Sports05 July 2026

நோர்வேக்கு எதிரான வரலாற்று சாபத்தை உடைக்குமா பிரேசில்?

உலகக் கிண்ணக் கால்பந்து தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
 
நடப்பு செம்பியன் அர்ஜென்டினா, எம்பாப்பே தலைமையிலான பிரான்ஸ் ஆகிய அணிகள் பலமாக முன்னேறி வரும் நிலையில், 5 முறை செம்பியனான பிரேசில் அணி காலிறுதிக்கு முன்னேறும் நோக்கில் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

ஆனால், பிரேசிலின் காலிறுதி கனவுக்கு முட்டுக்கட்டையாக நிற்கிறது நோர்வே அணி.

சர்வதேச கால்பந்து வரலாற்றில் பிரேசில் அணி இதுவரை நோர்வேயை வீழ்த்தியதே இல்லை.

இரு அணிகளும் மோதிய 5 போட்டிகளில், 3 போட்டிகள் சமநிலையிலும் (Draw), 2 போட்டிகளில் நோர்வேயும் வெற்றி பெற்றுள்ளது.

குறிப்பாக 1998 உலகக் கிண்ணத் தொடரில் நோர்வே 2-1 என பிரேசிலை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்திருந்தது.

இந்தநிலையில் பிரேசில் அணியின் பயிற்றுவிப்பாளர் கார்லோ அன்செலோட்டி (Carlo Ancelotti), பிரேசில் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்துள்ளார்.

நட்சத்திர வீரர் நெய்மார் தற்போது முழு உடற்தகுதியுடன் 90 நிமிடங்களும் விளையாடத் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மறுபுறம், 28 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கிண்ணத்திற்குத் தகுதி பெற்றுள்ள நோர்வே அணி, ஈராக் மற்றும் செனகல் அணிகளை வீழ்த்தி knockout சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

பிரான்சுக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் முன்னணி வீரர்களான ஏர்லிங் ஹாலாண்ட் மற்றும் மார்ட்டின் ஒடேகார்ட் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டிருந்ததால், அவர்கள் தற்போது பிரேசிலை எதிர்கொள்ள முழு பலத்துடன் தயாராக உள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes