General12 July 2026

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: உயிரிழந்த சிறை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட 5 இலட்சம் ரூபா நிதி, ஆரம்ப கட்ட கொடுப்பனவு மாத்திரமே என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வழங்கப்பட்ட இந்த நிதி தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ஏ.சி. கஜநாயக்க இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.

குறித்த அதிகாரிகளின் குடும்பங்களுக்கு 20 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான நிதியுதவி வழங்குவது தொடர்பில் திணைக்களம் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், உயிரிழந்த அதிகாரிகளின் அனைத்து இறுதிக் கிரியைகளும் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் செலவில் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த மோதலில் காயமடைந்த சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இழப்பீடு வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
Related recommendation
Hiru TV News | Programmes