Entertainment12 July 2026

ரசிகர்களைக் கிறங்கடிக்கும் கூட்டணி - வைரலாகும் புகைப்படம்

ரஜினிகாந்த் - ஹிருத்திக் ரோஷன் ஜெயிலர் -2 திரைப்படத்திற்காகச் சந்தித்துள்ளனர்.

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் - 2 திரைப்படம் உருவாகி வருகிறது. இதில், நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் முதல் பாகத்தின் தோற்றத்திலேயே நடிக்கிறார்.

நடிகர்களான மோகன்லால், சிவராஜ்குமார், ஹிருத்திக் ரோஷன், சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர் அனிருத் இசையமைப்பில் உருவாகும் படம் என்பதால் பாடல்கள் மற்றும் பின்னணி இசைகளின் மீது பெரிய ஆவல் எழுந்துள்ளது.

இந்த நிலையில், ரஜினிகாந்த் - ஹிருத்திக் ரோஷன் சந்தித்துக்கொண்ட புகைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்று வருகிறது.சுமார் 40 ஆண்டுகளுக்குப் பின் ரஜினிகாந்தும் ஹிருத்திக் ரோஷனும் மீண்டும் இணைந்துள்ளனர்.

இந்தப்படம் இந்தவருடம் ஒக்டோபர் 15 ஆம் திகதி வெளியாகும் எனத் தயாரிப்பு நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தப்படத்தில் முதலில் நடிகர் ஷாருக்கான் நடிக்க இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes