Entertainment19 June 2026

இந்தியத் திரையுலகை நோக்கிய நோலனின் அடுத்த அதிரடிப் பயணம்!

புகழ்பெற்ற ஒஸ்கார் விருது பெற்ற ஹொலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'The Odyssey' திரைப்படம், இந்தியாவில் சிறப்பு காட்சி (Premiere) காணும் முதல் நோலன் திரைப்படம் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைக்கவுள்ளது.

உலகளாவிய விளம்பரப் பயணத்தின் ஒரு பகுதியாக, எதிர்வரும் ஜூலை மாதம் இயக்குனர் நோலன், அவரது தயாரிப்பாளரான மனைவி எம்மா தோமஸ் மற்றும் ஹொலிவுட் நட்சத்திரங்களான மேட் டாமன், டாம் ஹாலாண்ட் ஆகியோர் மும்பை நகருக்கு வருகை தரவுள்ளனர்.

யுனிவர்சல் பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் லண்டன், பாரிஸ் மற்றும் நியூயோர்க் ஆகிய சர்வதேச நகரங்களுடன் இணைந்து மும்பையையும் இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ உலகளாவிய சிறப்பு நகரமாக அறிவித்துள்ளது.

இந்த திரைப்படம் ஜூலை 17 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

ஹோமரின் உன்னத காவியமான, டிராய் நகரின் வீழ்ச்சிக்குப் பிறகு ஒடிஸியஸ் தனது வீட்டிற்குத் திரும்ப மேற்கொள்ளும் பத்து ஆண்டுகாலப் பயணத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் ஒடிஸியஸாக மேட் டாமனும், அவரது மகன் டெலிமகாஸாக டாம் ஹோலாண்டும் நடித்துள்ளனர்.

முற்றிலும் புதிய ஐமாக்ஸ் (IMAX) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, உலகளவில் முழுமையாக ஐமாக்ஸ் கேமராக்களால் படமாக்கப்பட்ட முதல் முழுநீளத் திரைப்படம் என்ற பெருமையை 'The Odyssey' பெற்றுள்ளது.

இந்தியாவில் இதன் சிறப்பு காட்சி மும்பையிலுள்ள 'PVR Icon IMAX: Phoenix Palladium' திரையரங்கில் நடைபெறவுள்ளது.

சின்கோபி (Syncopy) நிறுவனத்திற்காக நோலன் மற்றும் எம்மா தயாரித்துள்ள இந்த படத்தில், மேட் டாமன் மற்றும் டாம் ஹாலாண்டுடன் இணைந்து ஆன் ஹாத்வே, ரொபர்ட் பாட்டின்சன், லுபிடா நியாங்கோ, சமந்தா மோர்டன், ஜெண்டாயா மற்றும் சார்லிஸ் தெரோன் உள்ளிட்ட பல முன்னணி ஹொலிவுட் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes