Video of the Day
Latest TV News Bulletin
Most Top News

2027 வரவு செலவுத் திட்டத்தில் இந்து கலாசார திணைக்களத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு கோரிக்கை!" – சுந்தரலிங்கம் பிரதீப் தகவல்.

General 15 August 2026
2027 வரவு செலவுத் திட்டத்தில் இந்து கலாசார திணைக்களத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு கோரிக்கை!" – சுந்தரலிங்கம் பிரதீப் தகவல்.

சந்திப்புக் காணொளிகளை கோருகிறது சட்டத்தரணிகள் சங்கம் - ஜனாதிபதி ஊடகப் பிரிவு பதில்!

General 15 August 2026
சந்திப்புக் காணொளிகளை கோருகிறது சட்டத்தரணிகள் சங்கம் - ஜனாதிபதி ஊடகப் பிரிவு பதில்!

மலையகத்தில் போதைப்பொருள் பழக்கத்தை ஒழிக்க ஆன்மீக விழிப்புணர்வு!" – சுந்தரலிங்கம் பிரதீப் அதிரடித் திட்டம்.

General 15 August 2026
மலையகத்தில் போதைப்பொருள் பழக்கத்தை ஒழிக்க ஆன்மீக விழிப்புணர்வு!" – சுந்தரலிங்கம் பிரதீப் அதிரடித் திட்டம்.

இந்துக்களிடையே பிளவுகளைக் கடந்து வலுவான தலைமைத்துவம் தேவை – சுந்தரலிங்கம் பிரதீப்

General 15 August 2026
இந்துக்களிடையே பிளவுகளைக் கடந்து வலுவான தலைமைத்துவம் தேவை – சுந்தரலிங்கம் பிரதீப்

வத்தளை மஹாபாகேவில் உள்ள நகைக்கடை ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் கட்டுபாட்டுக்குள் : உயிர்சேதங்கள் பதிவாகவில்லை !

General 15 August 2026
வத்தளை மஹாபாகேவில் உள்ள நகைக்கடை ஒன்றில் ஏற்பட்ட  தீப்பரவல் கட்டுபாட்டுக்குள் : உயிர்சேதங்கள் பதிவாகவில்லை !

"பெரிய திமிங்கலங்கள் விரைவில் அகப்படுவார்கள்!" – பெருந்தோட்ட பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அதிரடி!

General 15 August 2026
"பெரிய திமிங்கலங்கள் விரைவில் அகப்படுவார்கள்!" – பெருந்தோட்ட பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அதிரடி!
International News

அமெரிக்காவின் வெர்ஜீனியா மாநிலப் பல்கலைக்கழகத்துக்கு அருகில் துப்பாக்கிச் சூடு: ஐவர் காயம்!

International 15 August 2026
அமெரிக்காவின் வெர்ஜீனியா மாநிலப் பல்கலைக்கழகத்துக்கு அருகில் துப்பாக்கிச் சூடு: ஐவர் காயம்!

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 38 பேர் உயிரிழப்பு; பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அச்சம்!

International 15 August 2026
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 38 பேர் உயிரிழப்பு; பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அச்சம்!

கடவுளுக்கு நன்றி!” – சுதந்திர தின நிகழ்வில் முதலமைச்சரின் தாய் உருக்கம்

International 15 August 2026
கடவுளுக்கு நன்றி!” – சுதந்திர தின நிகழ்வில் முதலமைச்சரின் தாய் உருக்கம்

இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம் : செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி!

International 15 August 2026
இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம் : செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி!

சென்னை புனித ஜோர்ஜ் கோட்டையில் முதலமைச்சர் விஜய் தேசியக் கொடி ஏற்றினார்!

International 15 August 2026
சென்னை புனித ஜோர்ஜ் கோட்டையில் முதலமைச்சர் விஜய் தேசியக் கொடி ஏற்றினார்!

விஜய் தலைமையிலான சுதந்திர தின விழாவில் முதல் வரிசையில் வந்து அமர்ந்த நடிகை திரிஷா

International 15 August 2026
விஜய் தலைமையிலான சுதந்திர தின விழாவில் முதல் வரிசையில் வந்து அமர்ந்த நடிகை திரிஷா

மத்திய கிழக்கு பதற்றம்: அமெரிக்காவின் கடும் எச்சரிக்கை மற்றும் ஹிஸ்புல்லாவின் எதிர்ப்பு

International 15 August 2026
மத்திய கிழக்கு பதற்றம்: அமெரிக்காவின் கடும் எச்சரிக்கை மற்றும் ஹிஸ்புல்லாவின் எதிர்ப்பு

பிரான்சில் 15 வயதுக்குட்பட்டவர்களுக்கான சமூக ஊடகத் தடைக்கு உயர் நீதிமன்றம் மறுப்பு

International 15 August 2026
பிரான்சில் 15 வயதுக்குட்பட்டவர்களுக்கான சமூக ஊடகத் தடைக்கு உயர் நீதிமன்றம் மறுப்பு

தினசரி குறைந்தளவு உடற்பயிற்சியும் நீண்டகால ஆரோக்கிய நன்மைகளும்

International 15 August 2026
தினசரி குறைந்தளவு உடற்பயிற்சியும் நீண்டகால ஆரோக்கிய நன்மைகளும்

வெள்ளை மாளிகையின் பிரமாண்ட நிர்மாணிப்புக்கு அனுமதிக் கோரி உயர்நீதிமன்றை நாடிய டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம்

International 15 August 2026
வெள்ளை மாளிகையின் பிரமாண்ட நிர்மாணிப்புக்கு அனுமதிக் கோரி உயர்நீதிமன்றை நாடிய டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம்

ஆசிய கால்பந்து கூட்டமைப்புக்குள் பிளவு?

International 15 August 2026
ஆசிய கால்பந்து கூட்டமைப்புக்குள் பிளவு?

ஜப்பானில் பெய்த கனமழையால் பேரழிவு: மக்களின் இயல்பு வாழ்க்கையின் நிலை என்ன ?

International 14 August 2026
ஜப்பானில் பெய்த கனமழையால் பேரழிவு: மக்களின் இயல்பு வாழ்க்கையின் நிலை என்ன ?

கீரியும்,பாம்புமாக செயற்படும் விஜய்யும் உதயநிதியும் -விவாதமாகும் மோதல் போக்கு

International 14 August 2026
 கீரியும்,பாம்புமாக செயற்படும் விஜய்யும் உதயநிதியும் -விவாதமாகும் மோதல் போக்கு

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!

International 14 August 2026
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு : அரசுப் பணி ஆணை இரத்துக்கு எதிர்ப்பு - உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!

International 14 August 2026
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு : அரசுப் பணி ஆணை இரத்துக்கு எதிர்ப்பு - உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!
More News
General15 August 2026

அடுத்தடுத்து நடைபெற்ற கொடூரச் சம்பவங்கள் : மாணவர் ஒருவர் உட்பட மூவர் பலி, இருவர் கைது

சென்னையில் ஒரே நாளில் 12ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் உட்பட மூவர் கொடூரமான முறையில் உயிரிழந்த சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளன. இந்த சம்பவங்கள் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.சென்னை திருவொற்றியூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பாடசாலையில் 12ஆம் வகுப்பில் கல்வி கற்றுவந்த மாணவர் ஒருவர், பாடசாலை முடிவடைந்து வீட்டுக்குச் செல்வதற்காக பேருந்துக்காகக் காத்திருந்தபோது, சக மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறில் தாக்கப்பட்டுள்ளார்.குறித்த தாக்குதலில் படுகாயமடைந்த மாணவர், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.இதேவேளை, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நீச்சல் தடாகத்துக்கு அருகில் இளைஞர் ஒருவரின் உடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.குறித்த இளைஞரின் தலை மற்றும் உடல் பகுதிகளில் பலத்த காயங்கள் காணப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பான விசாரணையில், உயிரிழந்தவர் நேபாளத்தைச் சேர்ந்தவர் எனக் கண்டறியப்பட்டுள்ளது. பணப்பரிவர்த்தனை தொடர்பான தகராறில் அவர் தாக்கப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்படும் பீகாரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.அத்துடன், திருவள்ளூர் மாவட்டம் சாணாபுத்தூர் கிராமத்தில் கூலித் தொழிலாளி ஒருவர் வயல்வெளியில் இரத்தக் காயங்களுடன் உடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.மது போதையில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்தச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பாக உயிரிழந்தவரின் நண்பர் ஒருவர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இந்த மூன்று சம்பவங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகள் காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

விபரங்களுக்கு
அடுத்தடுத்து நடைபெற்ற கொடூரச் சம்பவங்கள் : மாணவர் ஒருவர் உட்பட மூவர் பலி, இருவர் கைது
General15 August 2026

இலங்கையில் 25,000க்கும் மேற்பட்டோர் அறுவை சிகிச்சைகளுக்காக காத்திருப்பு – சில சிகிச்சைகளுக்கு 2029 வரை காலக்கெடு

இலங்கையின் அரச மருத்துவமனைகளில் 25,000க்கும் மேற்பட்ட நோயாளிகள் இருதய அறுவை சிகிச்சைகள், முக்கிய அறுவை சிகிச்சைகள் மற்றும் அத்தியாவசிய மருத்துவப் பரிசோதனைகளுக்காக காத்திருப்புப் பட்டியலில் உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில், சில இருதய அறுவை சிகிச்சைகளுக்கான காத்திருப்பு காலம் 2029ஆம் ஆண்டு வரை நீடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அரச சுகாதாரத் துறையில் அதிகரித்து வரும் காத்திருப்புப் பட்டியல் நெரிசலைக் குறைப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர், நிபுணத்துவ மருத்துவர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்தக் கருத்துக்களை முன்வைத்துள்ளார்.அரச மருத்துவமனைகளில் நிலவும் காத்திருப்புப் பட்டியலைக் குறைப்பதற்காக ஜனாதிபதி நிதியத்திலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அரசாங்கம் அறிவித்திருந்த போதிலும், அந்தத் திட்டம் எதிர்பார்த்த அளவில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.நீண்டகாலமாக சிகிச்சைக்காகக் காத்திருக்கும் நோயாளிகளில், தனியார் மருத்துவமனைகளில் அதிக செலவில் சிகிச்சை பெற முடியாத குறைந்த வருமானம் கொண்டவர்களே அதிகம் பாதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இதற்குத் தீர்வாக, ஜனாதிபதி நிதியத்தின் ஒதுக்கீடுகளை அதிகரித்து, அரச மருத்துவமனைகளில் காத்திருக்கும் நோயாளிகள் குறிப்பிட்ட கட்டண அடிப்படையில் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்கான வசதிகளை ஏற்படுத்தலாம் என அவர் யோசனை முன்வைத்துள்ளார்.அதேவேளை, அரச மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு மேலதிக சேவைக்கான உரிய கொடுப்பனவுகளை வழங்கி, தினசரி மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.நீண்டகாலத் தீர்வாக, சிறப்பு மருத்துவப் பயிற்சி பெற்ற மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், மருத்துவமனை வசதிகளை விரிவுபடுத்துதல் மற்றும் அறுவை சிகிச்சை உள்ளிட்ட மருத்துவப் பரிசோதனைகளுக்குத் தேவையான உபகரணங்களின் போதுமான இருப்பை உறுதி செய்தல் அவசியம் என்றும் நிபுணத்துவ மருத்துவர் சமல் சஞ்சீவ வலியுறுத்தியுள்ளார்.

விபரங்களுக்கு
இலங்கையில் 25,000க்கும் மேற்பட்டோர் அறுவை சிகிச்சைகளுக்காக காத்திருப்பு – சில சிகிச்சைகளுக்கு 2029 வரை காலக்கெடு
General15 August 2026

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இந்திய சுதந்திர தின நிகழ்வு

இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இன்று (15) சுதந்திர தின நிகழ்வு நடைபெற்றது. யாழ்ப்பாணம் கச்சேரியடியில் அமைந்துள்ள இந்திய துணைத் தூதரக வளாகத்தில் காலை 9 மணியளவில், துணைத் தூதர் சாய் முரளி இந்திய தேசியக் கொடியை ஏற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.இதனைத் தொடர்ந்து, இந்திய குடியரசுத் தலைவரின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தியை துணைத் தூதர் சாய் முரளி வாசித்தார்.இந்த நிகழ்வில் இந்திய துணைத் தூதரக அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

விபரங்களுக்கு
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இந்திய சுதந்திர தின நிகழ்வு
General15 August 2026

சிறுவர் உழைப்பு தடுப்புச் சட்டத்தில் திருத்தம்: அபராதம் 1 இலட்சமாக அதிகரிப்பு!

பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை வேலையில் அமர்த்துதல் தொடர்பான 1956ஆம் ஆண்டின் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளும் புதிய சட்டமூலத்தின் ஊடாக, சட்ட மீறல்களுக்கான அபராதத்தை 10 ஆயிரம் ரூபாவிலிருந்து ஒரு இலட்சம் ரூபா வரை அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது. சர்வதேச தொழிலாளர் அமைப்பின் உடன்படிக்கைகளுக்கு அமைவாக இலங்கையின் தொழிலாளர் சட்டங்களை மாற்றியமைக்கும் நோக்கில் இந்தத் திருத்தம் முன்வைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஆகஸ்ட் 20ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இரண்டாம் வாசிப்புக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள இந்தச் சட்டமூலம், நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ராஜபக்ஸ தலைமையிலான கல்வி, மனிதவளம் மற்றும் மனித மூலதனம் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவில் அண்மையில் ஆராயப்பட்டது. தற்போதுள்ள அபராதத் தொகைகள் சட்ட மீறல்களைத் தடுப்பதற்குப் போதுமானதாக இல்லை என தொழில் அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், இந்தத் திருத்தம் காலத்தின் தேவையாகும் எனக் குறிப்பிட்டு குழுவினால் சட்டமூலத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய சட்டத்தின்படி, 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதுடன், 16 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களின் வேலைவாய்ப்புகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. அவர்களின் சுகாதாரம், பாதுகாப்பு அல்லது ஒழுக்கத்தைப் பாதிக்கக்கூடிய அபாயகரமான தொழில்களில் அவர்களை ஈடுபடுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 2003ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களின்படி, சட்டத்தை மீறுவோருக்கு நீதிமன்றத்தினால் 10 ஆயிரம் ரூபா வரை அபராதம், 12 மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்க முடியும். பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கும் சட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதிய சட்டமூலத்தின் மூலம், சட்டத்தின் 7(3), 13(2) மற்றும் 20(a)(3) ஆகிய பிரிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள அபராதத் தொகைகள் அதிகரிக்கப்படவுள்ளன. இதேவேளை, குறித்த குழுக் கூட்டத்தில் தொழில் அமைச்சு, தொழிலாளர் திணைக்களம் உள்ளிட்ட நிறுவனங்களின் வருடாந்த செயல்திறன் அறிக்கைகளும் பரிசீலிக்கப்பட்டுள்ளன.

விபரங்களுக்கு
சிறுவர் உழைப்பு தடுப்புச் சட்டத்தில் திருத்தம்:  அபராதம் 1  இலட்சமாக அதிகரிப்பு!
General15 August 2026

திருமண நிதி உதவி இரண்டு மடங்காக அதிகரிப்பு: சுதந்திர தினத்தில் முதலமைச்சர் விஜய்யின் முக்கிய அறிவிப்பு

இந்தியாவின் 80 ஆவது சுதந்திர தினத்தையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் முதன்முறையாக முதலமைச்சர் விஜய் தேசிய கொடி ஏற்றினார். இதையடுத்து விடுதலை போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான 5 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, முன்னாள் படை வீரர்களின் அவர்களது 2 மகள்களுக்கும் வழங்கப்படும் திருமண நிதி உதவி ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.50,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். மாற்றுத்திறன் கொண்ட படைவீரர்கள் மற்றும் அவர்கள் சார்ந்தவர்களுக்கு வழங்கப்பட்ட மாதந்திர நிதி உதவி ரூ.5000-த்தில் இருந்து ரூ.7000 ஆக உயர்த்தப்படுகிறது. மாநில அரசால் விடுதலை போராட்ட வீரர்களுக்கு வழங்கப்படும் மாதந்திர ஓய்வூதியம் ரூ.23,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். மாநில அரசால் விடுதலை போராட்ட வீரர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் மாதந்திர ஓய்வூதியம் ரூ.12,500 ஆக உயர்த்தப்படும். வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள் மற்றும் வ.உ.சிதம்பரம் உள்ளிட்டோர் வழித்தோன்றல்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாதந்திர ஓய்வூதியம் ரூ.11,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தார்.

விபரங்களுக்கு
திருமண நிதி உதவி இரண்டு மடங்காக அதிகரிப்பு: சுதந்திர தினத்தில் முதலமைச்சர் விஜய்யின் முக்கிய அறிவிப்பு
International News

அமெரிக்காவின் வெர்ஜீனியா மாநிலப் பல்கலைக்கழகத்துக்கு அருகில் துப்பாக்கிச் சூடு: ஐவர் காயம்!

International 15 August 2026
அமெரிக்காவின் வெர்ஜீனியா மாநிலப் பல்கலைக்கழகத்துக்கு அருகில் துப்பாக்கிச் சூடு: ஐவர் காயம்!

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 38 பேர் உயிரிழப்பு; பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அச்சம்!

International 15 August 2026
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 38 பேர் உயிரிழப்பு; பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அச்சம்!

கடவுளுக்கு நன்றி!” – சுதந்திர தின நிகழ்வில் முதலமைச்சரின் தாய் உருக்கம்

International 15 August 2026
கடவுளுக்கு நன்றி!” – சுதந்திர தின நிகழ்வில் முதலமைச்சரின் தாய் உருக்கம்

இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம் : செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி!

International 15 August 2026
இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம் : செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி!

சென்னை புனித ஜோர்ஜ் கோட்டையில் முதலமைச்சர் விஜய் தேசியக் கொடி ஏற்றினார்!

International 15 August 2026
சென்னை புனித ஜோர்ஜ் கோட்டையில் முதலமைச்சர் விஜய் தேசியக் கொடி ஏற்றினார்!

விஜய் தலைமையிலான சுதந்திர தின விழாவில் முதல் வரிசையில் வந்து அமர்ந்த நடிகை திரிஷா

International 15 August 2026
விஜய் தலைமையிலான சுதந்திர தின விழாவில் முதல் வரிசையில் வந்து அமர்ந்த நடிகை திரிஷா

மத்திய கிழக்கு பதற்றம்: அமெரிக்காவின் கடும் எச்சரிக்கை மற்றும் ஹிஸ்புல்லாவின் எதிர்ப்பு

International 15 August 2026
மத்திய கிழக்கு பதற்றம்: அமெரிக்காவின் கடும் எச்சரிக்கை மற்றும் ஹிஸ்புல்லாவின் எதிர்ப்பு

பிரான்சில் 15 வயதுக்குட்பட்டவர்களுக்கான சமூக ஊடகத் தடைக்கு உயர் நீதிமன்றம் மறுப்பு

International 15 August 2026
பிரான்சில் 15 வயதுக்குட்பட்டவர்களுக்கான சமூக ஊடகத் தடைக்கு உயர் நீதிமன்றம் மறுப்பு

தினசரி குறைந்தளவு உடற்பயிற்சியும் நீண்டகால ஆரோக்கிய நன்மைகளும்

International 15 August 2026
தினசரி குறைந்தளவு உடற்பயிற்சியும் நீண்டகால ஆரோக்கிய நன்மைகளும்

வெள்ளை மாளிகையின் பிரமாண்ட நிர்மாணிப்புக்கு அனுமதிக் கோரி உயர்நீதிமன்றை நாடிய டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம்

International 15 August 2026
வெள்ளை மாளிகையின் பிரமாண்ட நிர்மாணிப்புக்கு அனுமதிக் கோரி உயர்நீதிமன்றை நாடிய டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம்

ஆசிய கால்பந்து கூட்டமைப்புக்குள் பிளவு?

International 15 August 2026
ஆசிய கால்பந்து கூட்டமைப்புக்குள் பிளவு?

ஜப்பானில் பெய்த கனமழையால் பேரழிவு: மக்களின் இயல்பு வாழ்க்கையின் நிலை என்ன ?

International 14 August 2026
ஜப்பானில் பெய்த கனமழையால் பேரழிவு: மக்களின் இயல்பு வாழ்க்கையின் நிலை என்ன ?

கீரியும்,பாம்புமாக செயற்படும் விஜய்யும் உதயநிதியும் -விவாதமாகும் மோதல் போக்கு

International 14 August 2026
 கீரியும்,பாம்புமாக செயற்படும் விஜய்யும் உதயநிதியும் -விவாதமாகும் மோதல் போக்கு

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!

International 14 August 2026
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு : அரசுப் பணி ஆணை இரத்துக்கு எதிர்ப்பு - உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!

International 14 August 2026
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு : அரசுப் பணி ஆணை இரத்துக்கு எதிர்ப்பு - உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!
Sports Stories
Explore More
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் முடிவு!

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் முடிவு!

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் தேவ்தட் படிக்கல் தனது முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்துள்ளார். இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதன்படி, இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று ஆரம்பமானது. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. அதற்கமைய, முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, இன்றைய ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்களை இழந்து 288 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. உணவு இடைவேளைக்கு பின்னர் காலநிலை மாற்றத்தினால் போட்டி தாமததாகவே ஆரம்பிக்கப்பட்டதால், முதல் நாளில் 73 ஓவர்கள் மாத்திரமே வீசப்பட்டன. இதனிடையே, காயம் காரணமாக கே.எல். ராகுல் ‘ரிட்டையர்ட் ஹேர்ட்’ முறையில் வெளியேறினார். இதன்போது ராகுல் மற்றும் படிக்கல் ஜோடி 150 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்றிருந்தது. தொடர்ந்து சிறப்பாக துடுப்பெடுத்தாடிய தேவ்தட் படிக்கல், தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் முதலாவது சதத்தை பதிவு செய்து 131 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்காதுள்ளார்.

விபரங்களுக்கு
இந்திய அணியை வழிநடத்துவது பெரும் கௌரவம் – 600ஆவது டெஸ்ட் போட்டி சிறப்பான தருணம் என சுப்மன் கில் தெரிவிப்பு

இந்திய அணியை வழிநடத்துவது பெரும் கௌரவம் – 600ஆவது டெஸ்ட் போட்டி சிறப்பான தருணம் என சுப்மன் கில் தெரிவிப்பு

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதன் முதலாவது டெஸ்ட் போட்டி இன்று காலை 10 மணிக்கு காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமானது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணியின் தலைவர் சுப்மன் கில், முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார். இதன்போது கருத்து தெரிவித்த அவர், ஆடுகளமும் வானிலையும் சாதகமாக இருப்பதால், துடுப்பாட்டத்திற்கு இது சிறந்த நாளாக அமையும் என நம்பிக்கை வெளியிட்டார். மேலும், கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களுடன் களமிறங்கியுள்ளதாகவும், அணியில் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் என ஐந்து பந்துவீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்திய அணியை வழிநடத்தும் ஒவ்வொரு சந்தர்ப்பமும் தமக்கு மிகப்பெரிய கௌரவம் எனக் குறிப்பிட்ட சுப்மன் கில், இன்றைய போட்டி இந்தியாவின் சுதந்திர தினத்தன்றும், தமது 600ஆவது டெஸ்ட் போட்டியாகவும் அமைந்திருப்பதால் இது தங்களுக்கு மிகவும் சிறப்பான தருணம் எனவும் தெரிவித்துள்ளார்.

விபரங்களுக்கு
போட்டி நடுவே தோழிக்கு குறுஞ்செய்தி - தமிழ்நாடு வீரருக்கு நேர்ந்த கதி

போட்டி நடுவே தோழிக்கு குறுஞ்செய்தி - தமிழ்நாடு வீரருக்கு நேர்ந்த கதி

தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியின்போது, வீரர்கள் மற்றும் போட்டி அதிகாரிகளுக்காக ஒதுக்கப்பட்ட பாதுகாப்புப் பகுதியில் தொலைபேசியைப் பயன்படுத்திய 26 வயதான தமிழக இடது கை துடுப்பாட்ட வீரருக்கு ரூ.1 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. போட்டியின்போது குறித்த வீரர் தனது தோழிக்கு குறுஞ்செய்தி அனுப்பியதாகத் தெரிவிக்கப்படுகிறது. வீரர்கள் போட்டி நடைபெறும் பகுதியில் தொலைபேசிகளைப் பயன்படுத்துவது விதிகளின்படி தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், அதனை மீறியதற்காக இந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.எனினும், குறித்த வீரர் மீது ஆட்ட நிர்ணயம் அல்லது சூதாட்டம் தொடர்பான எந்தவொரு குற்றச்சாட்டும் முன்வைக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆரம்பத்தில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் போட்டித் தடை விதிப்பது குறித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் பரிசீலித்ததாகவும், பின்னர் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லாததால் ரூ.1 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.குறித்த சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால், வீரரின் பெயர் மற்றும் அடையாள விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.எனினும், அவர் கடந்த ரஞ்சி கிண்ணத் தொடரில் தமிழ்நாடு அணிக்காக விளையாடி இரண்டு அரைசதங்களைப் பதிவு செய்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், தற்போது நடைபெற்று வரும் தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் எஞ்சிய போட்டிகளில் விளையாடுவதிலிருந்து குறித்த வீரர் தற்காலிகமாக விலக்கப்பட்டுள்ளார்.

விபரங்களுக்கு
இந்தியா – ஆப்கானிஸ்தான் டி20 தொடர் - அட்டவணை மாற்றம் குறித்து பரிசீலனை!

இந்தியா – ஆப்கானிஸ்தான் டி20 தொடர் - அட்டவணை மாற்றம் குறித்து பரிசீலனை!

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 சர்வதேச தொடரின் அட்டவணையில் மாற்றம் செய்யப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதைய அட்டவணையின்படி, இரு அணிகளுக்கும் இடையிலான போட்டிகள் செப்டம்பர் 13, 15 மற்றும் 17ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன. மூன்று போட்டிகளும் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், தொடரை ஆப்கானிஸ்தான் அதிகாரப்பூர்வமாக நடத்துகிறது.இந்த நிலையில், அட்டவணையில் மாற்றம் செய்வது தொடர்பாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையுடன் (BCCI) கலந்துரையாடி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதன்படி, மூன்று போட்டிகளில் முதலாவது அல்லது இரண்டாவது போட்டியை செப்டம்பர் 14ஆம் திகதிக்கு மாற்றுவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.எனினும், அட்டவணை மாற்றம் தொடர்பில் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.இந்தத் தொடரானது இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான வளர்ந்து வரும் இருதரப்பு கிரிக்கெட் உறவின் மற்றுமொரு முக்கிய கட்டமாக அமையும் என BCCI தெரிவித்துள்ளது.ஆப்கானிஸ்தான் அணி கடைசியாக கடந்த ஜூன் மாதம் இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. அதற்கு முன்னதாக, 2024 ஜனவரியில் இரு அணிகளும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதியிருந்தன.

விபரங்களுக்கு
இலங்கை - இந்திய டெஸ்ட் தொடருக்கான செம்பியன் கிண்ணம் அறிமுகம்!

இலங்கை - இந்திய டெஸ்ட் தொடருக்கான செம்பியன் கிண்ணம் அறிமுகம்!

இலங்கை மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடருக்கான செம்பியன் கிண்ணம் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வில், இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தனஞ்சய டி சில்வா மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் சுப்மன் கில் ஆகியோர் இணைந்து இந்த டெஸ்ட் தொடருக்கான கிண்ணத்தை அறிமுகம் செய்து வைத்தனர்.இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

விபரங்களுக்கு
டிக்வெல்லவின் மீள்வருகை - பின்னணி காரணத்தை வெளிப்படுத்திய தனஞ்சய டி சில்வா

டிக்வெல்லவின் மீள்வருகை - பின்னணி காரணத்தை வெளிப்படுத்திய தனஞ்சய டி சில்வா

இந்தியாவுக்கு எதிராக இடம்பெறவுள்ள டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணியில் விக்கெட் காப்பாளர் நிரோஷன் டிக்வெல்ல சேர்க்கப்பட்டதற்கான பின்னணி காரணங்களை அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர்களின் ஆலோசனையுடன் தலைவர் தனஞ்சய டி சில்வா தெளிவுபடுத்தியுள்ளார்.ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த தனஞ்சய டி சில்வா, ஆரம்பத்தில் குசல் மெண்டிஸ் இலக்கம் 7 இல் களமிறக்கப்பட்டதால் டிக்வெல்ல அணியில் சேர்க்கப்படவில்லை எனக் குறிப்பிட்டார். இருப்பினும், குசல் மெண்டிஸ் காயம் காரணமாக டெஸ்ட் தொடரிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, டிக்வெல்ல மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்."காலி மைதானத்தில் விளையாடும் போது, மிகச்சிறந்த விக்கெட் காப்புத் திறன் கொண்ட ஒருவரைக் கொண்டிருப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். தெரிவாளர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது. விக்கெட் காப்புத் திறனைக் கருத்திற் கொள்ளும்போது டிக்வெல்ல முன்னணி வீரர்களில் ஒருவராக உருவெடுத்தார்."இரண்டு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நாளை (15) காலியில் ஆரம்பமாகவுள்ளதுடன், இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 23 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.

விபரங்களுக்கு
Business Stories
Explore More
சுத்தமாக்கப்பட்ட சிவனொளிபாதமலை : சியபத பினான்ஸின் பசுமை முன்னெடுப்பு திட்டம்

சுத்தமாக்கப்பட்ட சிவனொளிபாதமலை : சியபத பினான்ஸின் பசுமை முன்னெடுப்பு திட்டம்

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, தனது 21ஆவது ஆண்டு நிறைவு மற்றும் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்திருந்த '2026 சிவனொளிபாதமலை சுத்திகரிப்பு திட்டம்' வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. கடந்த ஜூன் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது. சியபத பினான்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மதிஷ ஹேவவித்தாரண மற்றும் சிரேஷ்ட நிர்வாகக் குழுவின் தலைமையில், 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இந்தத் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். இதன்போது ஒரே நாளில் சுமார் ஒரு டொன் அளவிலான பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டது. அத்துடன் புனித ஸ்தலத்தைப் பாதுகாப்பதற்கான கழிவு முகாமைத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான சிவனொளிபாதமலை சரணாலயம், நாட்டின் அபூர்வ தாவரங்கள், விலங்கினங்கள் மற்றும் களனி, களு, வளவை ஆகிய முக்கிய ஆறுகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளைக் கொண்டுள்ள சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும். அதிகரித்து வரும் யாத்ரீகர்களின் வருகையால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் குறைப்பதே இந்த திட்டத்தின் பிரதான நோக்கமாகும். சிவனொளிபாதமலை முதன்மை தலைமைத் துறவி பெங்கமுவே தம்மதின்ன தேரரின் வழிகாட்டுதலின் கீழ், மஸ்கெலிய பிரதேச சபை, வனவிலங்கு பாதுகாப்புத் துறை மற்றும் நல்லதண்ணி காவல்துறை ஆகியவற்றின் முழுமையான ஆதரவுடன் இந்த கூட்டுப் பாதுகாப்பு முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

விபரங்களுக்கு
பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்த வீரர்களுக்கு டயலொக் நிறுவனம் சிறப்பு கௌரவம்

பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்த வீரர்களுக்கு டயலொக் நிறுவனம் சிறப்பு கௌரவம்

இலங்கையின் முதன்மைத் தொலைத்தொடர்புச் சேவை வழங்கியும் விளையாட்டுத்துறையின் பிரதான அனுசரணையாளருமான Dialog Axiata PLC நிறுவனம், இந்தமுறை பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்குப் பெருமை சேர்த்த வீரர்களைச் சிறப்பாகக் கெளரவித்துள்ளது.இதற்கமைய, நேற்று (05) இடம்பெற்ற பொதுநலவாய விளையாட்டு வீரர்களுக்கான மக்கள் வரவேற்பு வீதிப் பேரணியின் போது, Dialog Axiata PLC நிறுவனத்தின் தலைமை அலுவலக வளாகத்தில் இந்த கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது.பொதுநலவாய விளையாட்டு வரலாற்றில் தடகளப் பிரிவில் இலங்கைக்காக முதன்முறையாகத் தங்கம் வென்ற ருமேஷ் தரங்க மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பாலித பண்டார ஆகியோருக்கு, Dialog Axiata PLC நிறுவனத்தின் குழுமத் தலைமைச் செயல் அதிகாரி சுபுன் வீரசிங்கவினால் சிறப்புப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.2028 லொஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக் போட்டி வரை இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவின் உத்தியோகபூர்வ தொலைத்தொடர்பு பங்காளியாகச் செயற்படும் டயலொக் நிறுவனம், நாட்டின் முதன்மை ஒலிம்பிக் எதிர்பார்ப்பான ருமேஷ் தரங்க உள்ளிட்ட திறமையாளர்களையும், மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுத்துறையின் முதன்மை அனுசரணையாளராகப் பாலித பண்டார உள்ளிட்ட விளையாட்டு வீரர்களையும் தொடர்ந்து பலப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது.

விபரங்களுக்கு
 ஒப்பற்ற எரிபொருள் சிக்கனத்துடன் இலங்கையின் வீதிகளை அலங்கரிக்கவுள்ள TVS Sport 110

ஒப்பற்ற எரிபொருள் சிக்கனத்துடன் இலங்கையின் வீதிகளை அலங்கரிக்கவுள்ள TVS Sport 110

நாட்டில் உயர் ரக மோட்டார் வாகன விநியோக நிறுவனமாகத் திகழ்ந்து வருகின்ற TVS Lanka (Pvt) Ltd, இலங்கை மக்களுக்கு ஒப்பற்ற எரிபொருள் சிக்கனம் மற்றும் நம்பிக்கையான புதிய சகாப்தொன்றுக்கு வழிவகுத்துள்ளது. அந்த வகையில், புத்தம் புதிய TVS Sport 110 மோட்டார் சைக்கிள்களை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளமை குறித்து சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.உலகளவில் அங்கீகாரம் பெற்ற TVS Sport 110 மோட்டார் வாகனத்தின் புதிய வடிவமைப்புப்பானது பிரயாணத் துறையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் ஆற்றல் மிக்கது. ஒப்பற்ற எரிபொருள் சிக்கனம் மற்றும் நவீன வடிவமைப்புடன் மேம்பட்ட செயல்திறனுடன் இலங்கையின் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களுக்காக சிறப்பாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. 'மைலேஜ் கிங்' (Mileage King) என பிரபலமாக அறியப்படுகின்ற TVS Sport 110, எரிபொருள் பாவனையில் சிக்கனம் கொண்ட 109.7cc Duralife இயந்திரத்தைக் கொண்டது. 100cc இயந்திர வலுப் பிரிவில் TVS Motor நிறுவனத்தின் காப்புரிமை பெற்ற ET-Fi (Eco-Thrust Fuel Injection) தொழில்நுட்பத்தைக் கொண்ட முதலாவது மற்றும் ஒரேயொரு மோட்டார் சைக்கிள் இது மாத்திரமே என்பது சிறப்பம்சம். இந்த மேம்பாடானது எரிபொருள் பாவனையின் சிக்கனத்தை 15% ஆல் அதிகரிக்கச் செய்துள்ளதுடன், லிட்டருக்கு 80 கிமீ என்ற ஒப்பற்ற மைலேஜ் பாவனைக்கும் வழிவகுத்துள்ளது. சீரான இயந்திர வலுவைக் கொண்டுள்ளதுடன், நீண்ட நேரம் அணைத்து வைக்கப்பட்ட இயந்திரத்தை சிறப்பாக மீண்டும் இயக்கும் இயல்பானது.புத்தாக்கமிக்க பக்கவாட்டு ஸ்டாண்ட் குறியீடு, பக்கவாட்டு ஸ்டாண்ட் போடப்படும் போது தானாகவே அணைந்து விடும் இயந்திரம் ஆகிய தொழில்நுட்பங்களை இப்புதிய TVS Sport 110 மோட்டார் சைக்கிள்கள் கொண்டுள்ளன. பிரேக்குகளைப் பிரயோகிக்கும் போது உறுதிப்பாட்டை மேம்படுத்துவதற்கு 'synchronised braking technology' (SBT) என்ற தொழில்நுட்பத்தையும் அது கொண்டுள்ளது. பின்புறத்தில் சீர் செய்யக்கூடிய ஐந்து படிப்புக்கொண்ட hydraulic shock absorber மற்றும் சோர்வில்லாத நீண்டதூரப் பயணத்திற்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஆசனங்கள் ஆகிய சிறப்பம்சங்களையும் இது கொண்டுள்ளது.“இலங்கையில் மோட்டார் சைக்கிள் பிரயாணிகள் இரண்டு அடிப்படை விடயங்களுக்கு தற்போது முன்னுரிமையளித்து வருகின்றனர். மிக நீண்ட கால உழைப்பு மற்றும் உச்ச எரிபொருள் சிக்கனம் ஆகியவற்றுக்கு அவர்கள் முதலிடம் அளிக்கின்றனர். TVS Sport 110 மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தி அவர்களின் எதிர்பார்ப்புக்களை நாம் நிறைவேற்றியுள்ளோம். இதை வெறுமனே ஒரு வாகனம் என்று கூறிவிடுவதன் நின்று விட முடியாது. எரிபொருள் செலவுகள் அதிகரித்துச் செல்லும் நிலையில், தரம் மற்றும் அழகிய தோற்றம் ஆகியவற்றிற்கு எவ்விதமான குறைவுமின்றி தமது பிரயாணங்களை மேற்கொள்ள விரும்புகின்ற கடின உழைப்பாளிகள் மற்றும் அன்றாடம் பிரயாணிப்பவர்களுக்கான உகந்த தீர்வாக இது காணப்படுகின்றது.” என்று TVS Lanka (Pvt) Ltd நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. கீதால் அந்தனி அவர்கள் கருத்து தெரிவித்தார்.அதிநவீன தோற்றத்தைக் கொண்டுள்ள TVS Sport 110 மோட்டார் சைக்கிள்கள் உயர்ரக 3D chrome இலச்சினைகள், பளபளப்பான தோற்றத்தைக் கொண்ட LED DRL விளக்குகள், மற்றும் புதுப்பிக்கப்பட்ட டிஜிட்டல்-அனலொக் கட்டுப்பாட்டு முகத்திரை போன்ற சிறப்பம்சங்களையும் இது கொண்டுள்ளது. இலங்கையின் பல்வேறுபட்ட வீதி அமைப்புக்களுக்கு உகந்ததாக தரைக்கும், மோட்டார் சைக்கிளின் அடிப்பாகத்திற்கும் இடையில் 175 மிமீ தாராள இடைவெளியையும் கொண்டுள்ளது.கருப்பு நியோன் மற்றும் பழுப்பு சிவப்பு உள்ளிட்ட பல்வேறு வர்ணங்களில் TVS Sport 110 மோட்டார் சைக்கிள் வெளிவருவதுடன், TVS Lanka நாடளாவிய ரீதியில் கொண்டுள்ள பரந்தளவிலான வலையமைப்பினூடாக கிடைக்கப்பெறுகின்றது.“மிகச் சிறந்த வாகனத்தை வழங்குவதற்கும் அப்பால், சந்தையில் மிகக் குறைந்த தொகையில் அதனை சொந்தமாக்கிக் கொள்ள உறுதி செய்வதிலும் நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம். உதிரிப்பாகங்களை இலகுவில் பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக நாடெங்கிலும் 400 க்கும் மேற்பட்ட வலையமைப்பு மையங்களை நாம் நிறுவியுள்ளோம். அவற்றினூடாக சந்தையில் அசல் உதிரிப்பாகங்களை மிகவும் சிக்கனமாக ஆகக் குறைந்த விலைகளில் நாம் வழங்குகின்றோம். உதிரிப்பாகங்கள் 100% கிடைப்பதை TVS Lanka உறுதிப்படுத்துவதுடன், அசல் பாகங்கள் அனைத்திற்கும் முழுமையான உத்தரவாதத்தையும் வழங்குகின்றது. எம்மிடம் மோட்டார் சைக்கிள்களை வாங்குபவர்கள் முழுமையான மன நிம்மதியுடன், தங்குதடையின்றி போக்குவரத்து செய்வதை நாம் உறுதி செய்கின்றோம்,” என்று TVS Lanka நிறுவனத்தின் சந்தைப்படுத்தலுக்கு பின்னரான செயல்பாடுகளுக்கான உதவிப் பொது மேலாளர் இந்திக புஷ்பகுமார அவர்கள் கருத்து தெரிவித்தார்.ஐந்து ஆண்டுகள் அல்லது 76,000 கிமீ என்ற முழுமையான உத்தரவாதம், உதிரிப்பாகங்களை குறைந்த விலைகளில் தங்குதடையின்றி பெற்றுக்கொள்ளல், மற்றும் விற்பனைக்குப் பின்னரான சேவைகளை வழங்குவதற்கான பிரத்தியேக அணி ஆகியவற்றின் பக்கபலத்துடன், மோட்டார் சைக்கிள் துறையில் வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்துவதில் சிறந்த தரத்தரங்களை TVS Lanka நிறுவனம் தொடர்ந்தும் நிலைநாட்டி வருகின்றது.உங்களுக்கு அருகாமையிலுள்ள TVS காட்சி அறைக்கு வருகை தந்தோ அல்லது www.tvslanka.lk என்ற இணையத்தளம் மூலமாகவோ, அல்லது 0114 600 500 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தியோ மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள முடியும்.TVS Lanka (Pvt) Ltd நிறுவனம் தொடர்பான விபரங்கள்இந்தியாவைத் தளமாகக் கொண்ட TV Sundram Iyengar and Sons (Pvt) Ltd நிறுவனத்தின் முழுமையான உரிமையாண்மையின் கீழ் ஒரு துணை நிறுவனமாக TVS Lanka (Pvt) Ltd இயங்கி வருகிறது. இரு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையில் மோட்டார் வாகனத் துறையில் நம்பிக்கைக்குரிய நாமமாக விளங்குகின்றது. புத்தாக்கம் மற்றும் மகத்துவம் ஆகியவற்றுக்கு இது பெயர்பெற்றுள்ளதுடன், தனது வரலாற்றில் பல அங்கீகாரங்களையும், பாராட்டுக்களையும் அது சம்பாதித்துள்ளது. TVS வர்த்தகநாமம் மற்றும் பல்வேறுபட்ட வர்த்தகநாமங்களின் UCAP சேவைகளுக்கான பிரத்தியேக சேவை மையங்களை TVS Lanka இயக்கி வருகின்றது. நாடெங்கிலும் 2,000 க்கும் மேற்பட்ட முகவர் மையங்களுடன், நாடளவில் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ச்சியான தரம் மற்றும் இலகுவாக கிடைக்கப்பெறுதல் ஆகியவற்றை TVS Lanka உறுதி செய்து வருகின்றது.

விபரங்களுக்கு
டேவிட் பீரிஸ் பஜாஜ் ஸ்கூட்டர் மீண்டும் புதிய பரிமாணத்தில்

டேவிட் பீரிஸ் பஜாஜ் ஸ்கூட்டர் மீண்டும் புதிய பரிமாணத்தில்

டேவிட் பீரிஸ் குரூப் ஒஃப் கம்பனிஸ் நிறுவனத்தின் மின்சார வாகனப் பிரிவான டேவிட் பீரிஸ் E-Mobility (பிரைவேட்) லிமிடெட், Bajaj Chetak ஸ்கூட்டரை பெருமையுடன் மீள அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.    இதன் மூலம் இலங்கையின் மிகவும் பிரபலமான ஸ்கூட்டர் வர்த்தக நாமங்களில் ஒன்றான Chetak, மின்சார யுகத்திற்கு ஏற்றவாறு புதிய பரிமாணத்தில் மீண்டும் களமிறங்கியுள்ளது.    1978 ஆம் ஆண்டு முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட Bajaj Chetak, மிக விரைவாக இல்லங்கள் தோறும் இடம்பிடித்த ஒரு பெயராக மாறியதுடன், நாடு முழுவதும் உள்ள பல தலைமுறை பயணிகளின் நம்பிக்கையையும் வென்றெடுத்தது.    ஜப்பானிய மோட்டார் சைக்கிள்கள் ஆதிக்கம் செலுத்திய காலப்பகுதியிலும் கூட, Chetak ஸ்கூட்டர்களுக்கான கேள்வி அதிகரித்துக் காணப்பட்டது.    இது இலங்கை நுகர்வோர் மத்தியில் காணப்பட்ட ஈடிணையற்ற நம்பகத்தன்மையையும் உணர்வுப்பூர்வமான பிணைப்பையும் உறுதிப்படுத்துகிறது.    47 ஆண்டுகால புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்ட Chetak, தற்போது அதே நம்பிக்கையுடனும் நீடித்து உழைக்கும் தன்மையுடனும் நவீன மின்சார தொழில்நுட்பத்தின் மேம்பட்ட வசதிகளுடன் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.    நவீன நகரப் போக்குவரத்துக்காக வடிவமைக்கப்பட்டுள்ள Bajaj Chetak Electric Scooter, 3.1 kW hub motor மற்றும் 3.5 kWh lithium-ion பற்றரியைக் கொண்டுள்ளது.    இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 151 கி.மீ (IDC range) வரை பயணிக்கக்கூடிய சிறப்பான செயல்திறனை வழங்குகிறது.    அத்துடன், மணித்தியாலத்திற்கு 63 கி.மீ வேகத்தில் பயணிக்கக்கூடிய இந்த ஸ்கூட்டர், ஆற்றல், வினைத்திறன் மற்றும் அன்றாட பயன்பாட்டிற்கான வசதி ஆகியவற்றுக்கிடையே ஒரு சிறந்த சமநிலையை வழங்குகிறது.    வலுவான Steel Unibody கட்டமைப்பைக் கொண்டுள்ள Chetak, உயர்தரமான பயண அனுபவத்தையும் நீண்டகால நீடித்து உழைக்கும் தன்மையையும் வழங்குவதன் மூலம் தனது பிரிவில் உள்ள ஏனைய வாகனங்களிலிருந்து தனித்து நிற்கிறது.    அத்துடன், தனது பிரிவிலேயே ஆகக்கூடிய அளவான 35 லீற்றர் Under-seat storage வசதியையும் கொண்டுள்ளமையால், அன்றாடப் பயணம் மற்றும் நவீன நகர வாழ்க்கை முறைக்கு இது ஒரு மிகச்சிறந்த தெரிவாக அமைகிறது.    சந்தையில் உள்ள ஏனைய போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில், Bajaj Chetak அதிக ஆற்றலையும், சிறந்த பயணத் தூரத்தையும் வழங்குகிறது.    இந்த ஸ்கூட்டர், முழுமையான Digital display, புளூடூத் ஊடாக இணைக்கப்படக்கூடிய App connectivity, Eco மற்றும் Sports ஆகிய இரண்டு Riding modes போன்ற பல நவீன வசதிகளைக் கொண்டுள்ளது.    அத்துடன், Hill Hold Assist, Reverse mode, Music and call notifications போன்ற வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளதால், இது ஒரு சௌகரியமான மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பயண அனுபவத்தை உறுதி செய்கிறது.    இந்த அறிமுகத்திற்கு முன்னதாகவே, விற்பனை, சேவை மற்றும் உதிரிப்பாகங்கள் விநியோகம் ஆகியவற்றை உள்ளடக்கிய சுமார் 2,000 நாடளாவிய விற்பனை மற்றும் சேவை நிலையங்களில், பரிசோதனை உபகரணங்கள், கண்டறியும் ஸ்கானர்கள், பயிற்சி பெற்ற சேவை நிபுணர்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் உள்ளிட்ட பிரத்தியேக வசதிகளை DPMC நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது.    இதன் மூலம், வாடிக்கையாளர்கள் நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் அவர்களுக்கு ஈடிணையற்ற ஆதரவையும் இலகுவான அணுகலையும் வழங்குவதை நிறுவனம் உறுதி செய்கிறது.    டேவிட் பீரிஸ் E-Mobility நிறுவனமானது, Bajaj Chetak ஸ்கூட்டரின் தரம், நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் செயல்திறன் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்காக, இலங்கையின் அனைத்து வகையான நிலப்பரப்புகளிலும் 20,000 கிலோமீற்றர்களுக்கும் அதிகமான தூரம் சோதனைகளை மேற்கொண்டுள்ளது.    இந்த வெற்றிகரமான களப்பரிசோதனைகளின் பின்னரே இலங்கைச் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது.    டேவிட் பீரிஸ் குழுமத்தின் விரிவான நாடளாவிய விற்பனைக்குப் பிந்தைய சேவை வலையமைப்பானது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை மேலும் பலப்படுத்துவதுடன், நம்பகத்தன்மை மற்றும் வாடிக்கையாளர் நலன் மீதான அக்குழுமத்தின் நீண்டகால அர்ப்பணிப்பையும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.    அத்துடன், Bajaj Chetak பயனர்களுக்கு இலங்கையின் முதலாவது இரு சக்கர வாகனங்களுக்காக வழங்கப்படும் 24/7 வீதியோர அவசர உதவிச் சேவை வழங்கப்படுவதால், எவ்வித கவலையுமின்றி மனநிம்மதியுடன் பயணிக்க முடியும்.    வாடிக்கையாளர் டேவிட் பீரிஸ் E-Mobility ஐ 011 470 0550எனும் ஹொட்லைன் ஊடாக தொடர்பு கொள்ள முடியும்.    24/7 வீதியோர அவசர உதவிச் சேவையை 011 4 700 551 ஊடாக பெற முடியும்.    Chetak காட்சியறை இல. 08, பன்னிபிட்டிய வீதி, பத்தரமுல்ல எனும் முகவரியில் அமைந்துள்ளது.    Bajaj Chetak அறிமுகத்துடன், டேவிட் பீரிஸ் E-Mobility (பிரைவட்) லிமிடெட், இலங்கையை நிலைபேறான மற்றும் முன்னணி மின்சார போக்குவரத்து முறைமைக்கு கொண்டு செல்லும் செயற்பாடுகளை துரிதப்படுத்துவதுடன், பல தலைமுறைகளின் விருப்பத்திற்குரிய தெரிவை, எதிர்காலத்திற்கு பொருத்தமான வகையில் கொண்டு வந்துள்ளது.

விபரங்களுக்கு
தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம்

தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம்

சியபத பினான்ஸ் தடையற்ற தலைமைத்துவ மாற்றத்தை அறிவித்துள்ளது.    தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம் பெற்றதுடன் ஆனந்த செனவிரத்ன நிர்வாக இயக்குநராக தனது பதவிக் காலத்தை நிறைவு செய்கிறார்.    2026 ஜனவரி 1, முதல் தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமிக்கப்பட்டுள்ளார்.    இந்த நியமனம் சியபதவின் உள்ளக திறமை மேம்பாட்டிற்கான உறுதிப்பாட்டில் ஒரு மைல்கல்லைக் குறிக்கிறது.    நிறுவனத்தின் முன்னோடி உறுப்பினரான ஹேவவிதாரன, 2005 இல் சந்தைப்படுத்தல் உத்தியோகத்தராக நிறுவனத்தில் சேர்ந்தார்.    20 ஆண்டுகளுக்கும் மேலாக, அவர் பதவிகளில் உயர்ந்து, 2021 முதல் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி ஆகவும், 2025 முதல் தலைமை மூலோபாய அதிகாரி ஆகவும் பணியாற்றினார்.    ஆனந்த செனவிரத்னவின் வெளிச்செல்லும் தலைமையின் கீழ், சியபத பைனான்ஸ் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் துறையில் ஒரு சக்திவாய்ந்த நிறுவனமாக மாறியது.    சியபத பினானஸ் பிஎல்சி என்பது இலங்கை மத்திய வங்கியால் ஒழுங்குபடுத்தப்படும் உரிமம் பெற்ற ஒரு முன்னணி நிதி நிறுவனமாகும், மேலும் இது சம்பத் வங்கி குழுமத்தின் மிகப்பெரிய முழுமையான துணை நிறுவனமாகும்.    இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட இந்த நிறுவனம், குத்தகை, தங்கக் கடன்கள், தரகு, வணிகக் கடன்கள் மற்றும் நிலையான வைப்புத்தொகைகள் உள்ளிட்ட பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகிறது.    சமீபத்தில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான தொழில்தருநர் வர்த்தக விருதுகளில், சியபத பினான்ஸ் பிஎல்சி தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக “சிறந்த தொழில்தருநர் வர்த்தக முத்திரை” என்ற பட்டத்தைப் பெற்றுள்ளது.    இந்த விருது, தொழில்தருநர் வர்த்தக முத்திரையிடலில் நிறுவனத்தின் சிறந்த நடைமுறைகள் மற்றும் புதுமையான உத்திகளை அங்கீகரிக்கிறது, இது ஊழியர் ஈடுபாடு, தக்கவைத்தல் மற்றும் ஊக்கமளிக்கும் பணியிட கலாசாரத்தை உருவாக்குவதற்கான அதன் வலுவான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

விபரங்களுக்கு
நிக்கவெரட்டியவில் தடம் பதிக்கின்றது சியபத பினான்ஸ்

நிக்கவெரட்டியவில் தடம் பதிக்கின்றது சியபத பினான்ஸ்

உள்நாட்டு நிதி நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, இலங்கை முழுவதும் உள்ள அனைத்து சமூகங்களுக்கும் முழுமையான நிதி தீர்வுகளை வழங்குவதற்காக நிறுவனத்தின் பரந்த விரிவாக்கல் முயற்சிகளுக்கு மேலும் ஒரு மைல்கல்லாக வெற்றிகரமாக சமீபத்தில் தனது 61வது கிளையை நிக்கவெரட்டியவில் திறந்து வைத்துள்ளது.புதிய கிளையை சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர் ஆனந்த செனவிரத்ன திறந்து வைத்தார். தலைமை நிர்வாக அதிகாரி (நியமிக்கப்பட்ட) மதிஷ ஹேவாவிதாரண, சிரேஷ்ட நிர்வாகத்தினர், காவல்துறை அதிகாரி ஹரிசன் சோமசிறி, கிராம சேவையாளர் எச்.எம்.டி. நாமல் பண்டார ஆகியோர் அரச மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் காப்புறுதி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் நலன் விரும்பிகள் முன்னிலையில் இந்த கிளை திறந்து வைக்கப்பட்டது.வளமான மண் மற்றும் பயிர் செய்கைக்கு ஏற்ற அமைவான நிலங்களைக் கொண்ட நிக்கவரெட்டி, அதன் விவசாய பாரம்பரியம் மற்றும் அதன் முக்கியத்துவத்திற்காக புகழ் பெற்றுள்ளது, அங்குள்ள சமூகம் இன்றுவரை தனித்துவமான விவசாய நுட்பங்களை ஒருங்கிணைப்பதில் தொடர்ந்து கவனம் செலுத்துகின்றனர்.பாரம்பரியமாகவும் வரலாற்று ரீதியாகவும் விவசாயத்திற்குப் பெயர் பெற்றிருந்தாலும், நிக்கவரெட்டி அதன் பொருளாதார அடித்தளத்தை பாரம்பரியமற்ற தொழில்துறைகளிலும் பன்முகப்படுத்தியுள்ளது. தற்போது, ​​வேலைவாய்ப்பு நிலப்பரப்பில் சேவைத் துறைஇ விவசாயம் மற்றும் தொழில்துறை துறைகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. சில தசாப்தங்களாக, நிக்கவெரட்டிய ரியல் எஸ்டேட் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கண்டது. மேம்பட்ட உட்கட்டமைப்பு வசதி மற்றும் முதலீடுகளுக்கான மேம்பட்ட காலநிலை ஆகியவற்றால் ஆதரிக்கப்படும் பிராந்தியத்தின் நிலைப்பாடு - நவீன வீட்டுவசதி திட்டங்களின் அதிகரிப்புக்கும் வணிக வளாகங்களின் கிடைக்கும் தன்மைக்கும் வழி வகுத்துள்ளது.சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர் ஆனந்த செனவிரத்ன கருத்து தெரிவிக்கையில் "சியபத பினான்ஸ் எங்களுக்கு மிக உயர்ந்த திருப்தி அளிக்கும் அம்சம் என்னவெனில், நாங்கள் சென்றடையும் மக்களின் வாழ்க்கையில் எங்கள் சேவைகள் ஏற்படுத்தும் நல்விளைவுகளை காண்பதாகும்," எனவும் மேலும் கூறுகையில் "நிக்கவெரட்டிய கிளை திறப்பு நெருங்கும் போது, ​​உள்;ர் சமூகம் புதிய வழிகளுக்கு திறந்திருப்பதையும் நாங்கள் அவதானித்தோம். உதாரணமாக, டிஜிட்டல் சேவைகளில் இளைஞர்கள் வளர்ந்து வருவதையும், கைத்தறி கைவினைகளில் ஈடுபடும் பெண்கள் மற்றும் ஒட்டுமொத்த விவசாயத் தொழிலும் படிப்படியாக இயற்கை விவசாய நடைமுறைகளை ஏற்றுக்கொள்வதையும் நாங்கள் கவனித்தோம். இத்தகைய பின்னணியில், இந்த சமூகம் வெற்றிக்கான அடித்தளத்தை உருவாக்க உதவுவதற்கு எங்கள் ஆதரவு அவசியம் என்று நாங்கள் நம்புகிறோம்.” எனக் கூறினார்.குத்தகை, நிலையான வைப்புத்தொகை, தங்கக் கடன், வணிகக் கடன்கள், தனிநபர் கடன்கள், விரைவான வரைவு மற்றும் தரகு முதல் "ஸ்மார்ட் பே" - அதன் பில் செலுத்தும் வசதி வரை விரிவான தயாரிப்பு தொகுதியினை பெருமைப்படுத்துகிறோம், புதிய கிளை, தொழில்முனைவோர், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் ஆர்வமுள்ள இளைஞர்கள் வளர்ச்சி வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளவும், நீண்ட காலத்திற்கு அறிவார்ந்த நிதி தீர்மானங்களை ஊக்குவிக்க உதவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.நாட்டில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைத் தொடர்ந்து, ஒரு சிறிய திறப்பு விழா நடத்தப்பட்டது, மேலும் பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகள் மற்றும் காலுறைகள் கொள்வனவு செய்வதற்கு பரிசு வவுச்சர்களை நன்கொடையாக வழங்குவதற்காக பணம் ஒதுக்கப்பட்டது.பரிசு வவுச்சர்களை சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர். ஆனந்த செனவிரத்ன, தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் சிரேஷ்ட நிர்வாகத்தினர் திரு. மதிஷ ஹேவாவிதாரண ஆகியோர், பிரதேச செயலகப் பிரிவு மற்றும் நிக்கவெரட்டிய கிராம சேவையாளரின் ஒத்துழைப்புடன், திறப்பு விழாவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பாடசாலை பிள்ளைகளுக்கு வழங்கினர்.சம்பத் வங்கி குழுமத்தின் மிகப்பெரிய முழு உரிமம் பெற்ற துணை நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, நாடு முழுவதும் கிளைகளின் வலையமைப்பை கொண்டுள்ளது, இது அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை வழங்கல் தரங்களை வழங்குவதை உறுதி செய்கிறது. ஃபிட்ச் மதிப்பீடுகளால் நிலையான செயற்பாடுகள் மூலம் A(lka) என்ற தேசிய நீண்டகால மதிப்பீட்டை நிறுவனம் பெற்றுள்ளது, இது உறுதியான நிதி நிலை மற்றும் நம்பிக்கைக்குரிய வளர்ச்சி பாதையை பிரதிபலிக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில், சியபத பினான்ஸ் பிஎல்சி சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் முயற்சிகளின் வளர்ச்சிக்கும், நாடு முழுவதும் தனிப்பட்ட நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் பங்களித்துள்ளது.037 4658105 ஐ அழைப்பினை மேற்கொள்வதன் மூலமோ அல்லது இல. 48 E, ஹீலோகம, நிக்கவெட்டிய என்ற முகவரியில் உள்ள கிளைக்கு விஜயம் செய்வதன் மூலமோ நிக்கவெட்டிய கிளையை தொடர்பு கொள்ளுங்கள். சியபத பினான்ஸ் பிஎல்சி மற்றும் அதன் சேவைகள் பற்றிய மேலதிக தகவலுக்கு, www.siyapatha.lk ஐ பார்வையிடவும்.

விபரங்களுக்கு
வடக்கில் வலையமைப்பை விரிவுபடுத்திய சியபத பினான்ஸ்

வடக்கில் வலையமைப்பை விரிவுபடுத்திய சியபத பினான்ஸ்

சியபத பினான்ஸ், மன்னாரில் புதிய கிளையுடன் வடக்கில் தனது வலையமைப்பை விரிவுபடுத்துகிறது    20 வருட அனுபவமுள்ள முன்னணி நிதி நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, சமீபத்தில் தனது 58ஆவது கிளையை மன்னார் நகரில் திறந்து வைத்தது.    இது வட மாகாணத்தில் தனது வலையமைப்பை வலுப்படுத்தி, நாடு தழுவிய கிளை வலையமைப்பை விரிவுபடுத்துகிறது.    மன்னார் கிளை திறப்பு விழாவில் சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குநர் ஆனந்த செனவிரத்ன, தலைமை செயற்பாட்டு அதிகாரி மதிஷ ஹேவாரத்ன மற்றும் சிரேஷ்ட நிர்வாகம், கிராம சேவையாளர் என்டனி மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் நலன் விரும்பிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.    இலங்கையின் வடக்கு கடற்கரைப் பகுதியில் பல நூற்றாண்டுகள் பழமையான பாரம்பரியம், தனித்துவமான கட்டிடக்கலை மற்றும் கண்கவர் அழகினை பாதுகாத்து வரும் மன்னார் மாவட்டம், பிரதான நிலப்பகுதி மற்றும் மன்னார் தீவை கொண்டுள்ளது.    15-64 வயதுக்குட்பட்ட பொருளாதார ரீதியாக சுறுசுறுப்பான வயதுக் குழுவிற்குள் வகைப்படுத்தப்பட்டுள்ள மக்கள்தொகையில் கணிசமான பகுதியினர், நீண்டகாலத்தில் பிராந்தியத்தின் நிலையான வளர்ச்சிக்கு பங்களிக்கும் நெகிழ்வான மற்றும் வசதியான நிதி தீர்வுகளுக்கான கட்டாய தேவை ஒன்றினை கொண்டுள்ளதாக சியபத பினான்ஸ் அடையாளம் காட்டுகிறது.    மன்னார் நகரம் , பசுமையான காடுகள், பனை மரங்கள், சதுப்பு நிலங்கள் மற்றும் தென்னை பயிர்ச்செய்கை முதல் தரிசு நிலம் மற்றும் தடாகங்கள் வரை பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளைக் கொண்ட வறண்ட, மணல் தீபகற்பமாகும். தொழிற்துறையில் குறிப்பிடத்தக்க 53 சதவீதத்தை கொண்ட விவசாயத் துறை, பிராந்தியத்தின் பொருளாதார நிலப்பரப்பில் ஆதிக்கம் செலுத்துகிறது அங்கு பெரும்பாலான உள்ளூர்வாசிகள் நெல் விளைச்சலை தங்கள் முக்கிய வருமான ஆதாரமாக கொண்டுள்ளனர்.    மன்னாரில் உள்ள பல மீன்பிடி கிராமங்களின் வாழ்வாதாரத்திலும் மீன்பிடித் தொழில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.    நிகழ்வில் உரையாற்றிய சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குநர் ஆனந்த செனவிரத்ன, 'துடிப்பான மன்னார் நகரில் எங்கள் புதிய கிளையை திறப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் - ஏராளமான வாய்ப்புகள் மற்றும் நம்பிக்கைக்குரிய எதிர்காலம் கொண்ட ஒரு பிராந்தியம்.    எங்கள் சேவைகள் மூலம், உள்ளூர் சமூகங்களை மேம்படுத்துவதையும், உலகின் மாறிவரும் காலத்திற்கு ஏற்ப அவர்களின் வாழ்க்கையை மாற்ற உதவுவதையும் நாங்கள் நோக்கமாக கொண்டுள்ளோம். இதை கருத்தில் கொண்டு, நாட்டின் ஒவ்வொரு பகுதியையும் சென்றடைந்து, பல்வேறு தனிநபர் குழுக்களுடன் இணைந்து பணியாற்றும் எங்கள் பயணத்தைத் தொடர நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.' எனக் கூறினார்.    சமீபத்திய ஆண்டுகளில், மன்னார் காற்று மற்றும் சூரிய சக்தி போன்ற வளங்களால் இயக்கப்படும் புதுப்பிக்கத்தக்க சக்திக்கான பரந்த ஆற்றலைக் காட்டியுள்ளது, இது உள்ளூர் பொருளாதாரங்களுக்கு புதிய வழிகளை வழங்குகிறது. பிராந்தியத்தில் உள்ள உயர்ந்த இலட்சியம் உள்ள தனிநபர்களுக்கும் மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் நம்பகமான நிதி ஆலோசகராக கவர்ச்சிகரமானதாக இருக்கும் இந்த புதிய கிளை, குத்தகை, நிலையான வைப்புத்தொகை, தங்கக் கடன், வணிகக் கடன்கள், தனிநபர் கடன்கள், விரைவான வரைவு மற்றும் தரகு அதன் கொடுப்பனவு செலுத்தும் வசதியான ஸ்மார்ட் பே வரை பரந்த தயாரிப்பு தொகுப்பினை வழங்குகிறது.    நிறுவனத்தின் 'சியபதேன் மிஹின்கதட்ட' சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்திற்கு இணங்க, சியபத பினான்ஸ் பிஎல்சியின் சிரேஷ்ட நிர்வாகத்தினர் சென்.லூசியா மகா வித்தியாலயத்தில் ஒரு சிறப்பு மரம் நடும் முயற்சியை மேற்கொண்டனர் மற்றும் மன்னாரில் உள்ள பாடசாலை மாணவர்களின் டிஜிட்டல் கல்வியின் வளர்ச்சியை ஆதரிக்கும் முயற்சியாக கணினிகள் மற்றும் துணைக்கருவிகளை நன்கொடையாக வழங்கினர்.

விபரங்களுக்கு
டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ், GWM ஆகியன இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய எரிசக்தி வாகனங்களை அறிமுகப்படுத்த திட்டம்

டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ், GWM ஆகியன இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய எரிசக்தி வாகனங்களை அறிமுகப்படுத்த திட்டம்

டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ் மற்றும் GWM ஆகியவை இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய எரிசக்தி வாகனங்களை அறிமுகப்படுத்த மூலோபாய கூட்டாண்மையை உருவாக்குகின்றன.    டேவிட் பீரிஸ் குழுமத்தின் நான்கு சக்கர வாகன விற்பனைப் பிரிவான டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸ் (பிரைவேட்) லிமிடெட் (DPA), உலகளாவிய வாகனத் துறையில் முதன்மை வகிக்கும்  GWM உடன் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டாண்மையை அறிவித்துள்ளது.    இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய ஆற்றல் வாகனங்களின் (NEVs) புதிய அத்தியாயத்தை அறிமுகப்படுத்துவது இந்தக் கூட்டாண்மையின் நோக்கமாகும்.     அதிகாரப்பூர்வ பத்திரிகையாளர் சந்திப்பு, அக்டோபர் 30 அன்று டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸ் (DPA) தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் டேவிட் பீரிஸ் குழுமத்தின் மூத்த உறுப்பினர்களான குழுமத் தலைவர் மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளர் ரோஹன திஸாநாயக்க மற்றும் டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மகேஷ் மற்றும் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் தலைவர் யசந்த அபேகோன், ஆகியோர் கலந்து கொண்டனர். GWM நிறுவனத்தின் பிரதிநிதிகள் இணைய வழியில் நிகழ்வில் இணைந்துகொண்டனர்.    இந்தக் கூட்டாண்மை, புத்தாக்கம், நம்பகத்தன்மை மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றின் மூலம் நாட்டின் போக்குவரத்துத் துறையின் நிலப்பரப்பை மறுவடிவமைப்பதை நோக்கமாகக் கொண்டது. உலகளாவிய முன்னணி நிறுவனம், தேசத்தின் முன்னணி நிறுவனத்துடன் இணைகிறது.    இந்தப் புதிய கூட்டாண்மை, உலகின் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் இயங்கும் GWM-இன் உலகளாவிய பொறியியல் சிறப்பையும், நான்கு தசாப்தங்களுக்கும் மேலான டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ் (DPA)-இன் நம்பகத்தன்மை மற்றும் எளிமையான அணுகல் கொண்ட பாரம்பரியத்தையும் ஒருங்கிணைக்கிறது.      இந்த ஒத்துழைப்பின் மூலம் இலங்கையில் உள்ள வாடிக்கையாளர்கள்  இனிமேல் நவீன தொழில்நுட்பம் மற்றும் அன்றாடப் பயன்பாட்டிற்கு ஏற்ற தன்மைகொண்ட ஹைப்ரிட், பிளக்-இன் ஹைப்ரிட் மற்றும் முழு மின்சார வாகனங்களை பெற்றுக்கொள்ள முடியும்.  அவுஸ்திரேலியாவில் ஹவல் H6 ரக வாகனங்களுக்கு வழங்கப்பட்ட 5-நட்சத்திர ANCAP பாதுகாப்புத் தரச் சான்றிதழின் உறுதியுடனும், உலகின் சவாலான சந்தைகளில் கிடைத்த அனுபவத்துடனும், GWM நிறுவனம் இலங்கைச் சாலைகளுக்குச் சிறந்த செயல்திறனையும், மன அமைதியையும் கொண்டு வருகிறது.    "Go With More" என்ற GWM-இன் உலகளாவிய பிராண்ட் தத்துவத்தின் கீழ் இந்த முயற்சி, இலங்கையில் உள்ள ஓட்டுனர்களுக்கு செயல்திறன் மற்றும் எரிபொருள் திறன் ஆகிய இரண்டிற்கும் இடையே தேர்வு செய்ய வேண்டிய நிலையை நீக்கியுள்ளதுடன் புத்திசாலித்தனமான, ஒன்றிணைக்கப்பட்ட மற்றும் அதிக நம்பிக்கையான எதிர்காலத்திற்கு அழைப்பு விடுக்கிறது.     GWM ஹைப்ரிட் ரக வாகனங்களின் அறிமுகம் டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ் (DPA) மற்றும் GWM ஆகிய நிறுவனங்களின் கூட்டாண்மையின் கீழ் முதற்கட்டமாக அறிமுகப்படுத்தப்படும் வாகனங்கள்:     1. ஹவல் H6 HEV / PHEV- ரூ. 17.995 மில்லியன் (HEV)/ரூ. 20.995 மில்லியன்(PHEV)    அதிநவீன மற்றும் புத்திசாலித்தனமான SUV: நகர்ப்புற சொகுசையும், ஹைப்ரிட் வாகனத்தின் பன்முகத்தன்மையையும் இணைக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.சக்தி வாய்ந்த, அதேநேரம் எரிபொருள் சிக்கனமான ஓட்டத்தை வழங்குகிறது. இதில், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் 12.3 அங்குல அல்ட்ரா-ஸ்மார்ட் தொடுதிரை ஆகியவை கூடுதல் அம்சங்கள்.இது குறிப்பிடத்தக்க தூய மின்சாரப் பயண வரம்பை வழங்குகிறது. இதன்மூலம், உண்மையான ஹைப்ரிட் சுதந்திரத்தையும் தினசரி பயணங்களுக்கு மிகவும் குறைவான எரிபொருள் செலவையும் பெறலாம்.    2. ஹவல் GT பிளக்-இன் ஹைப்ரிட் (PHEV)-ரூ. 24.995 மில்லியன்    இது ஒரு செயல்திறன் மிக்க பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்யூவி ஆகும். இதன் தோற்றம், தைரியமான வடிவமைப்பு மற்றும் துடிப்பான ஹைப்ரிட் சக்தி ஆகிய அம்சங்கள் தனித்துவமானவை. இது ஒரு ஸ்போர்ட்ஸ் காருக்கு நிகரான வேகத்தை வழங்குகிறது. அதாவது, வெறும் 4.9 வினாடிகளில் 0 முதல் 100 கி.மீ/மணி வேகத்தை எட்டும். அத்துடன், பிரம்மாண்டமான 762 Nm முறுக்குவிசை (torque) திறனையும் கொண்டுள்ளது. இதன் விளையாட்டுத்தனமான வெளிப்புற வடிவமைப்புக்கு ஈடுகொடுக்கும் வகையில் ஓட்டுநரை மையப்படுத்தி உட்புரமும்  வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், 'Alcantara-style' பாணியிலான ஸ்போர்ட் இருக்கைகள் மற்றும் ஆக்ரோஷமான வெளிப்புற வடிவமைப்பு ஆகியவை அடங்கும்.     3.டேங்க் 300 ஹைப்ரிட் எலெக்ட்ரிக் (HEV)-ரூ. 35.995 மில்லியன்    நகரத்தைத் தாண்டி சுதந்திரத்தை நாடும் சாகச விரும்பிகளுக்காக உருவாக்கப்பட்ட, உறுதியான ஆஃப்-ரோட் வாகனம் இது. டேங்க் 300 ஹைப்ரிட் எலெக்ட்ரிக் வாகனம் (HEV) அதன் முழு 4x4 ஆஃப்-ரோட் சேசிஸ், முன் மற்றும் பின் டிஃபரன்சியல் லாக்குகள் மற்றும் Crawl Control வசதி ஆகியவற்றின் மூலம் நவீன தேடல் அனுபவத்தை மறுவடிவமைக்கிறது. இதன் ராணுவத் தர வலிமை, இரட்டை 12.3-இன்ச் திரைகள் மற்றும் உயர்தர faux Nappa leather accents உட்புற அலங்காரம் போன்ற சொகுசான அம்சங்களால் சமநிலைப்படுத்தப்பட்டுள்ளது.   4. டேங்க் 500 ஹைப்ரிட் எலெக்ட்ரிக் வாகனம் (HEV)- ரூ. 43.5 மில்லியன்    GWM-இன் முதன்மை ரக வாகனமான இந்த வாகனம் கம்பீரமான வடிவமைப்பு, ஏழு இருக்கைகள் கொண்ட வசதி மற்றும் ஹைப்ரிட்இன் சொகுசுத்தன்மை  ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது. 'Nappa Leather-Accented' இருக்கைகள் (குளிரூட்டும்/மசாஜ் வசதியுடன்) மற்றும் பிரமாண்டமான 14.6-அங்குல மைய மல்டிமீடியா திரையுடன் இதன் உள்ளறை ஆடம்பரமாக அமைக்கப்பட்டுள்ளது. பாடி-ஆன்-ஃப்ரேம் சேசிஸ் (Body-on-Frame chassis: வாகனத்தின் உடல், அதன் சட்டகத்தின் மேல் பொருத்தப்பட்டிருக்கும்) அடிப்படையில் இது கட்டமைக்கப்பட்டுள்ளது. இது நிகரற்ற கம்பீரமான தோற்றத்தையும், உண்மையான ஆஃப்-ரோட் திறனையும் வழங்குகிறது. இது ஒவ்வொரு வருகையையும் ஒரு சிறப்பு நிகழ்வாக மாற்றுகிறது.    மேலதிகமாக, நிலைத்தன்மை மற்றும் அதிக செயல்திறன் கொண்ட போக்குவரத்து தீர்வுகளை நாடும் இலங்கை நுகர்வோருக்கான வாய்ப்புகளை மேலும் விரிவுபடுத்தும் வகையில், DPA நிறுவனம் முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் ORA ரக வாகனங்களையும் அறிமுகப்படுத்த உள்ளது.    புத்தாக்கம் மூலம் இலங்கையின் எதிர்கால போக்குவரத்து துறையை மறுவடிவமைத்தல். புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இலங்கையின் வாகன துறையின்  எதிர்காலத்திற்கான ஒரு மூலோபாய நகர்வாக இந்தக் கூட்டாண்மை அமைகிறது.    GWM-இன் நவீன ஹைப்ரிட் மற்றும் மின்சார தொழில்நுட்பங்கள், DPA-இன் வலுவான நாடு தழுவிய சேவை வலையமைப்புடன் இணைந்து இலங்கை மக்களுக்கு அதிக சுதந்திரத்தையும், சிறந்த செயல்திறனையும், சிறந்த மதிப்பையும், அதிக நம்பிக்கையையும் வழங்குகின்றன.    நிகழ்வில் உரையாற்றிய DPA-இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. மகேஷ், மேலும் கூறியதாவது: "GWM-இன் வாகனங்கள் உலகத் தரம், நம்பிக்கை மற்றும் புதுமையின் அடையாளமாகத் திகழ்கின்றன. டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸின் நம்பகத்தன்மை மற்றும் இணையற்ற சேவையுடன் ஹைப்ரிட் செயல்திறனை அனுபவிக்கும் சுதந்திரத்தை இலங்கை மக்களுக்கு நாங்கள் வழங்குகிறோம்.   " GWM x DPA - GO WITH MORE. GWM மற்றும் DPA-வின் இந்தக் கூட்டாண்மை, வெறும் வாகனங்களை அறிமுகப்படுத்துவதைவிட மேலானதாகும். இது செயல்திறன், நிலைத்தன்மை மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகியவற்றைச் சமநிலைப்படுத்தும் ஒரு புத்திசாலித்தனமான அதிகாரத்தை போக்குவரத்து துறையில்  தொடங்கி வைக்கிறது.    GWM-இன் உலகத் தரப் புதுமை மற்றும் DPA-இன் உள்ளூர் அனுபவம் ஆகியவை கைகோர்ப்பதால், ஒவ்வொரு GWM வாகன உரிமையாளருக்கும் DPA-வின் நான்கு தசாப்த கால நாடு தழுவிய சேவை, முழுமையான உத்தரவாதம் மற்றும் தடையற்ற உதிரிப்பாக விநியோகம் ஆகியவற்றினை பெறமுடியும். இலங்கை மக்களுக்கு இது ஒரு புதிய ஓட்டுநர் அனுபவத்தைத் தொடக்கி  வைக்கிறது.    இந்த அனுபவத்தில், தொழில்நுட்பம் உங்கள் உணர்வுகளுக்கு உற்சாகமளிக்கிறது, விரிவான தேர்வு உங்களுக்கு தன்னம்பிக்கையைத் தருகிறது, மற்றும் எதிர்வரும் பாதை அதிக சுதந்திரத்திற்கும் , உறுதியான நம்பிக்கைக்கும்  உத்தரவாதம் அளிக்கிறது.  

விபரங்களுக்கு
Entertainment Stories
Explore More

"மனம் நிறைந்துள்ளது..." – ரசிகர்களின் பெரும் வரவேற்பால் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நெகிழ்ச்சி!

பிரபல நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவான 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' திரைப்படத்திற்கு ரசிகர்கள் அளித்து வரும் அமோக வரவேற்பால் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது நெகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார். சமீபத்தில் வெளியான 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' திரைப்படமும், அதில் இடம்பெற்ற பாடல்களும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வெற்றிநடை போட்டு வருகின்றன. "'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்துக்கும், அதன் பாடல்களுக்கும் இவ்வளவு பெரிய வரவேற்பு கொடுத்ததற்கு மிக்க நன்றி" என்று அவர் தெரிவித்துள்ளார். "பொதுமக்களின் அளப்பரிய அன்பாலும் ஆதரவாலும் என் மனம் நிறைந்துள்ளது" என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். படம் வெளியானதில் இருந்தே தனது தொலைப்பேசி முழுவதும் சாதகமான (Positive) தகவல்களால் மட்டுமே நிரம்பி வழிவதாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் பெருமிதத்துடன் பதிவிட்டுள்ளார். திரைப்படத்தின் பின்னணி இசையும் பாடல்களும் மீண்டும் ஒருமுறை ஜி.வி.பிரகாஷின் இசை மாயாஜாலத்தை நிரூபித்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

விபரங்களுக்கு
தென்னிந்திய சினிமாவையே ஆக்கிரமிக்கும் சாய் அபயங்கர்! கைவசம் உள்ள முன்னணி நடிகர்களின் 12 திரைப்படங்கள்

தென்னிந்திய சினிமாவையே ஆக்கிரமிக்கும் சாய் அபயங்கர்! கைவசம் உள்ள முன்னணி நடிகர்களின் 12 திரைப்படங்கள்

தமிழ் திரையுலகில் இளம் இசையமைப்பாளராக கவனம் பெற்று வரும் சாய் அபயங்கர், தற்போது முன்னணி நடிகர்களின் 12 திரைப்படங்களுக்கு இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். சாய் அபயங்கர் இசையமைக்கும் படங்களின் பட்டியலில் விஜய் சேதுபதியின் ‘பத்தா’, தனுஷின் ‘ஓம்’ மற்றும் ‘தமிழ் முருகன்’ சூர்யா 48, பிரதீப் ரங்கநாதனின் பிஆர்எஸ்1(PRS01), ராகவா லோரன்ஸின் ‘பென்ஸ்’, கார்த்தியின் ‘மார்ஷல்’ ஆகிய படங்களுக்கும் அவர் இசையமைக்கிறார். மேலும், அல்லு அர்ஜுனின் ‘ராக்கா’, துருவ் விக்ரமின் அடுத்த படம், சிவகார்த்திகேயனின் அடுத்த படம் ஆகியவற்றிலும் சாய் அபயங்கர் இசையமைக்கிறார். அதேபோல், இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து - சிம்பு கூட்டணியில் உருவாகும் அடுத்த படம் மற்றும் இயக்குநர் கீர்த்தீஸ்வரன் - சிம்பு கூட்டணியில் உருவாகும் அடுத்த படம் என மேலும் 2 படங்களும் அவரது கைவசம் உள்ளன. இவ்வாறு தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் படங்கள் உட்பட மொத்தம் 12 திரைப்படங்கள் சாய் அபயங்கரின் கைவசம் உள்ளன.

