Top Story
இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி Admiral of the Fleet வசந்த கரன்னாகொட கைது செய்யப்பட்டுள்ளார்.

கையூட்டல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவை இலங்கை கடற்படையில் இணைத்துக்கொண்டு பிரித்தானிய கடற்படை அகடமியில் பயிற்சிக்கு அனுப்பியமை தொடர்பில், விளக்கமளிப்பதற்காக ஆணைக்குழுவுக்கு வசந்த கரன்னாகொட இன்று அழைப்பட்டிருந்தார்.

வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர், கையூட்டல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விபரங்களுக்கு
General03 July 2026
முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட கைது
Live Football Scores
International News

தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடி அதிகரிப்பு!

International 03 July 2026
தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடி அதிகரிப்பு!

ஜப்பானிய பிரதமரை தங்கை என்று அழைத்த இந்திய பிரதமர்

International 03 July 2026
 ஜப்பானிய பிரதமரை தங்கை என்று அழைத்த இந்திய பிரதமர்

டிக்டொக் நேரலையில் முத்தமிட்ட ஜோடிக்கு பிரம்படி தண்டனை!

International 03 July 2026
 டிக்டொக் நேரலையில் முத்தமிட்ட ஜோடிக்கு பிரம்படி தண்டனை!

யுக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா பாரிய ஏவுகணை மற்றும் ஆளில்லா வானூர்தி தாக்குதல்: 21 பேர் பலி, 85 பேர் காயம்!

International 03 July 2026
யுக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா பாரிய ஏவுகணை மற்றும் ஆளில்லா வானூர்தி தாக்குதல்: 21 பேர் பலி, 85 பேர் காயம்!

வெனிசுவேலாவில் நிலநடுக்கம்: 140 தொன் இடிபாடுகளுக்குள் 8 நாட்கள் சிக்கியிருந்த பொதுமகன் உயிருடன் மீட்பு!

International 03 July 2026
வெனிசுவேலாவில் நிலநடுக்கம்: 140 தொன் இடிபாடுகளுக்குள் 8 நாட்கள் சிக்கியிருந்த பொதுமகன் உயிருடன் மீட்பு!

2028 முதல் பிளேஸ்டேஷனில் டிஸ்க் கேம்களுக்கு முடிவா? : தொழில்நுட்பத் தரப்பில் பரவும் புதிய தகவல்!

International 02 July 2026
2028 முதல் பிளேஸ்டேஷனில் டிஸ்க் கேம்களுக்கு முடிவா? : தொழில்நுட்பத் தரப்பில் பரவும் புதிய தகவல்!

தாய்லாந்தில் 11 வயது சிறுவன் செலுத்திய வாகனம் மோதி 8 பௌத்த துறவிகள் உயிரிழப்பு

International 02 July 2026
தாய்லாந்தில் 11 வயது சிறுவன் செலுத்திய வாகனம் மோதி 8 பௌத்த துறவிகள் உயிரிழப்பு

வெனிசுவேலா நிலநடுக்கம்: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,295 ஆக அதிகரிப்பு

International 02 July 2026
வெனிசுவேலா நிலநடுக்கம்: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,295 ஆக அதிகரிப்பு

"ஈரான் ஒருபோதும் அணுவாயுதம் வைத்திருக்கக் கூடாது" : புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து ட்ரம்ப் கருத்து!

International 02 July 2026
"ஈரான் ஒருபோதும் அணுவாயுதம் வைத்திருக்கக் கூடாது" : புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து ட்ரம்ப் கருத்து!

பீஜிங் வானூர்தி விபத்து: விபரங்களை மூடிமறைக்கிறதா சீனா?

International 02 July 2026
பீஜிங் வானூர்தி விபத்து: விபரங்களை மூடிமறைக்கிறதா சீனா?

நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிப்புச் சம்பவம் : உக்ரைனைச் சேர்ந்த முன்னாள் இராணுவ வீரர் மீது ஜேர்மனி வழக்கு பதிவு!

International 02 July 2026
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிப்புச் சம்பவம் : உக்ரைனைச் சேர்ந்த முன்னாள் இராணுவ வீரர் மீது ஜேர்மனி வழக்கு பதிவு!

சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை தொடர்ந்தும் சரிவு!

International 02 July 2026
சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை தொடர்ந்தும் சரிவு!

தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடி அதிகரிப்பு!

International 02 July 2026
தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடி அதிகரிப்பு!

அமெரிக்கா–ஈரான் போர் மீண்டும் வெடிக்குமா? – ஜே.டி. வான்ஸ் முக்கிய கருத்து!

International 02 July 2026
அமெரிக்கா–ஈரான் போர் மீண்டும் வெடிக்குமா? – ஜே.டி. வான்ஸ் முக்கிய கருத்து!

மெக்சிகோவில் கால்பந்து வெற்றி கொண்டாட்ட நெரிசலில் சிக்கி மூவர் மூச்சுத்திணறி பலி!

International 02 July 2026
மெக்சிகோவில் கால்பந்து வெற்றி கொண்டாட்ட நெரிசலில் சிக்கி மூவர் மூச்சுத்திணறி பலி!
More News
General03 July 2026

அல்ஜீரியாவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 16 அணிகளுக்கான சுற்றுக்கு முன்னேறியது சுவிட்சர்லாந்து!

கால்பந்து தொடரின் 32 அணிகளுக்கான நொக்-அவுட் சுற்றில் அல்ஜீரியாவுக்கு எதிரான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்து அணி அபார வெற்றி பெற்று, அடுத்த சுற்றுக்கு (Round of 16) தகுதி பெற்றுள்ளது. போட்டி தொடங்கிய 10ஆவது நிமிடத்திலேயே சுவிட்சர்லாந்து அணி தனது முதல் கோலை அடித்தது. சக வீரர் ஜோஹான் மன்சாம்பி பாக்ஸுக்குள் வழங்கிய நேர்த்தியான பந்தை பிரீல் எம்போலோ (Breel Embolo) மிகச் சரியாக கோலாக மாற்றினார். இதனால் முதல் பாதியில் சுவிட்சர்லாந்து 1-0 என முன்னிலை பெற்றது. இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கிய முதல் நிமிடத்திலேயே சுவிட்சர்லாந்து தனது இரண்டாவது கோலை பதிவு செய்தது. அல்ஜீரிய தற்காப்பு அரண் பந்தைத் தடுத்தாடத் தவறியதைச் சாதகமாக்கிக் கொண்ட டான் டோய் (Dan Ndoye) ஒரு சிறப்பான ஃபினிஷிங் மூலம் கோல் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். ஆட்டத்தின் முதல் பாதியின் கூடுதல் நேரத்தில் அல்ஜீரிய அணியின் இப்ராஹிம் மசாவுக்கு ஒரு சிறந்த கோல் வாய்ப்பு கிடைத்தது, ஆனால் அவரது ஷூட் இலக்கைத் தவறவிட்டது. இந்த வெற்றியின் மூலம் சுவிட்சர்லாந்து அணி கால்பந்து வரலாற்றில் தொடர்ந்து 4ஆவது முறையாக 16 அணிகளுக்கான சுற்றுக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது. மேலும் இந்த தொடரில் இதுவரை விளையாடிய போட்டிகளில் தோல்வியடையாத அணியாகவும் தனது பயணத்தைத் தொடர்கிறது. அடுத்த சுற்றில் கொலம்பியா அல்லது கானா ஆகிய அணிகளில் வெற்றி பெறும் அணியை சுவிட்சர்லாந்து எதிர்கொள்ளவுள்ளது.

விபரங்களுக்கு
அல்ஜீரியாவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 16 அணிகளுக்கான சுற்றுக்கு முன்னேறியது சுவிட்சர்லாந்து!
General03 July 2026

யோஷித ராஜபக்ச தாக்கல் செய்த மறு சீராய்வு மனு தள்ளுபடி

தனக்கெதிரான நிதித்தூய்தாக்கல் வழக்கின் சதித் திட்டக் குற்றச்சாட்டை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல முடியாது என தீர்ப்பளிக்குமாறு கோரி யோஷித ராஜபக்ச சமர்ப்பித்த மறுசீராய்வு மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

விபரங்களுக்கு
யோஷித ராஜபக்ச தாக்கல் செய்த மறு சீராய்வு மனு தள்ளுபடி
General03 July 2026

தென்னாப்பிரிக்க மகளிர் அணியை வீழ்த்தி இங்கிலாந்து மகளிர் அணி அபார வெற்றி

லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற மகளிருக்கான இருபதுக்கு 20 உலகக்கிண்ணத் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், தென்னாப்பிரிக்க மகளிர் அணியை 40 ஓட்டங்களால் வீழ்த்தி இங்கிலாந்து மகளிர் அணி வெற்றி பெற்றுள்ளது. குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இங்கிலாந்து மகளிர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 169 ஓட்டங்களைப் பெற்றது.இங்கிலாந்து அணி சார்பாக அதிகப்படியாக, ஆலிஸ் கேப்சி (Alice Capsey ) 47 பந்துகளுக்கு 75 ஓட்டங்களையும், ஹீதர் நைட் (Heather Knight ) 47 பந்துகளுக்கு 58 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.தொடர்ந்தும் 170 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்க மகளிர் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 129 ஓட்டங்களை மாத்திரமே பெற்று போட்டியில் தோல்வியடைந்தது. தென்னாப்பிரிக்க அணி சார்பில், டாஸ்மின் பிரிட்ஸ் (Tazmin Brits ) 45 பந்துகளுக்கு 51 ஓட்டங்களையும், அணித் தலைவர் லாரா வோல்வார்ட் (Laura Wolvaardt) 15 பந்துகளுக்கு 17 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். அதன்படி குறித்த போட்டியில், 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து மகளிர் அணி தென்னாப்பிரிக்க மகளிர் அணியை வீழ்த்தி வெற்றிப் பெற்றது.

விபரங்களுக்கு
தென்னாப்பிரிக்க மகளிர் அணியை வீழ்த்தி இங்கிலாந்து மகளிர் அணி அபார வெற்றி
General03 July 2026

வெனிசுவேலா நிலநடுக்கம்: 8 நாட்களாக இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தவர் உயிருடன் மீட்பு!

வெனிசுவேலாவில் கடந்த ஜூன் 24ஆம் திகதி ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கங்களால் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து, 8 நாட்களாக இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். ஹெர்னான் கில் என்ற பாதுகாப்பு ஊழியரே மீட்கப்பட்டுள்ளார். நிலநடுக்கத்தின் போது அவர் மாடி வாகன நிறுத்துமிடத்தின் அடித்தளத்தில் இருந்த சிறிய கொங்கிரீட் சாவடிக்குள் இருந்துள்ளார். மீட்புக்குழுவினர் அவரை அடையாளம் கண்டு, 100 மணித்தியாலங்களுக்கும் மேலான கடுமையான போராட்டத்திற்குப் பின்னரே பத்திரமாக வெளியே கொண்டு வந்தனர். சிலி நாட்டு தீயணைப்பு வீரர் ஒருவர், இது தனது வாழ்நாளில் எதிர்கொண்ட "மிகவும் சிக்கலான மற்றும் தொழில்நுட்ப ரீதியாக கடினமான" மீட்புப்பணி என விவரித்துள்ளார். வெனிசுவேலா, சிலி, கோஸ்டாரிகா, எல் சல்வடோர், மெக்சிகோ, போர்த்துக்கல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த கூட்டு மீட்புக்குழுவினர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர். இடிபாடுகளுக்குள் கெமராக்களை அனுப்பி, அவருக்கு முகமூடி,கண்ணாடி, தண்ணீர் மற்றும் குளுக்கோஸ் போன்றவற்றை வழங்கி தொடர்ந்து உரையாடி உத்வேகமளித்துள்ளனர். இவ்வளவு பெரிய இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த போதிலும், அவருக்கு ஒரு நகம் கூட சேதமடையாமல் மிக ஆரோக்கியமாக மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விபரங்களுக்கு
வெனிசுவேலா நிலநடுக்கம்: 8 நாட்களாக இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தவர் உயிருடன் மீட்பு!
General03 July 2026

18 வயதுக்குட்பட்ட ஆடவருக்கான அஞ்சலோட்டப் போட்டியில் வலல்ல ஏ. ரத்நாயக்க மத்திய கல்லூரி முதலிடம்

தியகம மஹிந்த ராஜபக்ச விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் Hiru Relay Championship 2026 அஞ்சல் ஓட்டப் போட்டித் தொடரில், 18 வயதுக்குட்பட்ட ஆடவருக்கான அஞ்சலோட்டப் போட்டியில் வலல்ல ஏ. ரத்நாயக்க மத்திய கல்லூரி முதலிடத்தைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது. ஹிரு ஊடக வலையமைப்பின் தலைவர் ரெய்னோ சில்வாவின் வழிகாட்டலின் கீழ், ஹிரு ஊடகக் குழுமத்தின் முழுமையான அனுசரணையுடன் இந்த போட்டித் தொடர் நடைபெற்று வருகின்றது. இலங்கை பாடசாலைகள் தடகள சங்கத்தினால் 4ஆவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த அஞ்சலோட்டப் போட்டித் தொடர், கல்வி அமைச்சின் அங்கீகாரத்துடன் நடத்தப்படுகின்றது. நாட்டின் அனைத்துப் பாகங்களையும் உள்ளடக்கியதாக, அனைத்து வயதுப் பிரிவுகளின் கீழ் 4,500க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவ, மாணவிகள் இந்த போட்டிகளில் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
18 வயதுக்குட்பட்ட ஆடவருக்கான அஞ்சலோட்டப் போட்டியில் வலல்ல ஏ. ரத்நாயக்க மத்திய கல்லூரி முதலிடம்
International News

தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடி அதிகரிப்பு!

International 03 July 2026
தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடி அதிகரிப்பு!

ஜப்பானிய பிரதமரை தங்கை என்று அழைத்த இந்திய பிரதமர்

International 03 July 2026
 ஜப்பானிய பிரதமரை தங்கை என்று அழைத்த இந்திய பிரதமர்

டிக்டொக் நேரலையில் முத்தமிட்ட ஜோடிக்கு பிரம்படி தண்டனை!

International 03 July 2026
 டிக்டொக் நேரலையில் முத்தமிட்ட ஜோடிக்கு பிரம்படி தண்டனை!

யுக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா பாரிய ஏவுகணை மற்றும் ஆளில்லா வானூர்தி தாக்குதல்: 21 பேர் பலி, 85 பேர் காயம்!

International 03 July 2026
யுக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா பாரிய ஏவுகணை மற்றும் ஆளில்லா வானூர்தி தாக்குதல்: 21 பேர் பலி, 85 பேர் காயம்!

வெனிசுவேலாவில் நிலநடுக்கம்: 140 தொன் இடிபாடுகளுக்குள் 8 நாட்கள் சிக்கியிருந்த பொதுமகன் உயிருடன் மீட்பு!

International 03 July 2026
வெனிசுவேலாவில் நிலநடுக்கம்: 140 தொன் இடிபாடுகளுக்குள் 8 நாட்கள் சிக்கியிருந்த பொதுமகன் உயிருடன் மீட்பு!

2028 முதல் பிளேஸ்டேஷனில் டிஸ்க் கேம்களுக்கு முடிவா? : தொழில்நுட்பத் தரப்பில் பரவும் புதிய தகவல்!

International 02 July 2026
2028 முதல் பிளேஸ்டேஷனில் டிஸ்க் கேம்களுக்கு முடிவா? : தொழில்நுட்பத் தரப்பில் பரவும் புதிய தகவல்!

தாய்லாந்தில் 11 வயது சிறுவன் செலுத்திய வாகனம் மோதி 8 பௌத்த துறவிகள் உயிரிழப்பு

International 02 July 2026
தாய்லாந்தில் 11 வயது சிறுவன் செலுத்திய வாகனம் மோதி 8 பௌத்த துறவிகள் உயிரிழப்பு

வெனிசுவேலா நிலநடுக்கம்: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,295 ஆக அதிகரிப்பு

International 02 July 2026
வெனிசுவேலா நிலநடுக்கம்: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,295 ஆக அதிகரிப்பு

"ஈரான் ஒருபோதும் அணுவாயுதம் வைத்திருக்கக் கூடாது" : புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து ட்ரம்ப் கருத்து!

International 02 July 2026
"ஈரான் ஒருபோதும் அணுவாயுதம் வைத்திருக்கக் கூடாது" : புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து ட்ரம்ப் கருத்து!

பீஜிங் வானூர்தி விபத்து: விபரங்களை மூடிமறைக்கிறதா சீனா?

International 02 July 2026
பீஜிங் வானூர்தி விபத்து: விபரங்களை மூடிமறைக்கிறதா சீனா?

நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிப்புச் சம்பவம் : உக்ரைனைச் சேர்ந்த முன்னாள் இராணுவ வீரர் மீது ஜேர்மனி வழக்கு பதிவு!

International 02 July 2026
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிப்புச் சம்பவம் : உக்ரைனைச் சேர்ந்த முன்னாள் இராணுவ வீரர் மீது ஜேர்மனி வழக்கு பதிவு!

சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை தொடர்ந்தும் சரிவு!

International 02 July 2026
சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை தொடர்ந்தும் சரிவு!

தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடி அதிகரிப்பு!

International 02 July 2026
தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடி அதிகரிப்பு!

அமெரிக்கா–ஈரான் போர் மீண்டும் வெடிக்குமா? – ஜே.டி. வான்ஸ் முக்கிய கருத்து!

International 02 July 2026
அமெரிக்கா–ஈரான் போர் மீண்டும் வெடிக்குமா? – ஜே.டி. வான்ஸ் முக்கிய கருத்து!

மெக்சிகோவில் கால்பந்து வெற்றி கொண்டாட்ட நெரிசலில் சிக்கி மூவர் மூச்சுத்திணறி பலி!

International 02 July 2026
மெக்சிகோவில் கால்பந்து வெற்றி கொண்டாட்ட நெரிசலில் சிக்கி மூவர் மூச்சுத்திணறி பலி!
Sports Stories
Explore More
16 அணிகளுக்கிடையிலான சுற்றுப் போட்டிக்கு போர்த்துக்கல் அணி தெரிவு

16 அணிகளுக்கிடையிலான சுற்றுப் போட்டிக்கு போர்த்துக்கல் அணி தெரிவு

2026 கால்பந்து செம்பியன்ஷிப் தொடரின் 32 ஆவது சுற்றில் குரோசிய அணிக்கு எதிரான போட்டியில், 2-1 என்ற கோல் கணக்கில் போர்த்துக்கல் அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் போர்த்துக்கல் அணி அடுத்த சுற்றான 16 ஆவது சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளதுடன், அங்கு பலம் வாய்ந்த ஸ்பெயின் அணியை எதிர்கொள்ளவுள்ளது. போர்த்துக்கல் - குரோஷியா அணிகளுக்கு இடையிலான 32 ஆவது சுற்று ஆட்டம் கனடாவின் டொரன்டோவில் நடைபெற்றது. விறுவிறுப்பாகத் தொடங்கிய இந்தப்போட்டியில் இரண்டு அணிகளும் கடுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தின. இந்தநிலையில் ஆட்டத்தின் 53வது நிமிடத்தில் குரோஷியா அணி தமது முதல் கோலை பெற்றது. இதனையடுத்து போர்த்துக்கல் அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோ 68 வது நிமிடத்தில் பெனால்டி முறையில் கோல் ஒன்றை தமது அணிக்காக பெற்றுக்கொடுத்தார். 94 வது நிமிடத்தில் போர்த்துக்கல் அணி தமது இரண்டாவது கோலை பெற்றது. இதன்படி, ஏற்கனவே ஒஸ்திரியாவை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ள பலம் வாய்ந்த ஸ்பெயின் அணியை 16 ஆவது சுற்றில் போர்த்துக்கல் அணி எதிர்த்தாடவுள்ளது.

விபரங்களுக்கு
காஸாவில் இஸ்ரேலிய படையினரின் தாக்குதல்: பாலஸ்தீன கால்பந்து வீரர் சலீம் அல் அஷ்கர் உயிரிழப்பு !

காஸாவில் இஸ்ரேலிய படையினரின் தாக்குதல்: பாலஸ்தீன கால்பந்து வீரர் சலீம் அல் அஷ்கர் உயிரிழப்பு !

பாலஸ்தீன கால்பந்து அணியின் இளம் கோல் காப்பாளரான 32 வயதுடைய சலீம் அல் அஷ்கர் காசாவில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினரால் உயிரிழந்துள்ளார். தெற்கு காஸா பகுதியில் உள்ள கான் யூனிஸ் நகரின் வடகிழக்கே அமைந்துள்ள அல்கராலா என்ற நகரத்தில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலின் போதே சலீம் அல் அஷ்கர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இளம் வயதிலேயே திறமையான கோல் காப்பாளராக முத்திரை பதித்த அவருக்கு, கடந்த 5 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. சலீம் அல் அஷ்கரின் மரணத்தை அடுத்து பாலஸ்தீன கால்பந்து சங்கம் அதிகாரப்பூர்வ புள்ளிவிபரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,கடந்த 2023 ஒக்டோபர் மாதம் காசாவில் போர் தொடங்கியதில் இருந்து, இஸ்ரேலிய படைகளின் தொடர் தாக்குதல்களால் இதுவரை 1,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீன விளையாட்டு வீரர்கள் மற்றும் தடகளப் பயிற்சியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று தகவலை கால்பந்து சங்கம் வெளியிட்டுள்ளது.

விபரங்களுக்கு
லொஸ் ஏஞ்சல்ஸில் உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட் மைதானம்: ஷாருக்கான் மற்றும் நைட் ரைடர்ஸ் குழுமத்தின் புதிய மைல்கல்!

லொஸ் ஏஞ்சல்ஸில் உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட் மைதானம்: ஷாருக்கான் மற்றும் நைட் ரைடர்ஸ் குழுமத்தின் புதிய மைல்கல்!

பொலிவுட் நடிகர் ஷாருக்கான் மற்றும் அவரது நைட் ரைடர்ஸ் குழுமம் இணைந்து, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள பொமோனா நகரின் ஃபேர்ப்ளெக்ஸ் வளாகத்தில் உலகத்தரம் வாய்ந்த புதிய கிரிக்கெட் மைதானத்தை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்துள்ளனர். நைட் ரைடர்ஸ் கிரிக்கெட் மைதானம் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த அரங்கம், அமெரிக்காவில் கிரிக்கெட் விளையாட்டின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. 2028 ஒலிம்பிக் போட்டிகளுக்கான பிரதான மைதானமாகவும், அமெரிக்காவில் கிரிக்கெட் விளையாட்டைப் பிரபலப்படுத்துவதிலும் இந்த மைதானம் முக்கிய பங்கு வகிக்கவுள்ளது. குறிப்பாக, 2028 ஆம் ஆண்டு லொஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளின் போது கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதற்கான அதிகாரப்பூர்வ மைதானமாக இது தேர்வு செய்யப்பட்டுள்ளது. 128 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக்கிற்குள் கிரிக்கெட் மீண்டும் நுழையும் வேளையில், இந்த மைதானம் சர்வதேச கவனத்தைப் பெற்றுள்ளது. இந்தநிலையில், தனது நீண்ட நாள் கனவு நனவாகியுள்ளதாக சமூக ஊடகங்களில் மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார்: அமெரிக்காவில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த சர்வதேச மைதானம் பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. பிரதான ஆடுகளப் பகுதியில் 8 விக்கெட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. விதிமுறைகளின்படியான சர்வதேச மைதான எல்லை அளவுகள் கடைப்பிடிக்கப்பட்டுள்ளன. இரவு நேரப் போட்டிகளுக்காக 120 அடி உயரமுடைய 6 பிரம்மாண்ட மின்விளக்கு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மைதானத்தை உருவாக்குவதற்காக சுமார் 32,000 மெட்ரிக் தொன் மண் நகர்த்தப்பட்டு கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இந்த புதிய மைதானம் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் விளையாடும் 'லொஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ்' அணியின் சொந்த மைதானமாக விளங்கும். நடப்பு மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் மொத்தம் 7 போட்டிகள் இந்த மைதானத்தில் நடத்தப்படவுள்ளன.

விபரங்களுக்கு
இந்திய டெஸ்ட் கிரிக்கட் அணி இலங்கை வருகிறது

இந்திய டெஸ்ட் கிரிக்கட் அணி இலங்கை வருகிறது

சர்வதேச கிரிக்கட் சம்மேளனத்தின் உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் (2025-2027) தொடரின் ஒரு பகுதியாக, இந்திய ஆண்கள் தேசிய கிரிக்கெட் அணி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளது. இந்த பயணத்தின்போது இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடருக்கான உத்தியோகபூர்வ போட்டி அட்டவணையை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. போட்டி அட்டவணை மற்றும் மைதான விபரங்களின்படி, முதலாவது டெஸ்ட் போட்டி, ஆகஸ்ட் 15 முதல் 19 வரை, காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டி, ஆகஸ்ட் 23 முதல் 27 வரை, கொழும்பு, சிங்களீஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளுமே இலங்கை நேரப்படி முற்பகல் 10:00 மணிக்கு ஆரம்பமாகும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது. உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இரண்டு அணிகளுக்குமே இந்தத் தொடர் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

விபரங்களுக்கு
ஒஸ்திரியாவை 3-0 என வீழ்த்தி கால்பந்து செம்பியன்ஷிப்பின் 16 ஆவது சுற்றுக்கு தகுதி பெற்றது ஸ்பெயின்!

ஒஸ்திரியாவை 3-0 என வீழ்த்தி கால்பந்து செம்பியன்ஷிப்பின் 16 ஆவது சுற்றுக்கு தகுதி பெற்றது ஸ்பெயின்!

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 2026 கால்பந்து செம்பியன்ஷிப் தொடரின் 32 ஆவது சுற்றில் ஒஸ்திரிய அணிக்கு எதிரான போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியைத் தொடர்ந்து ஸ்பெயின் அணி அடுத்த சுற்றான 16 ஆவது சுற்றுக்கு உத்தியோகபூர்வமாகத் தகுதி பெற்றுள்ளது.ஸ்பெயின் அணியின் வெற்றியில் ரியல் சொஸைடட் கிளப் அணியின் முன்கள வீரரான மிக்கேல் ஒயார்சபால் இரண்டு கோல்களை அடித்து முக்கிய பங்காற்றினார்.இந்தப் போட்டியில் ஸ்பெயின் அணியின் தற்காப்பு வீரரான பெட்ரோ போரோ தனது முதலாவது சர்வதேச கோலை பதிவு செய்தார்.இந்தநிலையில் இன்று பலப்பரீட்சை நடத்தும் போர்த்துக்கல் மற்றும் குரோசியா ஆகிய அணிகளில் வெற்றிபெறும் அணியே, அடுத்த 16 ஆவது சுற்றில் இந்த பலம் வாய்ந்த ஸ்பெயின் அணியை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
ரொனால்டோ அல்லது லூகா மோட்ரிக்: கால்பந்தாட்ட செம்பியன்ஷிப் களத்தில் நாளைய போட்டி யாருடைய இறுதிப்போட்டியாக இருக்கலாம்?

ரொனால்டோ அல்லது லூகா மோட்ரிக்: கால்பந்தாட்ட செம்பியன்ஷிப் களத்தில் நாளைய போட்டி யாருடைய இறுதிப்போட்டியாக இருக்கலாம்?

2026 கால்பந்தாட்ட செம்பியன்ஷிப் தொடரின் 32 ஆவது சுற்றில் நாளை போர்த்துக்கல் மற்றும் குரோசியா ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதுவொரு வெளியேற்றுச் சுற்று என்பதால், இந்தப் போட்டியில் தோல்வியடையும் அணி தொடரிலிருந்து வெளியேறும். இந்தநிலையில் இரண்டு அணிகளிலும் விளையாடும் உலகின் இரு பெரும் நட்சத்திரங்களான போர்த்துக்கல் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் குரோசியா அணியின் லூகா மோட்ரிக் ஆகியோர் 40 வயதைக் கடந்துள்ளனர். எனினும் இருவரில் எவரும் இன்னும் சர்வதேச போட்டி ஓய்வை அறிவிக்கவில்லை. இருந்தபோதிலும் இருவரில் ஒருவருக்கு நாளைய போட்டி கால்பந்தாட்ட செம்பியன்ஷிப் இறுதி போட்டியாக அமையும் என்று எதிர்பார்ப்புக்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளன. இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும். இதன்படி, தோல்வியடையும் அணி கால்பந்தாட்ட செம்பியன்ஷிப் தொடரை விட்டு வெளியேறும் என்பதால், தோற்கும் அணியின் தலைவருக்கு இதுவே கடைசி கால்பந்தாட்ட செம்பியன்ஷிப் ஆட்டமாக இருக்கலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. கால்பந்தாட்ட செம்பியன்ஷிப் வரலாற்றில் இந்த இரண்டு அணிகளும் நேருக்கு நேர் மோதுவது இதுவே முதல் முறையாகும். எனவே இது கால்பந்தாட்ட ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளை இந்த முக்கியத்துவம் வாய்ந்தப்போட்டி கனேடிய டொராண்டோ மைதானத்தில் இலங்கை நேரப்படி நாளை அதிகாலை 4.30க்கு ஆரம்பமாகிறது.

விபரங்களுக்கு
16 வயதுக்குட்பட்டோருக்கான 4×800 மீற்றர் அஞ்சலோட்டப்போட்டியில் வலல ஏ. ரத்நாயக்க மத்திய கல்லூரி முதலிடம்

16 வயதுக்குட்பட்டோருக்கான 4×800 மீற்றர் அஞ்சலோட்டப்போட்டியில் வலல ஏ. ரத்நாயக்க மத்திய கல்லூரி முதலிடம்

தியகம மஹிந்த ராஜபக்ச விளையாட்டரங்கில் தற்போது நடைபெற்று வரும் 'Hiru Relay Championship 2026 , அஞ்சலோட்டத் தொடரில், 16 வயதுக்குட்பட்டோருக்கான ஆண்கள் 4X800 மீற்றர் போட்டியில் வலல ஏ. ரத்நாயக்க மத்திய கல்லூரி முதலிடத்தைப் பெற்று வெற்றியீட்டியுள்ளது. இந்த போட்டியில் இரண்டாமிடத்தை வென்னப்புவ ஜோசப்வாஸ் கல்லூரியும், மூன்றாமிடத்தை கொழும்பு புனித பெனடிக்ட் கல்லூரியும் பெற்றுக்கொண்டன.ஹிரு ஊடகக் வலையமைப்பின் தலைவர் ரெய்னோ சில்வாவின் வழிகாட்டலின் கீழ், ஊடகக் குழுமத்தின் முழுமையான அனுசரணையுடன் இந்த போட்டித் தொடர் நடத்தப்பட்டு வருகின்றது.இலங்கை பாடசாலைகள் தடகள சங்கத்தினால் 4 ஆவது தடவையாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த அஞ்சலோட்டத் தொடரானது, கல்வி அமைச்சின் அனுமதியுடன் அனைத்து வயதுப் பிரிவுகளையும் உள்ளடக்கியதாக நடத்தப்படுகின்றது. இந்த போட்டியில், நாடு முழுவதிலுமிருந்து 4,500 க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
பொஸ்னியாவை வீழ்த்தி அமெரிக்கா அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்!

பொஸ்னியாவை வீழ்த்தி அமெரிக்கா அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்!

கால்பந்து செம்பியன்ஸ் தொடரின் 32 ஆவது சுற்றின், 83 ஆவது போட்டியில் பொஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா அணிக்கு எதிரான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் அமெரிக்கா அபார வெற்றி பெற்று, அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோ பே ஏரியா மைதானத்தில் நடைபெற்ற இந்த விறுவிறுப்பான ஆட்டத்தின் முதல் பாதியின் 45 ஆவது நிமிடம் அமெரிக்க அணியின் ஃபொலாரின் பாலோகுன் (Folarin Balogun) முதல் கோலை அடித்து அணியை முன்னிலைப்படுத்தினார்.தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதியின் 64 ஆவது நிமிடத்தில் முதல் கோல் அடித்த பாலோகுன் சிவப்பு அட்டை பெற்று மைதானத்தை விட்டு வெளியேறினார். இதனால் அமெரிக்க அணி 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டது.இருப்பினும், ஆட்டத்தின் 82 ஆவது நிமிடத்தில் அமெரிக்க அணியின் மாலிக் டில்மேன் (Malik Tillman) ஒரு அற்புதமான ஃப்ரீ-கிக் மூலம் அணியின் இரண்டாவது கோலை அடித்து வெற்றியை உறுதி செய்தார். ஆட்ட நேர முடிவில் பொஸ்னியா அணியால் எந்தவொரு கோலையும் அடிக்க முடியாமல் போனதால் அமெரிக்கா 2-0 என வெற்றி பெற்றது.

விபரங்களுக்கு
Business Stories
Explore More
 ஒப்பற்ற எரிபொருள் சிக்கனத்துடன் இலங்கையின் வீதிகளை அலங்கரிக்கவுள்ள TVS Sport 110

ஒப்பற்ற எரிபொருள் சிக்கனத்துடன் இலங்கையின் வீதிகளை அலங்கரிக்கவுள்ள TVS Sport 110

நாட்டில் உயர் ரக மோட்டார் வாகன விநியோக நிறுவனமாகத் திகழ்ந்து வருகின்ற TVS Lanka (Pvt) Ltd, இலங்கை மக்களுக்கு ஒப்பற்ற எரிபொருள் சிக்கனம் மற்றும் நம்பிக்கையான புதிய சகாப்தொன்றுக்கு வழிவகுத்துள்ளது. அந்த வகையில், புத்தம் புதிய TVS Sport 110 மோட்டார் சைக்கிள்களை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளமை குறித்து சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.உலகளவில் அங்கீகாரம் பெற்ற TVS Sport 110 மோட்டார் வாகனத்தின் புதிய வடிவமைப்புப்பானது பிரயாணத் துறையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் ஆற்றல் மிக்கது. ஒப்பற்ற எரிபொருள் சிக்கனம் மற்றும் நவீன வடிவமைப்புடன் மேம்பட்ட செயல்திறனுடன் இலங்கையின் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களுக்காக சிறப்பாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. 'மைலேஜ் கிங்' (Mileage King) என பிரபலமாக அறியப்படுகின்ற TVS Sport 110, எரிபொருள் பாவனையில் சிக்கனம் கொண்ட 109.7cc Duralife இயந்திரத்தைக் கொண்டது. 100cc இயந்திர வலுப் பிரிவில் TVS Motor நிறுவனத்தின் காப்புரிமை பெற்ற ET-Fi (Eco-Thrust Fuel Injection) தொழில்நுட்பத்தைக் கொண்ட முதலாவது மற்றும் ஒரேயொரு மோட்டார் சைக்கிள் இது மாத்திரமே என்பது சிறப்பம்சம். இந்த மேம்பாடானது எரிபொருள் பாவனையின் சிக்கனத்தை 15% ஆல் அதிகரிக்கச் செய்துள்ளதுடன், லிட்டருக்கு 80 கிமீ என்ற ஒப்பற்ற மைலேஜ் பாவனைக்கும் வழிவகுத்துள்ளது. சீரான இயந்திர வலுவைக் கொண்டுள்ளதுடன், நீண்ட நேரம் அணைத்து வைக்கப்பட்ட இயந்திரத்தை சிறப்பாக மீண்டும் இயக்கும் இயல்பானது.புத்தாக்கமிக்க பக்கவாட்டு ஸ்டாண்ட் குறியீடு, பக்கவாட்டு ஸ்டாண்ட் போடப்படும் போது தானாகவே அணைந்து விடும் இயந்திரம் ஆகிய தொழில்நுட்பங்களை இப்புதிய TVS Sport 110 மோட்டார் சைக்கிள்கள் கொண்டுள்ளன. பிரேக்குகளைப் பிரயோகிக்கும் போது உறுதிப்பாட்டை மேம்படுத்துவதற்கு 'synchronised braking technology' (SBT) என்ற தொழில்நுட்பத்தையும் அது கொண்டுள்ளது. பின்புறத்தில் சீர் செய்யக்கூடிய ஐந்து படிப்புக்கொண்ட hydraulic shock absorber மற்றும் சோர்வில்லாத நீண்டதூரப் பயணத்திற்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஆசனங்கள் ஆகிய சிறப்பம்சங்களையும் இது கொண்டுள்ளது.“இலங்கையில் மோட்டார் சைக்கிள் பிரயாணிகள் இரண்டு அடிப்படை விடயங்களுக்கு தற்போது முன்னுரிமையளித்து வருகின்றனர். மிக நீண்ட கால உழைப்பு மற்றும் உச்ச எரிபொருள் சிக்கனம் ஆகியவற்றுக்கு அவர்கள் முதலிடம் அளிக்கின்றனர். TVS Sport 110 மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தி அவர்களின் எதிர்பார்ப்புக்களை நாம் நிறைவேற்றியுள்ளோம். இதை வெறுமனே ஒரு வாகனம் என்று கூறிவிடுவதன் நின்று விட முடியாது. எரிபொருள் செலவுகள் அதிகரித்துச் செல்லும் நிலையில், தரம் மற்றும் அழகிய தோற்றம் ஆகியவற்றிற்கு எவ்விதமான குறைவுமின்றி தமது பிரயாணங்களை மேற்கொள்ள விரும்புகின்ற கடின உழைப்பாளிகள் மற்றும் அன்றாடம் பிரயாணிப்பவர்களுக்கான உகந்த தீர்வாக இது காணப்படுகின்றது.” என்று TVS Lanka (Pvt) Ltd நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. கீதால் அந்தனி அவர்கள் கருத்து தெரிவித்தார்.அதிநவீன தோற்றத்தைக் கொண்டுள்ள TVS Sport 110 மோட்டார் சைக்கிள்கள் உயர்ரக 3D chrome இலச்சினைகள், பளபளப்பான தோற்றத்தைக் கொண்ட LED DRL விளக்குகள், மற்றும் புதுப்பிக்கப்பட்ட டிஜிட்டல்-அனலொக் கட்டுப்பாட்டு முகத்திரை போன்ற சிறப்பம்சங்களையும் இது கொண்டுள்ளது. இலங்கையின் பல்வேறுபட்ட வீதி அமைப்புக்களுக்கு உகந்ததாக தரைக்கும், மோட்டார் சைக்கிளின் அடிப்பாகத்திற்கும் இடையில் 175 மிமீ தாராள இடைவெளியையும் கொண்டுள்ளது.கருப்பு நியோன் மற்றும் பழுப்பு சிவப்பு உள்ளிட்ட பல்வேறு வர்ணங்களில் TVS Sport 110 மோட்டார் சைக்கிள் வெளிவருவதுடன், TVS Lanka நாடளாவிய ரீதியில் கொண்டுள்ள பரந்தளவிலான வலையமைப்பினூடாக கிடைக்கப்பெறுகின்றது.“மிகச் சிறந்த வாகனத்தை வழங்குவதற்கும் அப்பால், சந்தையில் மிகக் குறைந்த தொகையில் அதனை சொந்தமாக்கிக் கொள்ள உறுதி செய்வதிலும் நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம். உதிரிப்பாகங்களை இலகுவில் பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக நாடெங்கிலும் 400 க்கும் மேற்பட்ட வலையமைப்பு மையங்களை நாம் நிறுவியுள்ளோம். அவற்றினூடாக சந்தையில் அசல் உதிரிப்பாகங்களை மிகவும் சிக்கனமாக ஆகக் குறைந்த விலைகளில் நாம் வழங்குகின்றோம். உதிரிப்பாகங்கள் 100% கிடைப்பதை TVS Lanka உறுதிப்படுத்துவதுடன், அசல் பாகங்கள் அனைத்திற்கும் முழுமையான உத்தரவாதத்தையும் வழங்குகின்றது. எம்மிடம் மோட்டார் சைக்கிள்களை வாங்குபவர்கள் முழுமையான மன நிம்மதியுடன், தங்குதடையின்றி போக்குவரத்து செய்வதை நாம் உறுதி செய்கின்றோம்,” என்று TVS Lanka நிறுவனத்தின் சந்தைப்படுத்தலுக்கு பின்னரான செயல்பாடுகளுக்கான உதவிப் பொது மேலாளர் இந்திக புஷ்பகுமார அவர்கள் கருத்து தெரிவித்தார்.ஐந்து ஆண்டுகள் அல்லது 76,000 கிமீ என்ற முழுமையான உத்தரவாதம், உதிரிப்பாகங்களை குறைந்த விலைகளில் தங்குதடையின்றி பெற்றுக்கொள்ளல், மற்றும் விற்பனைக்குப் பின்னரான சேவைகளை வழங்குவதற்கான பிரத்தியேக அணி ஆகியவற்றின் பக்கபலத்துடன், மோட்டார் சைக்கிள் துறையில் வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்துவதில் சிறந்த தரத்தரங்களை TVS Lanka நிறுவனம் தொடர்ந்தும் நிலைநாட்டி வருகின்றது.உங்களுக்கு அருகாமையிலுள்ள TVS காட்சி அறைக்கு வருகை தந்தோ அல்லது www.tvslanka.lk என்ற இணையத்தளம் மூலமாகவோ, அல்லது 0114 600 500 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தியோ மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள முடியும்.TVS Lanka (Pvt) Ltd நிறுவனம் தொடர்பான விபரங்கள்இந்தியாவைத் தளமாகக் கொண்ட TV Sundram Iyengar and Sons (Pvt) Ltd நிறுவனத்தின் முழுமையான உரிமையாண்மையின் கீழ் ஒரு துணை நிறுவனமாக TVS Lanka (Pvt) Ltd இயங்கி வருகிறது. இரு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையில் மோட்டார் வாகனத் துறையில் நம்பிக்கைக்குரிய நாமமாக விளங்குகின்றது. புத்தாக்கம் மற்றும் மகத்துவம் ஆகியவற்றுக்கு இது பெயர்பெற்றுள்ளதுடன், தனது வரலாற்றில் பல அங்கீகாரங்களையும், பாராட்டுக்களையும் அது சம்பாதித்துள்ளது. TVS வர்த்தகநாமம் மற்றும் பல்வேறுபட்ட வர்த்தகநாமங்களின் UCAP சேவைகளுக்கான பிரத்தியேக சேவை மையங்களை TVS Lanka இயக்கி வருகின்றது. நாடெங்கிலும் 2,000 க்கும் மேற்பட்ட முகவர் மையங்களுடன், நாடளவில் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ச்சியான தரம் மற்றும் இலகுவாக கிடைக்கப்பெறுதல் ஆகியவற்றை TVS Lanka உறுதி செய்து வருகின்றது.

விபரங்களுக்கு
டேவிட் பீரிஸ் பஜாஜ் ஸ்கூட்டர் மீண்டும் புதிய பரிமாணத்தில்

டேவிட் பீரிஸ் பஜாஜ் ஸ்கூட்டர் மீண்டும் புதிய பரிமாணத்தில்

டேவிட் பீரிஸ் குரூப் ஒஃப் கம்பனிஸ் நிறுவனத்தின் மின்சார வாகனப் பிரிவான டேவிட் பீரிஸ் E-Mobility (பிரைவேட்) லிமிடெட், Bajaj Chetak ஸ்கூட்டரை பெருமையுடன் மீள அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.    இதன் மூலம் இலங்கையின் மிகவும் பிரபலமான ஸ்கூட்டர் வர்த்தக நாமங்களில் ஒன்றான Chetak, மின்சார யுகத்திற்கு ஏற்றவாறு புதிய பரிமாணத்தில் மீண்டும் களமிறங்கியுள்ளது.    1978 ஆம் ஆண்டு முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட Bajaj Chetak, மிக விரைவாக இல்லங்கள் தோறும் இடம்பிடித்த ஒரு பெயராக மாறியதுடன், நாடு முழுவதும் உள்ள பல தலைமுறை பயணிகளின் நம்பிக்கையையும் வென்றெடுத்தது.    ஜப்பானிய மோட்டார் சைக்கிள்கள் ஆதிக்கம் செலுத்திய காலப்பகுதியிலும் கூட, Chetak ஸ்கூட்டர்களுக்கான கேள்வி அதிகரித்துக் காணப்பட்டது.    இது இலங்கை நுகர்வோர் மத்தியில் காணப்பட்ட ஈடிணையற்ற நம்பகத்தன்மையையும் உணர்வுப்பூர்வமான பிணைப்பையும் உறுதிப்படுத்துகிறது.    47 ஆண்டுகால புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்ட Chetak, தற்போது அதே நம்பிக்கையுடனும் நீடித்து உழைக்கும் தன்மையுடனும் நவீன மின்சார தொழில்நுட்பத்தின் மேம்பட்ட வசதிகளுடன் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.    நவீன நகரப் போக்குவரத்துக்காக வடிவமைக்கப்பட்டுள்ள Bajaj Chetak Electric Scooter, 3.1 kW hub motor மற்றும் 3.5 kWh lithium-ion பற்றரியைக் கொண்டுள்ளது.    இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 151 கி.மீ (IDC range) வரை பயணிக்கக்கூடிய சிறப்பான செயல்திறனை வழங்குகிறது.    அத்துடன், மணித்தியாலத்திற்கு 63 கி.மீ வேகத்தில் பயணிக்கக்கூடிய இந்த ஸ்கூட்டர், ஆற்றல், வினைத்திறன் மற்றும் அன்றாட பயன்பாட்டிற்கான வசதி ஆகியவற்றுக்கிடையே ஒரு சிறந்த சமநிலையை வழங்குகிறது.    வலுவான Steel Unibody கட்டமைப்பைக் கொண்டுள்ள Chetak, உயர்தரமான பயண அனுபவத்தையும் நீண்டகால நீடித்து உழைக்கும் தன்மையையும் வழங்குவதன் மூலம் தனது பிரிவில் உள்ள ஏனைய வாகனங்களிலிருந்து தனித்து நிற்கிறது.    அத்துடன், தனது பிரிவிலேயே ஆகக்கூடிய அளவான 35 லீற்றர் Under-seat storage வசதியையும் கொண்டுள்ளமையால், அன்றாடப் பயணம் மற்றும் நவீன நகர வாழ்க்கை முறைக்கு இது ஒரு மிகச்சிறந்த தெரிவாக அமைகிறது.    சந்தையில் உள்ள ஏனைய போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில், Bajaj Chetak அதிக ஆற்றலையும், சிறந்த பயணத் தூரத்தையும் வழங்குகிறது.    இந்த ஸ்கூட்டர், முழுமையான Digital display, புளூடூத் ஊடாக இணைக்கப்படக்கூடிய App connectivity, Eco மற்றும் Sports ஆகிய இரண்டு Riding modes போன்ற பல நவீன வசதிகளைக் கொண்டுள்ளது.    அத்துடன், Hill Hold Assist, Reverse mode, Music and call notifications போன்ற வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளதால், இது ஒரு சௌகரியமான மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பயண அனுபவத்தை உறுதி செய்கிறது.    இந்த அறிமுகத்திற்கு முன்னதாகவே, விற்பனை, சேவை மற்றும் உதிரிப்பாகங்கள் விநியோகம் ஆகியவற்றை உள்ளடக்கிய சுமார் 2,000 நாடளாவிய விற்பனை மற்றும் சேவை நிலையங்களில், பரிசோதனை உபகரணங்கள், கண்டறியும் ஸ்கானர்கள், பயிற்சி பெற்ற சேவை நிபுணர்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் உள்ளிட்ட பிரத்தியேக வசதிகளை DPMC நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது.    இதன் மூலம், வாடிக்கையாளர்கள் நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் அவர்களுக்கு ஈடிணையற்ற ஆதரவையும் இலகுவான அணுகலையும் வழங்குவதை நிறுவனம் உறுதி செய்கிறது.    டேவிட் பீரிஸ் E-Mobility நிறுவனமானது, Bajaj Chetak ஸ்கூட்டரின் தரம், நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் செயல்திறன் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்காக, இலங்கையின் அனைத்து வகையான நிலப்பரப்புகளிலும் 20,000 கிலோமீற்றர்களுக்கும் அதிகமான தூரம் சோதனைகளை மேற்கொண்டுள்ளது.    இந்த வெற்றிகரமான களப்பரிசோதனைகளின் பின்னரே இலங்கைச் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது.    டேவிட் பீரிஸ் குழுமத்தின் விரிவான நாடளாவிய விற்பனைக்குப் பிந்தைய சேவை வலையமைப்பானது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை மேலும் பலப்படுத்துவதுடன், நம்பகத்தன்மை மற்றும் வாடிக்கையாளர் நலன் மீதான அக்குழுமத்தின் நீண்டகால அர்ப்பணிப்பையும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.    அத்துடன், Bajaj Chetak பயனர்களுக்கு இலங்கையின் முதலாவது இரு சக்கர வாகனங்களுக்காக வழங்கப்படும் 24/7 வீதியோர அவசர உதவிச் சேவை வழங்கப்படுவதால், எவ்வித கவலையுமின்றி மனநிம்மதியுடன் பயணிக்க முடியும்.    வாடிக்கையாளர் டேவிட் பீரிஸ் E-Mobility ஐ 011 470 0550எனும் ஹொட்லைன் ஊடாக தொடர்பு கொள்ள முடியும்.    24/7 வீதியோர அவசர உதவிச் சேவையை 011 4 700 551 ஊடாக பெற முடியும்.    Chetak காட்சியறை இல. 08, பன்னிபிட்டிய வீதி, பத்தரமுல்ல எனும் முகவரியில் அமைந்துள்ளது.    Bajaj Chetak அறிமுகத்துடன், டேவிட் பீரிஸ் E-Mobility (பிரைவட்) லிமிடெட், இலங்கையை நிலைபேறான மற்றும் முன்னணி மின்சார போக்குவரத்து முறைமைக்கு கொண்டு செல்லும் செயற்பாடுகளை துரிதப்படுத்துவதுடன், பல தலைமுறைகளின் விருப்பத்திற்குரிய தெரிவை, எதிர்காலத்திற்கு பொருத்தமான வகையில் கொண்டு வந்துள்ளது.

விபரங்களுக்கு
தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம்

தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம்

சியபத பினான்ஸ் தடையற்ற தலைமைத்துவ மாற்றத்தை அறிவித்துள்ளது.    தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம் பெற்றதுடன் ஆனந்த செனவிரத்ன நிர்வாக இயக்குநராக தனது பதவிக் காலத்தை நிறைவு செய்கிறார்.    2026 ஜனவரி 1, முதல் தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமிக்கப்பட்டுள்ளார்.    இந்த நியமனம் சியபதவின் உள்ளக திறமை மேம்பாட்டிற்கான உறுதிப்பாட்டில் ஒரு மைல்கல்லைக் குறிக்கிறது.    நிறுவனத்தின் முன்னோடி உறுப்பினரான ஹேவவிதாரன, 2005 இல் சந்தைப்படுத்தல் உத்தியோகத்தராக நிறுவனத்தில் சேர்ந்தார்.    20 ஆண்டுகளுக்கும் மேலாக, அவர் பதவிகளில் உயர்ந்து, 2021 முதல் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி ஆகவும், 2025 முதல் தலைமை மூலோபாய அதிகாரி ஆகவும் பணியாற்றினார்.    ஆனந்த செனவிரத்னவின் வெளிச்செல்லும் தலைமையின் கீழ், சியபத பைனான்ஸ் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் துறையில் ஒரு சக்திவாய்ந்த நிறுவனமாக மாறியது.    சியபத பினானஸ் பிஎல்சி என்பது இலங்கை மத்திய வங்கியால் ஒழுங்குபடுத்தப்படும் உரிமம் பெற்ற ஒரு முன்னணி நிதி நிறுவனமாகும், மேலும் இது சம்பத் வங்கி குழுமத்தின் மிகப்பெரிய முழுமையான துணை நிறுவனமாகும்.    இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட இந்த நிறுவனம், குத்தகை, தங்கக் கடன்கள், தரகு, வணிகக் கடன்கள் மற்றும் நிலையான வைப்புத்தொகைகள் உள்ளிட்ட பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகிறது.    சமீபத்தில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான தொழில்தருநர் வர்த்தக விருதுகளில், சியபத பினான்ஸ் பிஎல்சி தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக “சிறந்த தொழில்தருநர் வர்த்தக முத்திரை” என்ற பட்டத்தைப் பெற்றுள்ளது.    இந்த விருது, தொழில்தருநர் வர்த்தக முத்திரையிடலில் நிறுவனத்தின் சிறந்த நடைமுறைகள் மற்றும் புதுமையான உத்திகளை அங்கீகரிக்கிறது, இது ஊழியர் ஈடுபாடு, தக்கவைத்தல் மற்றும் ஊக்கமளிக்கும் பணியிட கலாசாரத்தை உருவாக்குவதற்கான அதன் வலுவான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

விபரங்களுக்கு
நிக்கவெரட்டியவில் தடம் பதிக்கின்றது சியபத பினான்ஸ்

நிக்கவெரட்டியவில் தடம் பதிக்கின்றது சியபத பினான்ஸ்

உள்நாட்டு நிதி நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, இலங்கை முழுவதும் உள்ள அனைத்து சமூகங்களுக்கும் முழுமையான நிதி தீர்வுகளை வழங்குவதற்காக நிறுவனத்தின் பரந்த விரிவாக்கல் முயற்சிகளுக்கு மேலும் ஒரு மைல்கல்லாக வெற்றிகரமாக சமீபத்தில் தனது 61வது கிளையை நிக்கவெரட்டியவில் திறந்து வைத்துள்ளது.புதிய கிளையை சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர் ஆனந்த செனவிரத்ன திறந்து வைத்தார். தலைமை நிர்வாக அதிகாரி (நியமிக்கப்பட்ட) மதிஷ ஹேவாவிதாரண, சிரேஷ்ட நிர்வாகத்தினர், காவல்துறை அதிகாரி ஹரிசன் சோமசிறி, கிராம சேவையாளர் எச்.எம்.டி. நாமல் பண்டார ஆகியோர் அரச மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் காப்புறுதி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் நலன் விரும்பிகள் முன்னிலையில் இந்த கிளை திறந்து வைக்கப்பட்டது.வளமான மண் மற்றும் பயிர் செய்கைக்கு ஏற்ற அமைவான நிலங்களைக் கொண்ட நிக்கவரெட்டி, அதன் விவசாய பாரம்பரியம் மற்றும் அதன் முக்கியத்துவத்திற்காக புகழ் பெற்றுள்ளது, அங்குள்ள சமூகம் இன்றுவரை தனித்துவமான விவசாய நுட்பங்களை ஒருங்கிணைப்பதில் தொடர்ந்து கவனம் செலுத்துகின்றனர்.பாரம்பரியமாகவும் வரலாற்று ரீதியாகவும் விவசாயத்திற்குப் பெயர் பெற்றிருந்தாலும், நிக்கவரெட்டி அதன் பொருளாதார அடித்தளத்தை பாரம்பரியமற்ற தொழில்துறைகளிலும் பன்முகப்படுத்தியுள்ளது. தற்போது, ​​வேலைவாய்ப்பு நிலப்பரப்பில் சேவைத் துறைஇ விவசாயம் மற்றும் தொழில்துறை துறைகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. சில தசாப்தங்களாக, நிக்கவெரட்டிய ரியல் எஸ்டேட் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கண்டது. மேம்பட்ட உட்கட்டமைப்பு வசதி மற்றும் முதலீடுகளுக்கான மேம்பட்ட காலநிலை ஆகியவற்றால் ஆதரிக்கப்படும் பிராந்தியத்தின் நிலைப்பாடு - நவீன வீட்டுவசதி திட்டங்களின் அதிகரிப்புக்கும் வணிக வளாகங்களின் கிடைக்கும் தன்மைக்கும் வழி வகுத்துள்ளது.சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர் ஆனந்த செனவிரத்ன கருத்து தெரிவிக்கையில் "சியபத பினான்ஸ் எங்களுக்கு மிக உயர்ந்த திருப்தி அளிக்கும் அம்சம் என்னவெனில், நாங்கள் சென்றடையும் மக்களின் வாழ்க்கையில் எங்கள் சேவைகள் ஏற்படுத்தும் நல்விளைவுகளை காண்பதாகும்," எனவும் மேலும் கூறுகையில் "நிக்கவெரட்டிய கிளை திறப்பு நெருங்கும் போது, ​​உள்;ர் சமூகம் புதிய வழிகளுக்கு திறந்திருப்பதையும் நாங்கள் அவதானித்தோம். உதாரணமாக, டிஜிட்டல் சேவைகளில் இளைஞர்கள் வளர்ந்து வருவதையும், கைத்தறி கைவினைகளில் ஈடுபடும் பெண்கள் மற்றும் ஒட்டுமொத்த விவசாயத் தொழிலும் படிப்படியாக இயற்கை விவசாய நடைமுறைகளை ஏற்றுக்கொள்வதையும் நாங்கள் கவனித்தோம். இத்தகைய பின்னணியில், இந்த சமூகம் வெற்றிக்கான அடித்தளத்தை உருவாக்க உதவுவதற்கு எங்கள் ஆதரவு அவசியம் என்று நாங்கள் நம்புகிறோம்.” எனக் கூறினார்.குத்தகை, நிலையான வைப்புத்தொகை, தங்கக் கடன், வணிகக் கடன்கள், தனிநபர் கடன்கள், விரைவான வரைவு மற்றும் தரகு முதல் "ஸ்மார்ட் பே" - அதன் பில் செலுத்தும் வசதி வரை விரிவான தயாரிப்பு தொகுதியினை பெருமைப்படுத்துகிறோம், புதிய கிளை, தொழில்முனைவோர், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் ஆர்வமுள்ள இளைஞர்கள் வளர்ச்சி வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளவும், நீண்ட காலத்திற்கு அறிவார்ந்த நிதி தீர்மானங்களை ஊக்குவிக்க உதவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.நாட்டில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைத் தொடர்ந்து, ஒரு சிறிய திறப்பு விழா நடத்தப்பட்டது, மேலும் பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகள் மற்றும் காலுறைகள் கொள்வனவு செய்வதற்கு பரிசு வவுச்சர்களை நன்கொடையாக வழங்குவதற்காக பணம் ஒதுக்கப்பட்டது.பரிசு வவுச்சர்களை சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர். ஆனந்த செனவிரத்ன, தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் சிரேஷ்ட நிர்வாகத்தினர் திரு. மதிஷ ஹேவாவிதாரண ஆகியோர், பிரதேச செயலகப் பிரிவு மற்றும் நிக்கவெரட்டிய கிராம சேவையாளரின் ஒத்துழைப்புடன், திறப்பு விழாவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பாடசாலை பிள்ளைகளுக்கு வழங்கினர்.சம்பத் வங்கி குழுமத்தின் மிகப்பெரிய முழு உரிமம் பெற்ற துணை நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, நாடு முழுவதும் கிளைகளின் வலையமைப்பை கொண்டுள்ளது, இது அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை வழங்கல் தரங்களை வழங்குவதை உறுதி செய்கிறது. ஃபிட்ச் மதிப்பீடுகளால் நிலையான செயற்பாடுகள் மூலம் A(lka) என்ற தேசிய நீண்டகால மதிப்பீட்டை நிறுவனம் பெற்றுள்ளது, இது உறுதியான நிதி நிலை மற்றும் நம்பிக்கைக்குரிய வளர்ச்சி பாதையை பிரதிபலிக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில், சியபத பினான்ஸ் பிஎல்சி சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் முயற்சிகளின் வளர்ச்சிக்கும், நாடு முழுவதும் தனிப்பட்ட நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் பங்களித்துள்ளது.037 4658105 ஐ அழைப்பினை மேற்கொள்வதன் மூலமோ அல்லது இல. 48 E, ஹீலோகம, நிக்கவெட்டிய என்ற முகவரியில் உள்ள கிளைக்கு விஜயம் செய்வதன் மூலமோ நிக்கவெட்டிய கிளையை தொடர்பு கொள்ளுங்கள். சியபத பினான்ஸ் பிஎல்சி மற்றும் அதன் சேவைகள் பற்றிய மேலதிக தகவலுக்கு, www.siyapatha.lk ஐ பார்வையிடவும்.

விபரங்களுக்கு
வடக்கில் வலையமைப்பை விரிவுபடுத்திய சியபத பினான்ஸ்

வடக்கில் வலையமைப்பை விரிவுபடுத்திய சியபத பினான்ஸ்

சியபத பினான்ஸ், மன்னாரில் புதிய கிளையுடன் வடக்கில் தனது வலையமைப்பை விரிவுபடுத்துகிறது    20 வருட அனுபவமுள்ள முன்னணி நிதி நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, சமீபத்தில் தனது 58ஆவது கிளையை மன்னார் நகரில் திறந்து வைத்தது.    இது வட மாகாணத்தில் தனது வலையமைப்பை வலுப்படுத்தி, நாடு தழுவிய கிளை வலையமைப்பை விரிவுபடுத்துகிறது.    மன்னார் கிளை திறப்பு விழாவில் சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குநர் ஆனந்த செனவிரத்ன, தலைமை செயற்பாட்டு அதிகாரி மதிஷ ஹேவாரத்ன மற்றும் சிரேஷ்ட நிர்வாகம், கிராம சேவையாளர் என்டனி மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் நலன் விரும்பிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.    இலங்கையின் வடக்கு கடற்கரைப் பகுதியில் பல நூற்றாண்டுகள் பழமையான பாரம்பரியம், தனித்துவமான கட்டிடக்கலை மற்றும் கண்கவர் அழகினை பாதுகாத்து வரும் மன்னார் மாவட்டம், பிரதான நிலப்பகுதி மற்றும் மன்னார் தீவை கொண்டுள்ளது.    15-64 வயதுக்குட்பட்ட பொருளாதார ரீதியாக சுறுசுறுப்பான வயதுக் குழுவிற்குள் வகைப்படுத்தப்பட்டுள்ள மக்கள்தொகையில் கணிசமான பகுதியினர், நீண்டகாலத்தில் பிராந்தியத்தின் நிலையான வளர்ச்சிக்கு பங்களிக்கும் நெகிழ்வான மற்றும் வசதியான நிதி தீர்வுகளுக்கான கட்டாய தேவை ஒன்றினை கொண்டுள்ளதாக சியபத பினான்ஸ் அடையாளம் காட்டுகிறது.    மன்னார் நகரம் , பசுமையான காடுகள், பனை மரங்கள், சதுப்பு நிலங்கள் மற்றும் தென்னை பயிர்ச்செய்கை முதல் தரிசு நிலம் மற்றும் தடாகங்கள் வரை பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளைக் கொண்ட வறண்ட, மணல் தீபகற்பமாகும். தொழிற்துறையில் குறிப்பிடத்தக்க 53 சதவீதத்தை கொண்ட விவசாயத் துறை, பிராந்தியத்தின் பொருளாதார நிலப்பரப்பில் ஆதிக்கம் செலுத்துகிறது அங்கு பெரும்பாலான உள்ளூர்வாசிகள் நெல் விளைச்சலை தங்கள் முக்கிய வருமான ஆதாரமாக கொண்டுள்ளனர்.    மன்னாரில் உள்ள பல மீன்பிடி கிராமங்களின் வாழ்வாதாரத்திலும் மீன்பிடித் தொழில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.    நிகழ்வில் உரையாற்றிய சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குநர் ஆனந்த செனவிரத்ன, 'துடிப்பான மன்னார் நகரில் எங்கள் புதிய கிளையை திறப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் - ஏராளமான வாய்ப்புகள் மற்றும் நம்பிக்கைக்குரிய எதிர்காலம் கொண்ட ஒரு பிராந்தியம்.    எங்கள் சேவைகள் மூலம், உள்ளூர் சமூகங்களை மேம்படுத்துவதையும், உலகின் மாறிவரும் காலத்திற்கு ஏற்ப அவர்களின் வாழ்க்கையை மாற்ற உதவுவதையும் நாங்கள் நோக்கமாக கொண்டுள்ளோம். இதை கருத்தில் கொண்டு, நாட்டின் ஒவ்வொரு பகுதியையும் சென்றடைந்து, பல்வேறு தனிநபர் குழுக்களுடன் இணைந்து பணியாற்றும் எங்கள் பயணத்தைத் தொடர நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.' எனக் கூறினார்.    சமீபத்திய ஆண்டுகளில், மன்னார் காற்று மற்றும் சூரிய சக்தி போன்ற வளங்களால் இயக்கப்படும் புதுப்பிக்கத்தக்க சக்திக்கான பரந்த ஆற்றலைக் காட்டியுள்ளது, இது உள்ளூர் பொருளாதாரங்களுக்கு புதிய வழிகளை வழங்குகிறது. பிராந்தியத்தில் உள்ள உயர்ந்த இலட்சியம் உள்ள தனிநபர்களுக்கும் மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் நம்பகமான நிதி ஆலோசகராக கவர்ச்சிகரமானதாக இருக்கும் இந்த புதிய கிளை, குத்தகை, நிலையான வைப்புத்தொகை, தங்கக் கடன், வணிகக் கடன்கள், தனிநபர் கடன்கள், விரைவான வரைவு மற்றும் தரகு அதன் கொடுப்பனவு செலுத்தும் வசதியான ஸ்மார்ட் பே வரை பரந்த தயாரிப்பு தொகுப்பினை வழங்குகிறது.    நிறுவனத்தின் 'சியபதேன் மிஹின்கதட்ட' சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்திற்கு இணங்க, சியபத பினான்ஸ் பிஎல்சியின் சிரேஷ்ட நிர்வாகத்தினர் சென்.லூசியா மகா வித்தியாலயத்தில் ஒரு சிறப்பு மரம் நடும் முயற்சியை மேற்கொண்டனர் மற்றும் மன்னாரில் உள்ள பாடசாலை மாணவர்களின் டிஜிட்டல் கல்வியின் வளர்ச்சியை ஆதரிக்கும் முயற்சியாக கணினிகள் மற்றும் துணைக்கருவிகளை நன்கொடையாக வழங்கினர்.

விபரங்களுக்கு
டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ், GWM ஆகியன இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய எரிசக்தி வாகனங்களை அறிமுகப்படுத்த திட்டம்

டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ், GWM ஆகியன இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய எரிசக்தி வாகனங்களை அறிமுகப்படுத்த திட்டம்

டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ் மற்றும் GWM ஆகியவை இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய எரிசக்தி வாகனங்களை அறிமுகப்படுத்த மூலோபாய கூட்டாண்மையை உருவாக்குகின்றன.    டேவிட் பீரிஸ் குழுமத்தின் நான்கு சக்கர வாகன விற்பனைப் பிரிவான டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸ் (பிரைவேட்) லிமிடெட் (DPA), உலகளாவிய வாகனத் துறையில் முதன்மை வகிக்கும்  GWM உடன் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டாண்மையை அறிவித்துள்ளது.    இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய ஆற்றல் வாகனங்களின் (NEVs) புதிய அத்தியாயத்தை அறிமுகப்படுத்துவது இந்தக் கூட்டாண்மையின் நோக்கமாகும்.     அதிகாரப்பூர்வ பத்திரிகையாளர் சந்திப்பு, அக்டோபர் 30 அன்று டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸ் (DPA) தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் டேவிட் பீரிஸ் குழுமத்தின் மூத்த உறுப்பினர்களான குழுமத் தலைவர் மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளர் ரோஹன திஸாநாயக்க மற்றும் டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மகேஷ் மற்றும் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் தலைவர் யசந்த அபேகோன், ஆகியோர் கலந்து கொண்டனர். GWM நிறுவனத்தின் பிரதிநிதிகள் இணைய வழியில் நிகழ்வில் இணைந்துகொண்டனர்.    இந்தக் கூட்டாண்மை, புத்தாக்கம், நம்பகத்தன்மை மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றின் மூலம் நாட்டின் போக்குவரத்துத் துறையின் நிலப்பரப்பை மறுவடிவமைப்பதை நோக்கமாகக் கொண்டது. உலகளாவிய முன்னணி நிறுவனம், தேசத்தின் முன்னணி நிறுவனத்துடன் இணைகிறது.    இந்தப் புதிய கூட்டாண்மை, உலகின் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் இயங்கும் GWM-இன் உலகளாவிய பொறியியல் சிறப்பையும், நான்கு தசாப்தங்களுக்கும் மேலான டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ் (DPA)-இன் நம்பகத்தன்மை மற்றும் எளிமையான அணுகல் கொண்ட பாரம்பரியத்தையும் ஒருங்கிணைக்கிறது.      இந்த ஒத்துழைப்பின் மூலம் இலங்கையில் உள்ள வாடிக்கையாளர்கள்  இனிமேல் நவீன தொழில்நுட்பம் மற்றும் அன்றாடப் பயன்பாட்டிற்கு ஏற்ற தன்மைகொண்ட ஹைப்ரிட், பிளக்-இன் ஹைப்ரிட் மற்றும் முழு மின்சார வாகனங்களை பெற்றுக்கொள்ள முடியும்.  அவுஸ்திரேலியாவில் ஹவல் H6 ரக வாகனங்களுக்கு வழங்கப்பட்ட 5-நட்சத்திர ANCAP பாதுகாப்புத் தரச் சான்றிதழின் உறுதியுடனும், உலகின் சவாலான சந்தைகளில் கிடைத்த அனுபவத்துடனும், GWM நிறுவனம் இலங்கைச் சாலைகளுக்குச் சிறந்த செயல்திறனையும், மன அமைதியையும் கொண்டு வருகிறது.    "Go With More" என்ற GWM-இன் உலகளாவிய பிராண்ட் தத்துவத்தின் கீழ் இந்த முயற்சி, இலங்கையில் உள்ள ஓட்டுனர்களுக்கு செயல்திறன் மற்றும் எரிபொருள் திறன் ஆகிய இரண்டிற்கும் இடையே தேர்வு செய்ய வேண்டிய நிலையை நீக்கியுள்ளதுடன் புத்திசாலித்தனமான, ஒன்றிணைக்கப்பட்ட மற்றும் அதிக நம்பிக்கையான எதிர்காலத்திற்கு அழைப்பு விடுக்கிறது.     GWM ஹைப்ரிட் ரக வாகனங்களின் அறிமுகம் டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ் (DPA) மற்றும் GWM ஆகிய நிறுவனங்களின் கூட்டாண்மையின் கீழ் முதற்கட்டமாக அறிமுகப்படுத்தப்படும் வாகனங்கள்:     1. ஹவல் H6 HEV / PHEV- ரூ. 17.995 மில்லியன் (HEV)/ரூ. 20.995 மில்லியன்(PHEV)    அதிநவீன மற்றும் புத்திசாலித்தனமான SUV: நகர்ப்புற சொகுசையும், ஹைப்ரிட் வாகனத்தின் பன்முகத்தன்மையையும் இணைக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.சக்தி வாய்ந்த, அதேநேரம் எரிபொருள் சிக்கனமான ஓட்டத்தை வழங்குகிறது. இதில், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் 12.3 அங்குல அல்ட்ரா-ஸ்மார்ட் தொடுதிரை ஆகியவை கூடுதல் அம்சங்கள்.இது குறிப்பிடத்தக்க தூய மின்சாரப் பயண வரம்பை வழங்குகிறது. இதன்மூலம், உண்மையான ஹைப்ரிட் சுதந்திரத்தையும் தினசரி பயணங்களுக்கு மிகவும் குறைவான எரிபொருள் செலவையும் பெறலாம்.    2. ஹவல் GT பிளக்-இன் ஹைப்ரிட் (PHEV)-ரூ. 24.995 மில்லியன்    இது ஒரு செயல்திறன் மிக்க பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்யூவி ஆகும். இதன் தோற்றம், தைரியமான வடிவமைப்பு மற்றும் துடிப்பான ஹைப்ரிட் சக்தி ஆகிய அம்சங்கள் தனித்துவமானவை. இது ஒரு ஸ்போர்ட்ஸ் காருக்கு நிகரான வேகத்தை வழங்குகிறது. அதாவது, வெறும் 4.9 வினாடிகளில் 0 முதல் 100 கி.மீ/மணி வேகத்தை எட்டும். அத்துடன், பிரம்மாண்டமான 762 Nm முறுக்குவிசை (torque) திறனையும் கொண்டுள்ளது. இதன் விளையாட்டுத்தனமான வெளிப்புற வடிவமைப்புக்கு ஈடுகொடுக்கும் வகையில் ஓட்டுநரை மையப்படுத்தி உட்புரமும்  வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், 'Alcantara-style' பாணியிலான ஸ்போர்ட் இருக்கைகள் மற்றும் ஆக்ரோஷமான வெளிப்புற வடிவமைப்பு ஆகியவை அடங்கும்.     3.டேங்க் 300 ஹைப்ரிட் எலெக்ட்ரிக் (HEV)-ரூ. 35.995 மில்லியன்    நகரத்தைத் தாண்டி சுதந்திரத்தை நாடும் சாகச விரும்பிகளுக்காக உருவாக்கப்பட்ட, உறுதியான ஆஃப்-ரோட் வாகனம் இது. டேங்க் 300 ஹைப்ரிட் எலெக்ட்ரிக் வாகனம் (HEV) அதன் முழு 4x4 ஆஃப்-ரோட் சேசிஸ், முன் மற்றும் பின் டிஃபரன்சியல் லாக்குகள் மற்றும் Crawl Control வசதி ஆகியவற்றின் மூலம் நவீன தேடல் அனுபவத்தை மறுவடிவமைக்கிறது. இதன் ராணுவத் தர வலிமை, இரட்டை 12.3-இன்ச் திரைகள் மற்றும் உயர்தர faux Nappa leather accents உட்புற அலங்காரம் போன்ற சொகுசான அம்சங்களால் சமநிலைப்படுத்தப்பட்டுள்ளது.   4. டேங்க் 500 ஹைப்ரிட் எலெக்ட்ரிக் வாகனம் (HEV)- ரூ. 43.5 மில்லியன்    GWM-இன் முதன்மை ரக வாகனமான இந்த வாகனம் கம்பீரமான வடிவமைப்பு, ஏழு இருக்கைகள் கொண்ட வசதி மற்றும் ஹைப்ரிட்இன் சொகுசுத்தன்மை  ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது. 'Nappa Leather-Accented' இருக்கைகள் (குளிரூட்டும்/மசாஜ் வசதியுடன்) மற்றும் பிரமாண்டமான 14.6-அங்குல மைய மல்டிமீடியா திரையுடன் இதன் உள்ளறை ஆடம்பரமாக அமைக்கப்பட்டுள்ளது. பாடி-ஆன்-ஃப்ரேம் சேசிஸ் (Body-on-Frame chassis: வாகனத்தின் உடல், அதன் சட்டகத்தின் மேல் பொருத்தப்பட்டிருக்கும்) அடிப்படையில் இது கட்டமைக்கப்பட்டுள்ளது. இது நிகரற்ற கம்பீரமான தோற்றத்தையும், உண்மையான ஆஃப்-ரோட் திறனையும் வழங்குகிறது. இது ஒவ்வொரு வருகையையும் ஒரு சிறப்பு நிகழ்வாக மாற்றுகிறது.    மேலதிகமாக, நிலைத்தன்மை மற்றும் அதிக செயல்திறன் கொண்ட போக்குவரத்து தீர்வுகளை நாடும் இலங்கை நுகர்வோருக்கான வாய்ப்புகளை மேலும் விரிவுபடுத்தும் வகையில், DPA நிறுவனம் முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் ORA ரக வாகனங்களையும் அறிமுகப்படுத்த உள்ளது.    புத்தாக்கம் மூலம் இலங்கையின் எதிர்கால போக்குவரத்து துறையை மறுவடிவமைத்தல். புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இலங்கையின் வாகன துறையின்  எதிர்காலத்திற்கான ஒரு மூலோபாய நகர்வாக இந்தக் கூட்டாண்மை அமைகிறது.    GWM-இன் நவீன ஹைப்ரிட் மற்றும் மின்சார தொழில்நுட்பங்கள், DPA-இன் வலுவான நாடு தழுவிய சேவை வலையமைப்புடன் இணைந்து இலங்கை மக்களுக்கு அதிக சுதந்திரத்தையும், சிறந்த செயல்திறனையும், சிறந்த மதிப்பையும், அதிக நம்பிக்கையையும் வழங்குகின்றன.    நிகழ்வில் உரையாற்றிய DPA-இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. மகேஷ், மேலும் கூறியதாவது: "GWM-இன் வாகனங்கள் உலகத் தரம், நம்பிக்கை மற்றும் புதுமையின் அடையாளமாகத் திகழ்கின்றன. டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸின் நம்பகத்தன்மை மற்றும் இணையற்ற சேவையுடன் ஹைப்ரிட் செயல்திறனை அனுபவிக்கும் சுதந்திரத்தை இலங்கை மக்களுக்கு நாங்கள் வழங்குகிறோம்.   " GWM x DPA - GO WITH MORE. GWM மற்றும் DPA-வின் இந்தக் கூட்டாண்மை, வெறும் வாகனங்களை அறிமுகப்படுத்துவதைவிட மேலானதாகும். இது செயல்திறன், நிலைத்தன்மை மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகியவற்றைச் சமநிலைப்படுத்தும் ஒரு புத்திசாலித்தனமான அதிகாரத்தை போக்குவரத்து துறையில்  தொடங்கி வைக்கிறது.    GWM-இன் உலகத் தரப் புதுமை மற்றும் DPA-இன் உள்ளூர் அனுபவம் ஆகியவை கைகோர்ப்பதால், ஒவ்வொரு GWM வாகன உரிமையாளருக்கும் DPA-வின் நான்கு தசாப்த கால நாடு தழுவிய சேவை, முழுமையான உத்தரவாதம் மற்றும் தடையற்ற உதிரிப்பாக விநியோகம் ஆகியவற்றினை பெறமுடியும். இலங்கை மக்களுக்கு இது ஒரு புதிய ஓட்டுநர் அனுபவத்தைத் தொடக்கி  வைக்கிறது.    இந்த அனுபவத்தில், தொழில்நுட்பம் உங்கள் உணர்வுகளுக்கு உற்சாகமளிக்கிறது, விரிவான தேர்வு உங்களுக்கு தன்னம்பிக்கையைத் தருகிறது, மற்றும் எதிர்வரும் பாதை அதிக சுதந்திரத்திற்கும் , உறுதியான நம்பிக்கைக்கும்  உத்தரவாதம் அளிக்கிறது.  

விபரங்களுக்கு
 வெற்றி பெற்ற மாணவர்களுக்காக கொழும்பில் பிரம்மாண்ட பாராட்டு விழா நடத்திய கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோ

வெற்றி பெற்ற மாணவர்களுக்காக கொழும்பில் பிரம்மாண்ட பாராட்டு விழா நடத்திய கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோ

இலங்கையில் மிக பிரசித்தமான புலமைப் பரிசில் ஆசிரியர்களில் ஒருவரான கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோவினால் (Hayeshika Fernando), இம்முறை புலமைப் பரிசில் பரீட்சையில் திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வொன்று Monarch Imperial Hotel வளாகத்தில், கடந்த 20ம் திகதி நடைபெற்றது. Queens Education Campus நிறுவனத்தினால் நடத்தப்பட்ட இந்த நிகழ்வு நான்காவது முறையாகவும் நடந்துள்ளது.கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோ, இன்றளவில் இலங்கையில் மிகப் பிரசித்தமான, மதிப்பிற்குரிய ஒரு டியூஷன் ஆசிரியர் ஆவார். அவ்வாறு ஆவதற்கான காரணம், அவர் மாணவர்கள் மீது வைத்திருக்கும் அளவு கடந்த அன்பு தான். அதனால் தான் இன்று அவரை 'டீச்சர் அம்மா' என்ற brand name அவரது வகுப்புகளில் பங்கேற்கும் மாணவர்கள் மத்தியில் பாவிக்கப்படுகிறது.இம்முறை இந்த கௌரவிப்பு விழா இரண்டு பகுதிகளாக நடந்த அதே வேளை, புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற 6,000க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர். ஒவ்வொரு மாணவருக்கும் பரிசில்கள், சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கி வைக்கப்பட்டன.சமுகமளித்திருந்த ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான சிறுவர்கள் மற்றும் பெற்றோர் கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோ ஆசிரியருடன் உரையாடியமை மட்டுமல்லாமல், புகைப்படங்களும் பெற்றுக் கொண்டனர். மேலும், சிறு சிறுவரகள் அவரைக் கட்டியணைத்து கொண்டமை உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் காட்சியாயிற்று.அதே போல, அன்பான பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் ஒரு நன்றிக்கடனாக, ஏற்கனவே செய்யப்பட்டது போலவே இம்முறையும் வானிலிருந்து பொழிய வைக்கப்பட்ட "அன்பின் பூ மழை" அனைவரது அன்பையும், பாராட்டையும் பெற்றுக் கொண்டது.

விபரங்களுக்கு
பெரிய வெங்காயக் கொள்முதல் திட்டம் ஆரம்பம்: கிலோவுக்கு 130 ரூபா நிர்ணயம்

பெரிய வெங்காயக் கொள்முதல் திட்டம் ஆரம்பம்: கிலோவுக்கு 130 ரூபா நிர்ணயம்

தற்போது பாரிய வெங்காயக் கொள்முதல் திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.இது குறித்துத் தகவல் வெளியிட்டுள்ள பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயம் 130 ரூபா என்ற விலை அடிப்படையில் கொள்முதல் செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.இந்தக் கொள்முதல் நடவடிக்கைகள் சதொச, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் மற்றும் தெரிவு செய்யப்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.தற்போது, தம்புள்ளை, கலாவெவ, பக்கமூன, நாவுல, சிகிரியா மற்றும் கல்கிரியாகம உள்ளிட்ட பல பகுதிகளில் பெரிய வெங்காய அறுவடைகள் இடம்பெற்று வருகின்றன.இதற்கிடையே, நேற்று பக்கமூன நகரில் பெரிய வெங்காய விவசாயிகள் குழுவொன்று தமது உற்பத்திக்கு நியாயமான விலையைக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.சந்தையில் தற்போது வழங்கப்படும் விலைகள் தமது உற்பத்திச் செலவைக் கூட ஈடுசெய்யவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

விபரங்களுக்கு
Entertainment Stories
Explore More
ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ்: ஜூலை மாதம் வெளியாவது உறுதி எனத் தகவல்

ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ்: ஜூலை மாதம் வெளியாவது உறுதி எனத் தகவல்

நீண்ட நாட்களாக இழுபறியிலிருந்த நடிகர் விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தணிக்கை நடவடிக்கைகள் தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தணிக்கைக் குழுவினால் இந்த திரைப்படத்தின் தமிழ் பதிப்பிற்கு ‘ஏ’ (A) சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இந்த நிலையில், தணிக்கை நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதால், திட்டமிட்டபடி இந்த திரைப்படத்தை ஜூலை மாதத்திற்குள்ளேயே உலகளாவிய ரீதியில் வெளியிடுவதற்கு படக்குழுவினர் ஆலோசித்து வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

விபரங்களுக்கு
'ஜெயிலர் 2' படத்தில் ஹிருத்திக் ரோஷனின் திரைநேரம் அதிகரிப்பு? : விஜய் சேதுபதி காட்சிகள் குறைக்கப்படலாம் என எதிர்பார்ப்பு!

'ஜெயிலர் 2' படத்தில் ஹிருத்திக் ரோஷனின் திரைநேரம் அதிகரிப்பு? : விஜய் சேதுபதி காட்சிகள் குறைக்கப்படலாம் என எதிர்பார்ப்பு!

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'ஜெயிலர் 2' திரைப்படத்தில், பொலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனின் கேமியோ (Camio) காட்சிகள் எதிர்பார்த்ததை விட மிகச் சிறப்பாக வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக, படத்தில் அவரது திரைநேரம் (Screen time) அதிகரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதேவேளை, ஹிருத்திக் ரோஷனின் காட்சிகள் அதிகரிக்கப்பட்டதால் படத்தின் மொத்த நீளத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மற்றொரு கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் விஜய் சேதுபதியின் காட்சிகள் சற்று குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற 'ஜெயிலர்' திரைப்படத்தின் தொடர்ச்சியாக இந்த 'ஜெயிலர் 2' திரைப்படம் உருவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
உலக சாதனை படைத்த மைக்கல் ஜெக்சனின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம்

உலக சாதனை படைத்த மைக்கல் ஜெக்சனின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம்

மைக்கல் ஜெக்சனின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான 'மைக்கல்', உலகளவில் 977 மில்லியன் டொலர்களை வசூலித்து, வரலாற்றிலேயே மிக அதிக வசூல் செய்த Biopic திரைப்படமாக சாதனை படைத்துள்ளது. இதன் மூலம், பிரபல இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் 'ஓப்பன்ஹைமர்' திரைப்படத்தின் சாதனையை இது முறியடித்துள்ளது.'பொஹிமியன் ரெப்சோடி' திரைப்படத்தை முறியடித்து ஏற்கனவே அதிக வசூல் செய்த இசைப் படமாக மாறியிருந்த 'மைக்கல்', தற்போது ஒட்டுமொத்த பயோபிக் வரிசையிலும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அத்துடன் இது லயன்ஸ் கேட் (Lionsgate) நிறுவனத்தின் மிக வெற்றிகரமான திரைப்படமாகும்.அந்துவான் ஃபுகுவா இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில், மைக்கல் ஜெக்சனின் சொந்த மருமகனான ஜாபர் ஜெக்சன் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்து பாராட்டைப் பெற்றுள்ளார்.ரசிகர்கள் மத்தியில் திரைப்படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ள போதிலும், மைக்கல் ஜெக்சன் மீதான குற்றச்சாட்டுகளைப் பேச மறுத்து, உண்மைகளை மறைத்த சுத்திகரிக்கப்பட்ட கதையாக இது உள்ளதாக விமர்சகர்கள் கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்துள்ளனர்.இந்த திரைப்படம் வெளியானதைத் தொடர்ந்து, உலகளவில் ஸ்பாட்டிஃபை மற்றும் யூடியூப் தளங்களில் மைக்கல் ஜெக்சனின் பாடல்களைக் கேட்போரின் எண்ணிக்கை அதிரடியாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

விபரங்களுக்கு

"எனது சிக்ஸ் பேக்.." - பேபி பம்ப் புகைப்படத்தைப் பகிர்ந்து நடிகை சமந்தா வேடிக்கையான பதிவு!

தென்னிந்தியத் திரைப்பட நடிகை சமந்தா, தான் கர்ப்பமாக இருப்பதை சமூக வலைத்தளத்தின் மூலம் ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் அவர் பகிர்ந்த புகைப்படத்தில், கர்ப்பிணியாக இருப்பதை உணர்த்தும் வகையில் தனது வயிற்றின் படத்தை வெளியிட்டிருந்தார். அதனுடன், "Baby Bump" என்ற தலைப்பையும் குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவைத் தொடர்ந்து, "எனது சிக்ஸ் பேக், விரைவில் உங்களைப் பார்க்கிறேன்" என்ற நகைச்சுவையான வாசகத்தையும் அவர் பதிவிட்டிருந்ததாக சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. இந்தப் பதிவைத் தொடர்ந்து, ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் சமந்தாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். எனினும், நடிகை சமந்தா இதுகுறித்து அதிகாரபூர்வமாக மேலதிக விளக்கம் எதையும் இதுவரை வெளியிடவில்லை.

விபரங்களுக்கு
அரசியலுக்கு வருகிறாரா நடிகர் சூர்யா? : வதந்திகளுக்கு தலைமை நற்பணி இயக்கம் விளக்கம்!

அரசியலுக்கு வருகிறாரா நடிகர் சூர்யா? : வதந்திகளுக்கு தலைமை நற்பணி இயக்கம் விளக்கம்!

நடிகர் சூர்யா அரசியலுக்கு வரவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல்களுக்கு, அவரது தலைமை நற்பணி இயக்கம் இன்று (29) அதிகாரபூர்வமாக மறுப்பு தெரிவித்துள்ளது.நடிகர் சூர்யா தற்போது அரசியலுக்கு வருவதற்கான எந்தவித திட்டமோ அல்லது எண்ணமோ இல்லை என தலைமை நற்பணி இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.மேலும், சூர்யாவின் நற்பணி இயக்கம் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வரும் கல்வி மற்றும் சமூக நலப் பணிகள் தொடர்ந்தும் வழக்கம்போல முன்னெடுக்கப்படும் என்றும், சமூக சேவைகளே சூர்யாவுக்கு மனநிறைவை வழங்குகின்றன என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.அத்துடன், சூர்யா நற்பணி இயக்கக் கூட்டத்தில் ரா. வீரமணி வெளியிட்ட கருத்துக்கள் அவரது தனிப்பட்ட கருத்துக்களே தவிர, இயக்கத்தின் நிலைப்பாட்டை பிரதிபலிப்பவை அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் கடந்த மூன்று ஆண்டுகளாக நற்பணி இயக்கத்தின் நிர்வாகப் பொறுப்பில் இல்லையெனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.எனவே, நடிகர் சூர்யா தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் ஆதாரமற்ற தகவல்கள் மற்றும் வதந்திகளைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என அவரது தலைமை நற்பணி இயக்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

விபரங்களுக்கு
நடிகர் ரவி மோகனின் இல்லத்தில் திருட்டு: மகன் மீதும் முறைப்பாடு பதிவு!

நடிகர் ரவி மோகனின் இல்லத்தில் திருட்டு: மகன் மீதும் முறைப்பாடு பதிவு!

பிரபல நடிகர் ரவி மோகனின் வீட்டில் பணம் மற்றும் வைரம் திருடப்பட்டுள்ளதாகக் காவல் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. சென்னையின் நீலாங்கரையில் அமைந்துள்ள அவரது இல்லத்திலிருந்து ரூ. 3 இலட்சம் ரொக்கப் பணம் மற்றும் வைரம் (டைமண்ட்) செயின் திருடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திருட்டுச் சம்பவம் தொடர்பாக, நடிகரின் மேனேஜர் நீலாங்கரை காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக வீட்டில் பணிபுரியும் 2 சாரதிகள், ஒரு பி.ஏ (P.A), ஒரு பணிப்பெண் மற்றும் அவரது மகன் மீது சந்தேகம் இருப்பதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்த மேலதிக விசாரணைகளை நீலாங்கரை காவல்துறை முன்னெடுத்து வருகிறது.

விபரங்களுக்கு
சுப்பர் ஸ்டார் - உலக நாயகன் கூட்டணி: ரஜினியின் அடுத்த அதிரடி 'தர்மன்' - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சுப்பர் ஸ்டார் - உலக நாயகன் கூட்டணி: ரஜினியின் அடுத்த அதிரடி 'தர்மன்' - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

கமல்ஹாசன் தயாரிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் படத்திற்கு ‘தர்மன்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த திரைப்பட விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், நடிகை சிம்ரன், இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் ‘தர்மன்’ திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதுடன் ரஜினிகாந்த் மருத்துவர் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் இந்த திரைப்படம் படையப்பா, வேட்டையாடு விளையாடு திரைப்படங்களின் கலவையாக பொழுதுபோக்கு நிறைந்த த்ரில்லர் படமாக உருவாகும் என தெரிவித்துள்ளார்.

விபரங்களுக்கு
Hiru TV News | Programmes
/////////////////////////////////////////////// Commented on 2025-09-17 ////////////////////////////////////////////////////