Entertainment12 July 2026

பொன்நகையின்றி புன்னகையால் மின்னிய மணமகள் : எளிமையால் இணையத்தை வென்ற இளம் பெண்!

திருமணம் என்றாலே தங்க நகைகள் மற்றும் ஆடம்பர ஆபரணங்கள் என்ற பாரம்பரிய எண்ணத்தை உடைத்து, எந்தவித தங்க நகைகளும் அணியாமல் எளிமையாக திருமணம் செய்து கொண்ட மணமகள் ஒருவர் சமூக வலைத்தளங்களில் கவனம் ஈர்த்துள்ளார்.

'பார்த்து' என்ற மணமகள், மெரூன் நிற வெல்வெட் ஆடையில், கைகளில் வளையல்களோ, கழுத்தில் நெக்லஸோ இன்றி, வெறும் புன்னகையுடன் திருமணச் சடங்குகளில் பங்கேற்ற காட்சிகள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றன.

குறிப்பாக, அவரது திருமண காணொளி ஒன்றுக்கு இதுவரை 30 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த எளிமையான தோற்றம் சமூக வலைத்தளப் பயனர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது. "ஆடம்பரமான நகைகளைவிட எளிமையும் புன்னகையுமே உண்மையான அழகு" என்று பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

மேலும், திருமண ஆடம்பரத்திற்காக அதிக செலவுகளும் கடன்களும் மேற்கொள்ளப்படும் இன்றைய சூழலில், எளிமையை முன்னிறுத்திய இந்த மணமகள் பலருக்கும் முன்மாதிரியாக இருப்பதாக நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இந்த திருமணக் காணொளி தற்போது பல சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பரவலான விவாதத்தையும் வரவேற்பையும் பெற்று வருகிறது.
Related recommendation
Hiru TV News | Programmes