General01 May 2026

சர்வதேச தொழிலாளர் தினம்: கொழும்பில் பலப்பரீட்சை நடத்தும் அரசியல் கட்சிகள்!

இன்று (மே 01) சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இலங்கையின் முக்கிய அரசியல் கட்சிகள் பல மே தினக் கூட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளன.

இதற்கமைய கொழும்பு நகரை மையப்படுத்தி பல பிரம்மாண்டமான பேரணிகள் மற்றும் கூட்டங்கள் நடைபெறவுள்ளன.

அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய மக்கள் சக்தி, இம்முறை 21 மாவட்டங்களில் 21 மே தினக் கூட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளது.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நுவரெலியா மற்றும் மகரகமவில் நடைபெறும் கூட்டங்களில் கலந்துகொள்ளவுள்ளார்.

எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினப் பேரணி கொழும்பு மாளிகாவத்தை பி.டி. சிறிசேன விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.

சர்வஜன அதிகாரத்தின் மே தினக் கூட்டம் கொழும்பு ஹென்றி பேரிஸ் விளையாட்டு மைதானத்தில் நடைபெறும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டம் பொரளை கெம்பல்பார்க் மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முன்னிலை சோசலிசக் கட்சியின் மே தினக் கூட்டம் கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இவற்றைத் தவிர பிரதேச ரீதியிலும் பல மேதினக் கூட்டங்கள் மற்றும் பேரணிகள் பல கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மே தினப் பேரணிகள் மற்றும் கூட்டங்களை முன்னிட்டு கொழும்பு மற்றும் ஏனைய பிரதான நகரங்களில் பொலிஸார் விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துத் திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளனர்.

கூட்டங்கள் நடைபெறும் இடங்களைச் சூழவுள்ள வீதிகளில் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்பதால், வாகன சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes