கருத்து தெரிவிக்கையில், "யார் என்ன சொன்னாலும் கண்டுகொள்ளாமல் உங்கள் வழியில் செல்லுங்கள்; ஊர் வாயை அடக்க முடியாது" என ஒரு குட்டிக்கதை மூலம் குறிப்பிட்டிருந்தார். அதே மேடையில் தனது கருத்தினை தெரிவித்த விஜய் சேதுபதி, ஔவையார் - முருகன் கதையைக் குறிப்பிட்டு, "அறிவாளியோ வீரனோ ஒரு அப்பாவியைச் சந்திக்கும்போது நடப்பதுதான் அழகு. அப்பாவிகளிடம் உங்கள் அறிவைக்கொண்டு சண்டையிட்டு வெற்றி பெற முடியாது" என்று பேசினார். இந்த நிலையில், விஜய் சேதுபதியின் இந்த விளக்கம் அட்லீயின் குட்டிக்கதைக்கு மறைமுகப் பதிலடியாகவே அமைந்துள்ளது என்று நெட்டிசன்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

விபரங்களுக்கு

"120 நாட்களில் மதிப்பிட முடியாது... ஒரு வருடம் பொறுத்திருங்கள்" : முதலமைச்சர் விஜய்யின் ஆட்சி குறித்து பிரகாஷ் ராஜ் கருத்து!

தமிழகத்தில் முதலமைச்சர் விஜய்யின் ஆட்சி குறித்து திருச்சி வானூர்தி நிலையத்தில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் பதிலளித்துள்ளார். இதன்போது பேசிய அவர், “அவர் வந்து எத்தனை நாள் ஆகிறது? 120 நாட்கள்தானே ஆகிறது. மக்கள் தேர்ந்தெடுத்து விட்டார்கள். யாருக்குப் பிடிக்கும், பிடிக்காது என்பது வேறு விஷயம். ஒரு வருடம் கால அவகாசம் கொடுங்கள்” எனக் குறிப்பிட்டார். மேலும், “வாக்களித்தவர்களுக்கும், வாக்களிக்காதவர்களுக்கும் அவர்தான் முதலமைச்சர். இன்னும் அவருக்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும்” என்றும் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.

விபரங்களுக்கு
Hiru TV News | Programmes
/////////////////////////////////////////////// Commented on 2025-09-17 ////////////////////////////////////////////////////