விபரங்களுக்கு
இன்ஸ்டா பதிவின் பின்னணியில் 2 ஆண்டுகால வலி: நிவின் பாலி கூறியதை மீண்டும் பகிர்ந்த அனுபமா

இன்ஸ்டா பதிவின் பின்னணியில் 2 ஆண்டுகால வலி: நிவின் பாலி கூறியதை மீண்டும் பகிர்ந்த அனுபமா

நடிகை அனுபமா பரமேஸ்வரன், கடந்த மாதம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “இறுதியில் உங்கள் அமைதியைக் கண்டறிய, பயனற்ற முடிவுகளை நீங்கள் விட்டுவிட வேண்டும்” எனப் பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவு அவரது தனிப்பட்ட உறவு தொடர்பானதாக இருக்கலாம் என சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டன.இதனிடையே, அண்மையில் அவர் அளித்த நேர்காணல் ஒன்றில், தனது முந்தைய உறவு குறித்து பெயரைக் குறிப்பிடாமல் அனுபமா பரமேஸ்வரன் மனம் திறந்து பேசியிருந்தார்.தனது பழைய உறவில் சுமார் இரண்டு ஆண்டுகள் மன ரீதியான துன்பங்களை எதிர்கொண்டதாகவும், அந்தக் காலகட்டத்தில் உடல் மற்றும் மன ரீதியாக பாதிக்கப்பட்டு, தனது உடல் எடை கணிசமாகக் குறைந்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.மேலும், தனது இன்ஸ்டாகிராம் பதிவுக்குப் பின்னால் இரண்டு ஆண்டுகால வலி மற்றும் உணர்வுப்பூர்வமான போராட்டங்கள் இருந்ததாகவும், முழுமையாகக் குணமடைந்த பின்னரே அது குறித்து பேச விரும்பியதாகவும் கூறியிருந்தார்.இந்த நேர்காணல் சமூக வலைதளங்களில் கவனம் பெற்ற நிலையில், நடிகர் நிவின் பாலி பெண்கள் குறித்து பேசிய பழைய காணொளி ஒன்றை அனுபமா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.அதனுடன், “நிவின் பாலி 12 ஆண்டுகளுக்கு முன்பே இதை என்னிடம் கூறினார்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.அந்தக் காணொளியில் பேசிய நிவின் பாலி, பெண்கள் வீட்டிலும், கல்வி நிறுவனங்களிலும், விடுதிகளிலும் பல்வேறு கட்டுப்பாடுகளை எதிர்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.மேலும், பெண்கள் தங்களது ஆசைகள் மற்றும் கனவுகளை நோக்கி தைரியமாக முன்னேற வேண்டும் என்றும், தங்களது வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.அனுபமா பரமேஸ்வரன், 2015ஆம் ஆண்டு வெளியான ‘பிரேமம்’ திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இந்தத் திரைப்படத்தில் அவர் நிவின் பாலியுடன் இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு

"விஸ்வநாத் & சன்ஸ்" மீண்டும் பார்க்கத் தூண்டும் திரைப்படம்: நடிகர் கார்த்தி புகழாரம்!

இயக்குநர் வெங்கி அட்லூரியின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தைப் பார்த்த நடிகர் கார்த்தி, படக்குழுவினருக்குத் தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார். இயக்குநர் வெங்கி அட்லூரியின் படைப்பாற்றலைப் பாராட்டியுள்ள நடிகர் கார்த்தி, ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் அன்பும் புன்னகையும் நிறைந்த ஒரு முழுமையான திரைப்படம் என்று தெரிவித்துள்ளார். இந்த திரைப்படம் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் வகையில் அமைந்துள்ளதாகவும் கூறியுள்ளார். குறித்த திரைப்படத்தில் நடிகர் சூர்யாவின் சிறப்பான நடிப்பைப் புகழ்ந்துள்ள கார்த்தி, அவருடன் இணைந்து நடித்துள்ள நடிகை மமிதா பைஜூ மற்றும் மூத்த நடிகை ராதிகா ஆகியோரின் நடிப்புத் திறனையும் பாராட்டியுள்ளார்.

விபரங்களுக்கு
அந்த உணர்வு வந்தால் அந்த இடத்திலேயே நிற்க மாட்டேன் – திறந்த மனதுடன் பதிலளித்த அனிருத்!

அந்த உணர்வு வந்தால் அந்த இடத்திலேயே நிற்க மாட்டேன் – திறந்த மனதுடன் பதிலளித்த அனிருத்!

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் பாடல்களை வழங்கி முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத், தமிழில் மட்டுமின்றி, இந்தியத் திரையுலகிலும் பிரபலமான இசையமைப்பாளராகத் திகழ்ந்து வருகிறார். தற்போது ஷாருக்கானின் ‘கிங்’, ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’, ‘தர்மன்’, அல்லு அர்ஜுன் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் திரைப்படம், நானியின் ‘தி பாரடைஸ்’, ‘AK 64’ உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட படங்களுக்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.இந்த நிலையில், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் அவரிடம், திரைப்படப் பணிகளில் எப்போதாவது அழுத்தத்தை உணர்ந்திருக்கிறீர்களா எனக் கேள்வி எழுப்பப்பட்டது.இதற்குப் பதிலளித்த அனிருத், “இசையமைப்பதற்காக எனக்கு மிகப்பெரிய வேதனம் வழங்கப்படுகிறது. எனக்கு அழுத்தமாக இருக்கிறது என்று உணர்ந்தால், அந்த இடத்திலேயே இருக்க மாட்டேன். அங்கிருந்து வெளியேறிவிடுவேன்” எனத் தெரிவித்துள்ளார்.மேலும், ஒரு திரைப்படத்தைப் பார்க்க 10 பேர் திரையரங்கிற்கு வந்தால், தனது பாடல்கள் மற்றும் இசையின் மூலம் அந்த எண்ணிக்கையை 13 அல்லது 14 ஆக அதிகரிப்பதே தனது நோக்கம் என்றும் அனிருத் தெரிவித்துள்ளார்.

விபரங்களுக்கு
31 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் இணையும் பிரபு மற்றும் சுகன்யா

31 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் இணையும் பிரபு மற்றும் சுகன்யா

இயக்குநர் பிரியன் ராஜேந்திரன் இயக்கத்தில், நடிகர் ரக்சன் கதாநாயகனாக நடிக்கும் புதிய அதிரடித் திரைப்படத்திற்கு 'மேரி கோல்ட்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் ரக்சனுக்கு ஜோடியாக நடிகை நம்ரிதா நடிக்கிறார். திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய தென் தமிழகப் பின்னணியில், இரு பகுதி மக்களுக்கிடையேயான சுவாரஸ்யமான முரண்பாடுகள் மற்றும் அவர்களின் வாழ்வியலை மையமாகக் கொண்டு வேகமான திரைக்கதையுடன் இந்த திரைப்படம் உருவாக்கப்படுகிறது. அதிரடிக் களமாக இருந்தாலும், உணர்வுபூர்வமான குடும்ப உறவுகளைப் பேசும் கதையாக இது அமையும் எனப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் குறித்த திரைப்படத்தின் மிக முக்கிய சிறப்பம்சமாக, தமிழ் திரையுலகின் பிரபல நட்சத்திர ஜோடியான பிரபு மற்றும் சுகன்யா ஆகிய இருவரும் 31 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் இணைந்து நடிக்கின்றனர். இவர்கள் இதற்கு முன்னர் 'செந்தமிழ் பாட்டு', 'சின்ன மாப்பிள்ளை' மற்றும் 'மிஸ்டர் மெட்ராஸ்' ஆகிய வெற்றிப் படங்களில் இணைந்து நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
டொக்சிக் திரைப்பட விழாவில் மாஸ் என்ட்ரி கொடுத்த நயன்தாரா: சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்த புதிய தோற்றம்!

டொக்சிக் திரைப்பட விழாவில் மாஸ் என்ட்ரி கொடுத்த நயன்தாரா: சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்த புதிய தோற்றம்!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நயன்தாரா, ‘ஜவான்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பின்னர் இந்திய அளவில் கவனம் பெற்ற நடிகையாக வலம் வருகிறார். தற்போது சல்மான் கானுக்கு ஜோடியாக, இயக்குநர் வம்சி இயக்கும் பொலிவுட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே, ‘மூக்குத்தி அம்மன் 2’, ‘Hi’ உள்ளிட்ட தமிழ்த் திரைப்படங்களிலும் அவர் நடித்து வருகிறார்.இந்த நிலையில், இந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘டொக்சிக்’ திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.திரைப்பட விளம்பர நிகழ்வுகளில் பெரிதாகப் பங்கேற்காத நயன்தாரா, இந்த நிகழ்வில் அவர் கலந்துகொண்டது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.இந்த நிகழ்வில் நயன்தாரா அணிந்திருந்த ஆரஞ்சு நிறப் புடவை மற்றும் அணிகலன்களும் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளன.அவர் அணிந்திருந்த புடவையின் விலை இந்திய மதிப்பில் சுமார் 22,900 ரூபாய் என்றும், பிரேஸ்லெட்டின் விலை சுமார் 23 இலட்சம் ரூபாய் என்றும், மோதிரத்தின் விலை சுமார் 6.25 இலட்சம் ரூபாய் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இதன்படி, நயன்தாரா அணிந்திருந்த ஆடை மற்றும் அணிகலன்களின் மொத்த மதிப்பு சுமார் 29 இலட்சத்துக்கும் அதிகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

விபரங்களுக்கு
இரண்டாவது மகனின் பிறந்தநாளுக்கு உருக்கமான பதிவு வெளியிட்ட ஆர்த்தி ரவி!

இரண்டாவது மகனின் பிறந்தநாளுக்கு உருக்கமான பதிவு வெளியிட்ட ஆர்த்தி ரவி!

பிரபல நடிகர் ஜெயம் ரவியின் முன்னாள் மனைவியான ஆர்த்தி ரவி, தனது இரண்டாவது மகனின் பிறந்தநாளை முன்னிட்டு சமூக வலைத்தளப் பக்கத்தில் மிகவும் நெகிழ்ச்சியான மற்றும் உணர்வுபூர்வமான வாழ்த்துப் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். "என்னால் உனக்கு ஒரு பரிசு கொடுக்க முடியும் என்றால், என் கண்களால் உன்னையே நீ பார்க்கும் திறனைத்தான் கொடுப்பேன். அப்படிப் பார்த்தால், நான் சிரிக்கவே மறந்துவிட்டேன் என்று நினைத்த நேரத்திலும் என்னைச் சிரிக்க வைத்து, அந்தச் சிறுவனை நீ பார்ப்பாய். உன் சகோதரனுக்கு ஒரு பாறை போல் உறுதியான துணையாக நிற்பதையும், எல்லா சூழ்நிலைகளிலும் அமைதியாக அவன் அருகில் இருப்பதையும் காண்பாய். இந்த நன்னாளில் எனக்கு இருக்கும் ஒரே ஒரு ஆசை, உனது குழந்தை பருவத்தை நினைக்கும் பொழுது வாழ்க்கையில் இருந்த கஷ்டங்களையும், உனக்கு கிடைக்காமல் போன விஷயங்களையும் நினைவில் வைத்துக்கொள்ளாதே என்பதே. அதற்கு பதிலாக உனக்கு கிடைத்த எல்லாவற்றையும் நினைவில் வைத்துக்கொள்.சிரிப்பு, தூக்கமில்லாமல் கழித்த இரவுகள், சின்னச் சின்னப் பயணங்கள், அர்த்தமே இல்லாமல் செய்த அந்த முட்டாள்தனமான சந்தோஷமான விஷயங்கள் ஆகியவற்றை நினைவுகூர். எப்பொழுதும் உனக்காக இருந்த ஒரு வீடு, இந்த இரண்டு மகன்களுக்காக மலைகளையே நகர்த்தத் தயாராக இருந்த ஓர் அம்மா... தாமதமான பிறந்தநாள் வாழ்த்துகள் என் ஐயா! நீ என் இரண்டாவது இதயம், ஆனால் அன்பில் ஒருபோதும் இரண்டாவது இல்லை. எப்பொழுதும் என் அதிசயம் நீதான்." இவ்வாறு ஆர்த்தி ரவி பதிவிட்டுள்ளார். இந்த உருக்கமான வாழ்த்துப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு, ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வாழ்த்துகளைக் குவித்து வருகிறது.

விபரங்களுக்கு
Hiru TV News | Programmes
/////////////////////////////////////////////// Commented on 2025-09-17 ////////////////////////////////////////////////////