Sports19 June 2026

உண்மையை மறைக்காதீர்கள், மெஸ்ஸியே GOAT!" – ரொனால்டோ நெகிழ்ச்சி!

உலகக் கிண்ண கால் பந்து தொடரின் முதலாவது சுற்று குழுநிலைப் போட்டிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, லியோனல் மெஸ்ஸி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோருக்கு இடையிலான ஒப்பீடுகள் மீண்டும் வேகம் பெற்றுள்ளன.

இதன்படி, பல்வேறு விவாதங்கள் மற்றும் ஊகங்களுக்கு மத்தியில், 2002 உலகக்கிண்ண வெற்றியாளரான பிரேசில் கால்பந்து சிறப்பு வீரரான ரொனால்டோ நசாரியோவிடமிருந்து முக்கியக் கூற்றொன்று வெளியாகியுள்ளது.

உலகக் கிண்ணக் கால் பந்து தொடரின் ஆர்ஜென்டினா மற்றும் அல்ஜீரியா அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில், ஆர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி, அபாரமான ஹேட்ரிக் கோல் அடித்து வரலாற்றுச் சாதனை படைத்தமையை அவர் புகழ்ந்துள்ளார்.

இந்த அசாத்தியமான ஆட்டத்தின் மூலம், உலகக் கிண்ண வரலாற்றில் அதிக கோல்களை அடித்த ஜெர்மனியின் மிரோஸ்லாவ் குளோசேயின் சாதனையை மெஸ்ஸி சமன் செய்துள்ளார்.

இந்தநிலையில்,"உலகம் இனிமேலும் உண்மையை மறைப்பதை நிறுத்திவிட்டு, மெஸ்ஸி தான் வரலாற்றின் மிகச்சிறந்த கால்பந்து வீரர்( Greatest player of all time) என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டிய நேரம் இது" என்று ரொனால்டோ நசாரியோ நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், பிரான்சின் கிலியன் எம்பாப்பே மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோரின் உலகக் கிண்ண கோல் சாதனைகளை முறியடித்த போதிலும், "இந்த எண்கள் வெறும் புள்ளிவிபரங்கள் மட்டுமே, இதில் எனக்குப் பெரிய ஈர்ப்பு இல்லை" என மெஸ்ஸி மிகவும் அடக்கத்துடன் கூறியுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes