போரினால் ஏற்பட்டுள்ள பொருளாதாரத் தாக்கங்கள் குறித்த கவலைகள் தற்போது அமெரிக்காவில் மேலோங்கி வருகின்றன.
குறிப்பாக, எரிபொருள் விலை உயர்வு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றம் ஆகியவை பொதுமக்கள் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்த மோதலின் தொடக்கத்தில், அமெரிக்கா ஒரு எண்ணெய் ஏற்றுமதி நாடு என்பதால், ஹோர்முஸ் நீரிணை வழியிலான விநியோகத் தடைகள் தங்களைப் பாதிக்காது என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
இருப்பினும், அவரது அந்த கணிப்பு தற்போது தவறாகியுள்ளது.
அமெரிக்கப் பொருளாதாரத்தில் இதன் நேரடித் தாக்கம் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.
குறிப்பாக, சிறப்பு அங்காடிகளுக்குப் பொருட்களைக் கொண்டு செல்லும் போக்குவரத்து வாகனங்களுக்குப் பயன்படுத்தப்படும் டீசல் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
அத்துடன் பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் விலை அதிகரித்தது மட்டுமின்றி, போக்குவரத்து செலவு உயர்ந்ததால் அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
போர் முடிவுக்கு வந்தவுடன் அனைத்தும் இயல்பு நிலைக்குத் திரும்பும் என டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார்.
இந்த நெருக்கடி முடிவுக்கு வர எவ்வளவு காலம் எடுக்கும் என்பதில் தெளிவான காலக்கெடு ஏதும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
முதலில் சில நாட்கள் என்றார், பிறகு சில வாரங்கள் என்றார் ஆனால் தற்போதைய சூழலில், அமெரிக்கா எதிர்பார்க்கும் ஒரு தீர்வை எட்டும் வரை காத்திருக்க வேண்டிய நிலையே நீடிக்கிறது.
பொருளாதாரச் சரிவைச் சீர்செய்வதற்கான அழுத்தங்கள் அதிகரித்து வரும் நிலையில், அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து வெள்ளை மாளிகை தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.
Latest News
ஈரானுக்கு எதிரான கடற்படை முற்றுகையை அமெரிக்கா நீக்கியது: ஈரானிய உச்சத் தலைவரின் கருத்தும் வெளியானது!
Local
19 June 2026
பத்து நோயாளிகள் இருந்தால்தான் டெங்கு ஒழிப்பா? – அதிகாரிகளின் பதிலால் நாமல் அதிருப்தி!
Local
19 June 2026
தங்கப் பாதணி விருது போட்டியில் மன்சாம்பி - சுவிட்சர்லாந்து அணியின் அதிரடி வெற்றி!
Local
19 June 2026
மேற்குக்கரையில் இரண்டு மசூதிகள் தீக்கிரை - இஸ்ரேலுக்கு எதிராக ஒன்றுதிரண்ட 8 இஸ்லாமிய நாடுகள்!
Local
19 June 2026
சர்வதேச வணிகக் கப்பல்களுக்கு ஈரான் விடுத்த அதிரடி சலுகை! ஹோர்முஸ் நீரிணையில் புதிய உத்தரவு!
Local
19 June 2026
அமெரிக்கா - இஸ்ரேல் இடையே வெடித்த மோதல்! துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸின் அதிரடி எச்சரிக்கை!
Local
19 June 2026
இந்தியத் திரையுலகை நோக்கிய நோலனின் அடுத்த அதிரடிப் பயணம்!
Local
19 June 2026
21 வயது இளம் புயல் மொஃபோகெங்கின் மந்திர ஆட்டம்: உலகக் கவனத்தை ஈர்த்த இளம் வீரர்!
Local
19 June 2026
உண்மையை மறைக்காதீர்கள், மெஸ்ஸியே GOAT!" – ரொனால்டோ நெகிழ்ச்சி!
Local
19 June 2026
"ஈரானிடம் அணு ஆயுதம் இருக்கவே கூடாது!" - ட்ரூத் சோஷியல் பக்கத்தில் டொனால்ட் ட்ரம்ப் அதிரடிப் பதிவு!
Local
18 June 2026