International19 June 2026

மேற்குக்கரையில் இரண்டு மசூதிகள் தீக்கிரை - இஸ்ரேலுக்கு எதிராக ஒன்றுதிரண்ட 8 இஸ்லாமிய நாடுகள்!

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையில் (West Bank) உள்ள இரண்டு மசூதிகள் மீது நடத்தப்பட்ட தீவைப்புத் தாக்குதல்களுக்கு இஸ்ரேல் நாடே பொறுப்பேற்க வேண்டும் என்று எட்டு இஸ்லாமிய பெரும்பான்மை நாடுகள் கூட்டாகக் குற்றம் சாட்டியுள்ளன.
 
பாலஸ்தீன அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த மசூதிகள் இஸ்ரேலிய குடியேறிகளால் (Settlers) தீக்கிரையாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
சவூதி அரேபியா, ஜோர்தான், ஐக்கிய அரபு அமீரகம் (UAE), கத்தார், இந்தோனேசியா, பாகிஸ்தான், எகிப்து மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையில் பாலஸ்தீனர்களுக்கு எதிராகத் தொடர்ந்து அதிகரித்து வரும் குடியேறிகளின் வன்முறையைக் கடுமையாகக் கண்டித்துள்ளன.

நேற்று முன்தினம் ரமல்லாவுக்கு வடக்கே உள்ள ஜல்ஜல்யா (Jaljalya) கிராமத்தில் அமைந்துள்ள பெரிய மசூதி (Great Mosque) மற்றும் நோபானி ஃபார்ம்ஸ் (Nobani Farms) கிராமத்தில் உள்ள ஃபாரூக் மசூதி (Farouk Mosque) ஆகிய வழிபாட்டுத் தலங்கள் தீவைத்துக் எரியூட்டப்பட்டமையை அந்த நாடுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

"ஆக்கிரமிப்புச் சக்தி என்ற முறையில், இந்தத் கொடூரமான தாக்குதல்களுக்கு இஸ்ரேல் முழுப் பொறுப்பேற்க வேண்டும்" என்று அந்த எட்டு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் தங்களது அறிக்கையில் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes