விலங்கு தீவன தயாரிப்பிற்காக நெல் மற்றும் அரிசியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) அறிவித்துள்ளது.
2003ஆம் ஆண்டின் 09ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகாரசபை சட்டத்தின் கீழ், கடந்த ஜூலை 3ஆம் திகதி வெளியிடப்பட்ட புதிய வர்த்தமானி அறிவித்தலின் (கட்டளை இலக்கம் 97) மூலம் இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகக் கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், விலங்கு தீவன தயாரிப்பிற்காக நெல் மற்றும் அரிசியை விற்பனை செய்வது, சேமித்து வைப்பது, கொண்டு செல்வது அல்லது வாங்குவது போன்ற நடவடிக்கைகளுக்கு நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் தடை விதிக்கப்பட்டிருந்தது.
தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய வர்த்தமானி அறிவித்தலின் மூலம் அந்த 2022ஆம் ஆண்டு உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், விலங்கு தீவனத்திற்காக நெல் மற்றும் அரிசியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த அனைத்துக் கட்டுப்பாடுகளும் முழுமையாக நீக்கப்பட்டுள்ளன.
Latest News
பிறக்கும் போதே 1,000 டொலர் முதலீடு - ட்ரம்ப் அறிமுகப்படுத்திய அதிரடி திட்டம்!
Local
07 July 2026
கமேனியின் இறுதி ஊர்வலம்: சுமார் 50,000 பேருக்கு மருத்துவ சிகிச்சை!
Local
07 July 2026
டெங்கு நோய் குறித்து வெளியான அறிவிப்பு அடுத்து வரும் நாட்களில் மிகுந்த அவதானம்
Local
07 July 2026
T20 ப்ளாஸ்ட் தொடரில் இணையும் இலங்கை வீரர் !
Local
07 July 2026
இலங்கையை மிரட்ட வருகிறதா எல் நினோ? அதிகாரிகள் எச்சரிக்கை
Local
07 July 2026
போர்த்துகல் அணியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது ஸ்பெயின்!
Local
07 July 2026
காலாவதியான சர்க்கரையை பொதி செய்து மதுபான உற்பத்திக்கு விற்ற கும்பல் கைது!
Local
07 July 2026
டி20 போட்டிகளால் கிரிக்கெட் சீரழிந்துவிட்டது - அர்ஜுன ரணதுங்க காட்டம்!
Local
07 July 2026
குப்பை கொட்டினால் கடும் தண்டனை - வெளியான அதிரடி எச்சரிக்கை!
Local
07 July 2026
கியோம் நகரை வந்தடைந்தது கமேனியின் உடலம்!
Local
07 July 2026