Entertainment12 July 2026

விஜய்யின் ‘ஜன நாயகன்’: இங்கிலாந்தில் ஒரு மணி நேரத்தில் ஆயிரக்கணக்கான நுழைவுச்சீட்டுகள் விற்பனை!

ஜூலை 24 ஆம் திகதி வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படும் விஜய்யின் ‘ஜன நாயகன்’ திரைப்படத்திற்கு இங்கிலாந்தில் முன்பதிவு தொடங்கிய ஒரு மணி நேரத்திலேயே ஆயிரக்கணக்கான நுழைவுச்சீட்டுகள் விற்பணை செய்துள்ளதாக விநியோகஸ்தர்கள் அறிவித்துள்ளனர்.

விஜய்யின் கடைசிப் படம் என்பதால், இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

நீண்ட தாமதத்திற்குப் பிறகு தணிக்கைச் சான்றிதழ் பெற்றுள்ள இந்தப் படம், இங்கிலாந்து திரையரங்குகளில் காட்சிகள் குறைக்கப்படாத, முழு படமும் (Uncut) திரையிடப்பட உள்ளது.

முன்னதாக பொங்கலுக்கு வெளியீடத் திட்டமிடப்பட்டிருந்த இந்தப் படம், பல்வேறு காரணங்களால் தாமதமாகி தற்போது வெளியாகவுள்ளமையால் இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes