General12 July 2026

பின்னணிப் பாடகி எஸ். ஜானகி மறைவு - நடிகை த்ரிஷா உருக்கமான இரங்கல்

பின்னணிப் பாடகி எஸ். ஜானகி (88) காலமானதை அடுத்து, அவருக்குத் திரையுலகினர் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

முதுமையால் ஏற்படும் உடல்நல பாதிப்பு காரணமாக அவர் சனிக்கிழமை (11) காலமானார்.

இது குறித்து நடிகை த்ரிஷா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில், "என்னுடைய மிகவும் சிறப்பான திரைப்படங்களில் ஒன்றில் உங்கள் பெயரை சுமந்துச் செல்வது, என் வாழ்நாளின் மிகப்பெரிய கௌரவங்களில் ஒன்றாக என்றென்றும் திகழும்.

ஆனால், உங்களை அறிந்துகொண்டதும், உங்கள் அன்பைப் பெற்றதும் நான் என்றென்றும் போற்றிப் பாதுகாக்கும் ஒரு விடயமாக இருக்கும்.

உங்கள் அரவணைப்பு, கனிவு, சிரிப்பு மற்றும் 'சிறந்த கலைஞர்கள் எப்போதும் மிகவும் அன்பான உள்ளம் கொண்டவர்கள் என்பதை எனக்கு நினைவூட்டியதற்கு நன்றி.

உங்கள் குரல் என்றென்றும் நிலைத்திருக்கும் அமைதியாக இளைப்பாறுங்கள் ஜானகி அம்மா, உங்களை நான் மிகவும் மிஸ் செய்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes